Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சாணக்கிய நீதி படி இந்த குணம் உள்ள குழந்தைகள் அவங்க குடும்பத்திற்கு அவமானத்தை தேடித்தருவார்களாம்...!
மணம் நிறைந்த மலர்கள் நிறைந்த மரம் காடு முழுவதும் நறுமணத்தை பரப்புவது போல, ஒரு வம்சத்தின் பெருமை ஒரு மகனால் பெருகும் என்று சாணக்கியர் கூறினார்.
சாணக்கியர் தனது சாணக்கியநீதியில் குடும்பத்தைப் பற்றிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். மணம் நிறைந்த மலர்கள் நிறைந்த மரம் காடு முழுவதும் நறுமணத்தை பரப்புவது போல, ஒரு வம்சத்தின் பெருமை ஒரு மகனால் பெருகும் என்று சாணக்கியர் கூறினார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருப்பது முக்கியமல்ல. அவர்கள் அதிகமாக இருப்பதால் குடும்பத்தின் கௌரவம் உயராது. குடும்ப மரியாதையை அதிகரிக்க ஒரு நல்லொழுக்கமுள்ள மகன் போதும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

குழந்தை வளர்ப்பு பற்றி சாணக்கிய நீதியில் பல விஷயங்களை சாணக்கியர் கூறியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும், அவர்களைக் கவனித்து, அவர்கள் தவறான வழியில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியநீதியில் குழந்தைகளை அழிக்கும் சில நடத்தைகள் பற்றியும், அவர்களை சரியான பாதைக்கு வழிநடத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

கெட்ட குணம் குடும்பத்தை அழிக்கும்
திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் ஒருவரைக்கூட நாம் நல்லவர்களாக நினைத்து பார்க்க முடியாது. அத்தகைய நூறு மகன்கள் குடும்பத்திற்கு ஒருபோதும் நன்மை செய்ய மாட்டார்கள். காய்ந்த மரம் தீப்பிடித்து, காடு முழுவதும் சாம்பலாவதைப் போல, கெட்ட குணமுள்ள மகன் முழு குடும்பத்தையும் அழிக்கிறான் என்று சாணக்கியர் கூறுகிறார். குடும்பத்தின் நற்பெயர், மானம், மரியாதையை அவர்கள் அழித்து விடுவார்கள்.

தவறான தொடர்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்
தவறான தொடர்புகளிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கவும். தவறான தொடர்புடன் வளரும் குழந்தை குடும்பத்தின் கௌரவத்தை அழித்துவிடும் என்கிறார் சாணக்கியர். எனவே உங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே நல்ல சூழலில் வளர்த்து, கெட்ட சகவாசங்களில் இருந்து விலக்கி வைக்கவும்.

நல்ல கல்வி
குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க பெற்றோர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்காத பெற்றோர்கள் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு எதிரிகளாக மாறுவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அறிவையும் கல்வியையும் வழங்குவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கல்வியால் மட்டுமே வாழ்க்கையை எளிதாக்க முடியும். குழந்தைகளுக்கு அறிவையும் கல்வியையும் கற்பிக்க பெற்றோர்கள் செய்யும் கடின உழைப்பு எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை அளிக்கும்.

நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்
சாணக்கிய நீதியின் இரண்டாம் அத்தியாயத்தின் 10வது ஸ்லோகத்தில் மகன்களையும் மகள்களையும் நல்ல குணங்களுடன் வளர்க்க வேண்டும் என்று சாணக்கியர் எழுதியுள்ளார். நல்ல செயல்களைச் செய்ய அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல குணங்கள் மற்றும் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு மட்டுமே குடும்பத்தில் மரியாதை கிடைக்கும்.

அதிக செல்லம் கொடுக்காதீர்கள்
அதிகப்படியான செல்லம் குழந்தைகளுக்கு சாபமாக இருக்கும் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால், அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் கெட்ட பழக்கங்களுக்கு விரைவில் ஆளாகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைக,ளுக்கு அதிக செல்லம் செய்யாமல் அவர்களின் நியாயமான விருப்பங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும்.

கண்டிப்பு அவசியம்
சாணக்கிய நீதியின் பன்னிரண்டாவது சுலோகத்தில், அதிகப்படியான பாசத்தால், மகன்களுக்குப் பல குணக் குறைபாடுகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம், நல்ல குணங்கள் அவர்களிடம் வளரும். எனவே மகன்களை எப்போதும் செல்லமாக வளர்க்கக்கூடாது, அவ்வப்போதும் கண்டிப்பும் வேண்டும்.



Click it and Unblock the Notifications