Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
இந்த இசைக்கருவில ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணுங்க நீங்க உண்மையா எப்படிப்பட்டவங்கனு தெரிஞ்க்கோங்க...!
இசையின் சக்தி என்பது எல்லைகளை உடைத்து, மாறுபட்ட பின்னணி மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் மீறி மக்களை ஒன்றிணைக்கிறது. இசை நமக்குள் அனைத்து விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தக்கூடியது.
மனிதர்களின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று இசையாகும். இது ஒரு வார்த்தைகள் அல்லாத தகவல்தொடர்பு வடிவமாகும், இது மனிதகுலத்தை ஒருவருக்கொருவர் இணைப்பது மட்டுமல்லாமல், ஆன்மாக்களுக்கு இடையில் பேசப்படாத பிணைப்பைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளது.

இசையின் சக்தி என்பது எல்லைகளை உடைத்து, மாறுபட்ட பின்னணி மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் மீறி மக்களை ஒன்றிணைக்கிறது. இசை நமக்குள் அனைத்து விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தக்கூடியது. உங்களின் இசை ரசனை உங்களைப் பற்றி பலவற்றைக் கூறும். இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த இசைக்கருவி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

இசையின் வகைகள்
நம்மில் பெரும்பாலோர் நம் விழித்திருக்கும் வாழ்க்கையின் கிட்டத்தட்ட 3 மணிநேரத்தை இசையைக் கேட்பதற்கு செலவிடுகிறோம், ஆனால் எந்த இசை அல்லது இசைக்கருவிகள் நம்மை மிகவும் கவர்ந்திழுக்கின்றன என்பதை உணரமுடியாது. ஏனெனில் நாம் கேட்கும் பாடல்கள் அனைத்தும் பல இசைக்கருவிகளின் கலவையகத்தான் இருக்கிறது.

இசைக்கருவிகள் என்றால் என்ன?
பியானோ, செலோ, வயலின், புல்லாங்குழல், கிட்டார், டிரம்ஸ், எக்காளம், வீணை போன்ற பல இசைக்கருவிகள் இருக்கலாம், ஆனால் நன்றாக வாசித்தால் ஒரு கருவி நம் மனதையும் மனநிலையையும் மாற்றும் திறன் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு காரணம் கருவிகளின் ஒலி நம் மனதிலும் ஆளுமையிலும் செல்வாக்கு செலுத்துவதால் தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள நான்கு கருவுகளில் உங்களுக்கு பிடித்தது எது என்று முடிவு செய்து உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வயலின்
இந்த கருவியின் ஒலி உங்களை கவர்ந்தால், இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் விரும்புவதை நீங்கள் அறிவீர்கள், அதை அடைவதற்கான திட்டத்தை ஏற்கனவே தீட்டி வைத்திருப்பீர்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக தோற்றமளிப்பீர்கள். எனவே உங்கள் கூட்டாளியின் தேவையை மிகுந்த கவனத்துடனும், உணர்திறனுடனும் நடத்துங்கள், இது உங்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்கும்.

டபுள் பாஸ்
இதன் வலுவான ஒலி சுற்றுப்புறத்தில் ஆதிக்கம் செலுத்துவதைப் போலவே, உங்கள் ஆளுமையும் ஆதிக்கம் செலுத்துகிறது. சவால்கள்தான் உங்களின் பலவீனம், எனவே உங்களின் எல்லைகளைத் தாண்டி செயல்படக்கூடிய சவால்களில் பங்கேற்காமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அடைய கடினமாக இருக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் திடீரென்று உங்கள் ஈகோவுக்கு உணவாகின்றன. பாலியலை பொறுத்தவரையில் நீங்கள் எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பீர்கள். உங்களின் புது முயற்சிகள் உங்கள் துணைக்கு பேரின்பத்தை வழங்கும்.

டிரம்பெட்
இந்த கருவிக்கு நிறைய மூச்சு வேலை தேவைப்படுகிறது, எனவே உங்கள் ஆளுமையும் உற்சாகமானதாகவும், பேசக்கூடியதாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் உங்களைச் சுற்றியுள்ள மக்களின் சூழ்நிலையையும், ஆர்வத்தையும் தூண்டுகிறது. எந்த சூழ்நிலைக்கும் பொதுவான இசைக்கருவியாக இது இருப்பதைப் போல எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். பாலியல் செயல்பாட்டை பொறுத்த வரையில் இவர்கள் தங்கள் துணையின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

புல்லாங்குழல்
இந்த கருவியை வாசிக்க அதிக பொறுமை தேவை, நிஜவாழ்க்கையில் இவர்களின் அணுகுமுறையும் இதேபோல்தான் இருக்கும். சரியான நேரத்தில் பலன்கள் கிடைக்காத போது கோபமும், விரக்தியும் அடைபவர்களுக்கு மத்தியில் இவர்கள் தக்க பலன் கிடைக்கும் வரை உறுதியாக போராடுவார்கள். உங்கள் ஆளுமை உங்களை சுற்றியிருப்பவர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உறவில் நெருக்கம் உங்களை ஈர்க்கிறது, எந்தவொரு உறவையும் உடனடியாக முடித்துக் கொள்ள இவர்கள் நினைக்கமாட்டார்கள். நீண்டகால உறவில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.



Click it and Unblock the Notifications
