For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேத்தன் பகத் புத்தகத்தை திருட்டு பதிப்பு போட்டு டிராஃபிக் சிக்னலில் அவரிடமே விற்ற சிறுவன்...

புகழ்பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் புத்தகத்தையே திருட்டு பதிப்பு போட்டு விற்ற கொடுமை? என்ன நடந்தது என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

|

என் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் எளிமையானவை, மறக்க முடியாதவை, அழகானவை அவைகளை தொகுத்து நான் நிறைய புத்தகங்களை எழுதி இருக்கேன்.
அப்படி என் வாழ்க்கையில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் தான் இது. இது தான் என் வாழ்க்கையில் நடந்த தவறான விஷயம்.

Chetan Bhagat

என்னுடைய புகழ்பெற்ற நூல்களான என் வாழ்வின் 3 தவறுகள், 5 ஸ்டேட்ஸ், 2 ஸ்டேட்ஸ் ஆன்ட் ஹாஃவ் கேர்ள் பிரண்ட் போன்ற என்னுடைய புத்தகங்களை ஒரு நபர் கால்சென்டருக்கு அருகில் திருட்டு பதிப்பு போட்டு விற்றுக் கொண்டு இருந்தார். இதைக் கண்ட நான் அவருடன் உரையாடலில் ஈடுபட்டேன். அவனுக்கு நான் தான் சேத்தன் பகத் என்பது தெரியாது போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உரையாடல்

உரையாடல்

சேத்தன் பகத் : உங்களிடம் சேத்தன் பகத் புத்தகம் இருக்கிறதா?

அந்த பையன் : இருக்கிறது

சேத்தன்:அவருடைய எதாவது நல்ல புத்தகங்கள் இருக்கிறதா?

அந்த பையன் : அவரின் புதிய புத்தகமே என்னிடம் உள்ளது என்றான்

சேத்தன் : புதுசா?

அந்த பையன் புதிய புத்தகத்தை தேடி அவரது கையில் கொடுத்தான்

சேத்தன் :அவர் எப்படி எழுதுவார்? நல்லா இருக்குமா புத்தகம்?

அந்த பையன் :இந்த புத்தகம் சூப்பரா இருக்கும் சாரே

சேத்தன் : இது ஒரிஜினல் காப்பி தானா அல்லது திருட்டு பாதிப்பா?

அந்த பையன் :இது ஆன்லைன்ல இருந்து டவுன்லோடு செய்த காப்பி சார்

சேத்தன் : அப்போ அது திருட்டு பதிப்பல்லவா? என்ற அவர் பிறகு அவர் தான் சேத்தன் பகத் என்பதை அந்த பையனிடம் வெளிப்படுத்தினார்.

MOST READ: உடல்உறுப்பு தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது?

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சரி பரவாயில்லை, விடு. என்னுடைய புத்தகத்தின் நகல் கூட விற்கப்படுகிறதா என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு பேர் அதையும் விரும்பி வாங்கி படிக்கிறார்கள் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி அந்த பையனுக்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தன்னுடைய நன்றியை தெரிவித்தார் சேத்தன் பகத்.

சேத்தனின் ட்விட்டர்

சேத்தன் இந்த சம்பவத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்களும் ஏராளமான லைக்ஸ்களை வழங்கி உள்ளனர். கிட்டத்தட்ட 296k பார்வையாளர்கள் இதை பார்த்துள்ளனர்.

அவரின் குணம்

திருட்டு தப்பு என்றாலும் இந்த மாதிரி தெருவோரம் புத்தகங்கள் விற்கும் ஏழைச் சிறுவனின் நிலையை உணர்ந்து அவர் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுச் சென்றுள்ளார். தங்களுடைய பிழைப்புக்காக நகல் எடுத்து புத்தகங்களை விற்று வருகின்றனர். இது அவர்கள் அன்றாட வாழ்க்கையை வாழ உதவுகிறது. எனவே இதை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை என்றார் சேத்தன் பகத்.

அவரின் கருத்து

அவரின் கருத்து

அவன் திருட்டுப் பதிப்பு விற்றான் என்றும் அவன் மீது எனக்கு கோபம் வரவில்லை. இதை அவன் வாழ வழி இல்லாமல் செய்து வருகிறான். இதை அவனுடைய நிலையில் இருந்து உணர்ந்தாக வேண்டும்.

இந்த ஆண்டு இதே மாதிரி திருட்டு பதிப்பு குறித்து பிரேசிலியன் எழுத்தாளர்களான பவுல் கோலோ, பசோ கோலோ அவர்களின் ட்விட்டும் 18,885 லைக்ஸ்களையும், அவருடைய ரசிகர்களால் 4081 தடவை மறு ட்வீட்டும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் நகல் எடுத்து படிப்பதை தடுக்கவில்லை.

MOST READ: பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...

சேத்தனின் வார்த்தை

சேத்தனின் வார்த்தை

மக்கள் எல்லாரும் இப்படி புத்தகங்கள் விற்பதை திருட்டு பதிப்பு என்கிறார்கள். ஆனால் நான் சொல்வேன் "அந்த சிறுவன் நேர்மையாக பணம் சம்பாதிக்க செய்யும் எளிய வழி" என்று சேத்தன் அழகான வார்த்தைகளின் அதை தெரிவித்து உள்ளார்.

தன்னுடைய புத்தகத்தையே திருட்டு பதிப்பு போட்டு விற்றும் அதை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக மற்றவரின் நிலையை புரிந்து நடந்து கொண்டவர் சேத்தன் பகத். அவருடைய எழுத்துத் திறமையால் இன்றளவும் புத்தக ரசிகர்களின் நடுவில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chetan Bhagat Gets Pirated Version Of His Own Book From Street Hawker: Viral Video

Few incidents in our lives are so simple and yet so beautiful that they leave a mark for a lifetime, and this story is one of them. Renowned writer Chetan Bhagat, recently experienced one of the most silly and humble moments of his life.
Desktop Bottom Promotion