Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்கள் ஒருவருக்கு வாழும் போதே நரகத்தை கொடுப்பதுடன் வாழும் ஆசையையும் குறைக்குமாம்!
பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்று அவர் சிறந்த வாழ்க்கை பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். இன்று அவர் சிறந்த வாழ்க்கை பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களிலும் சாணக்கியர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். இன்றும் மக்கள் அவருடைய கருத்துக்கள் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிகரமானதாக உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியர் சொன்ன விஷயங்கள் இன்றைய காலத்திலும் உண்மை என்பதை நிரூபிக்கின்றன. ஆச்சாரியர் சாணக்கியரின் நீதி சாஸ்திரம் என்ற புத்தகம் மக்களிடையே மிகவும் விரும்பப்படுகிறது, இது சாணக்கிய நீதி என்றும் பலரால் அழைக்கப்படுகிறது. சாணக்கிய நீதியில் சாணக்கியர் ஒருவரை உள்ளிருந்து எரிக்கும் சில விஷயங்களை பற்றி கூறியுள்ளார். இந்த சூழ்நிலைகளுக்குப் பின், ஒரு நபரின் மன உறுதி உடைந்து, அவர் தன்னை பலவீனமாக நினைக்கத் தொடங்குகிறார். இந்த சூழ்நிலைகள் ஒருவருக்கு வாழும் ஆசையையே குறைக்கிறது.

மனைவி பிரிந்து செல்வது
கணவனும் மனைவியும் ஒரு தேரின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள், இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவனை விட்டு மனைவி அடிக்கடி பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. மனைவி விட்டு சென்ற கணவர் உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருப்பார். வாழ்க்கையைப் பற்றிய அவரது அணுகுமுறை முற்றிலும் அலட்சியமாகிறது.

குடும்பத்தினரால் அவமதிக்கப்படுவது
இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்தக்காரர்களால் திரும்பத் திரும்ப அவமானப்படுத்தப்படுவார்கள், திரும்பத் திரும்ப அவமானத்தை தாங்கிக் கொண்டு வாழ்வது மிகவும் கடினம். அத்தகைய நபர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வாழும் இந்த வாழ்க்கை ஒரு பாரமாகத் தெரிகிறது.

கடன்
ஒருவருக்கு கடன் எப்போதும் சுமக்கும் சுமையைப் போன்றது. இந்தச் சுமைக்குள் புதைந்திருப்பவர் சுதந்திரமாக சுவாசிக்கவோ, நிம்மதியாக வாழ்க்கையை வாழவோ முடியாது. வாழும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு வலி நிறைந்ததாக இருக்கும்.

மோசமான முதலாளிக்கு கீழ் வேலை செய்வது
வேலை செய்வது ஒரு நல்ல விஷயம், ஆனால் ஒரு நபர் ஒருவரின் அழுத்தத்தின் கீழ் ஒரு மோசமான முதலாளிக்கு கீழ் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்த நபர் மிகவும் பாதிக்கப்படுகிறார். கோபத்தின் நெருப்பு அவர்களுக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும், இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிறார்கள்.

வறுமை
சாணக்கியர் வறுமையை ஒரு சாபமாகக் கருதினார். வறுமை ஒரு மனிதனிடமிருந்து நிறைய விஷயங்களைப் பறிக்கிறது. இதன் காரணமாக ஒரு நபர் எல்லாவற்றையும் பெற போராட வேண்டியுள்ளது. ஏழையின் உணர்வுகளை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

பலவீனம்
பலவீனமானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அங்கு வீணாவது நேரம் மட்டும்தான், எதையும் சாதிக்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் அனைவரும் தங்களை சிறந்தவர்கள் என்று நிரூபிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications