Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
புதன் சுக்கிர சேர்க்கையால் இந்த 6 ராசிக்காரங்களுக்கு அமோகமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.
ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் அவ்வப்போது சில ராசிகளில் ஒன்றிணைந்து பயணிக்கும். தற்போது புதன் மற்றும் சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளனர். ஒரே ராசியில் புதனும், சுக்கிரனும் சேர்ந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில், சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் ஆகியவற்றிற்கு காரணமாக கிரகமாக கூறப்படுகிறது.

ஜோதிடத்தில், புதன் புத்தி, லாஜிக், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் நண்பன் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது. நவகிரகங்களில் சூரியனும், சுக்கிரனும் புதனின் நண்பர்கள். அதே வேளையில் சந்திரனும், செவ்வாயும் புதனின் எதிரிகள். ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இக்காலத்தில் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் நல்ல புகழைப் பெறுவார்கள்.

ரிஷபம்
ரிஷபத்தில் புதன் சுக்கிர சேர்க்கையால், இந்த ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வேலை மற்றும் வியாபாரத்தை தொடங்குவதற்கு இது சாதகமான நேரம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் புதன் சுக்கிர சேர்க்கையால் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சுக்கிர சேர்க்கையால் நற்பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல விருப்பம் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் உருவாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிர சேர்க்கை காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் அதிக லாபத்தின் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். பணியிடத்தில் கௌரவம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் பணியும் பணியிடத்தில் பாராட்டைப் பெறும்.குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிர சேர்க்கை காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் சிறப்பு ஆசி கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கல்வி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி பெற இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்காது. திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
