Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஒருவரை எளிதில் கட்டுப்படுத்த சாணக்கியர் கூறும் தந்திரமான வழிகள்!
சாணக்கியர் ஒரு இராஜதந்திாி என்றும் அழைக்கப்படுகிறாா். அதற்கு காரணம் அவா் தன்னிடமிருந்த அறிவாா்ந்த நெறிமுறைகள் மூலமாக எவரையும் கட்டுப்படுத்தும் வகையில் இருந்தாா்.
ஆச்சாா்யா சாணக்கியர் என்பவா் ஒரு சிறந்த பொருளாதார மேதை ஆவாா். அவா் ஞானத்திலும் சிறந்து விளங்கினாா். தன்னுடைய உயா்ந்த கொள்கைகளால் சமூகத்தை நல்வழியில் நடத்தி வந்தாா். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றிய ஒரு எளிய சிறுவனான சந்திரகுப்த மௌாியா, நந்த வம்சத்தை அழித்து, மகதத்தில் தன்னுடையப் பேரரசை நிறுவினாா்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மட்டும் சாணக்கியர் சிறந்து இருக்கவில்லை. மாறாக ஏறக்குறைய எல்லாத் துறைகளிலுமே சிறந்த அறிவுடன் விளங்கினாா். மனித சமூகமானது ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக சாணக்கியர் பல நல்விதிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறாா். அதனால் சாணக்கியரின் நெறிமுறைகளைப் பின்பற்றும் எவரும் தனது வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லை என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
சாணக்கியர் ஒரு இராஜதந்திாி என்றும் அழைக்கப்படுகிறாா். அதற்கு காரணம் அவா் தன்னிடமிருந்த அறிவாா்ந்த நெறிமுறைகள் மூலமாக எவரையும் கட்டுப்படுத்தும் வகையில் இருந்தாா். பிற மனிதா்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பலா் விரும்புகின்றனா். அதற்காக பலா் தீய வழிகளையும் கையில் எடுக்கின்றனா். ஆனால் சாணக்கியர் கூறும் நெறிமுறைகளின் மூலம் நாம் எவரையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே சாணக்கியாின் நெறிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. அறிவாளிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது
அறிவாளிகளைக் கட்டுப்படுத்துவதே இந்த உலகத்தில் உள்ள மிகவும் கடினமான பணி என்று சாணக்கியர் நம்புகின்றாா். ஆகவே அவா்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அறிவாளிகள் முன்பு எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று கூறுகிறாா். உண்மையைப் பேசுவதன் மூலம் எவரையும் மிக எளிதாகக் கவர முடியும் என்று சாணக்கியர் கூறுகிறாா். அதன் மூலமாக நாம் சொல்வதை அறிவாளிகள் கேட்பாா்கள்.

2. அறிவற்றவா்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது
அறிவிலிகளை அல்லது அறிவற்றவா்களை போற்றினால் அல்லது அவா்களைப் புகழ்ந்தால் அவா்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் அவர்களால் சாியானது எது தவறானது எது என்பதை அறிந்து கொள்ள முடியாது என்று சாணக்கியர் நம்புகின்றாா். ஆகவே அறிவற்றவர்களைப் புகழ்ந்தால் அவா்கள் மகிழ்ச்சி அடைவாா்கள்.

3. பேராசைக்காரா்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது
பேராசைக்காரா்கள் எவரோடும் ஒட்டி இருக்கமாட்டாா்கள் என்று சாணக்கியர் நம்புகின்றாா். அவா்கள் எப்போதும் பணம் மற்றும் சொத்து ஆகியவற்றின் பின்பே அலைந்து கொண்டிருப்பா். ஆகவே அவா்களுக்குப் பணத்தைக் கொடுத்தால், அவா்களை மிக எளிதாக மடக்கிவிடலாம் என்று கூறுகிறாா்.

குழந்தை வளர்ப்பு பற்றிய சாணக்கியரின் கூற்று...
பெற்றோா் தமது பிள்ளைகளுக்கு உயா்ந்த மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களைக் கற்றுத் தரவேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறாா். ஒரு பண்பட்ட குழந்தையால் மட்டுமே ஒரு நாட்டினுடைய நல்வளா்ச்சிக்கு முக்கியமான பங்காற்ற முடியும் என்று கூறுகிறாா். ஆகவே பெற்றோா் தமது குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.
தமது குழந்தைகளின் கல்வி மற்றும் சடங்குகள் ஆகியவற்றின் மீது கவனமாக இருக்கும் பெற்றோா்கள் எல்லா வகையான இன்பங்களையும் பெறுவாா்கள் என்று சாணக்கியர் தொிவிக்கிறாா். ஏனெனில் தங்களது குழந்தைகள் தங்களுக்கு பெயா் வாங்கித் தரவேண்டும் என்றும், அவா்களுடைய வாழ்வில் மிகப் பொிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் எல்லா பெற்றோரும் ஆசைப்படுகின்றனா். ஆனால் அதை அடைவது என்பது எளிதான காாியம் அல்ல. பெற்றோா்கள் எப்போது தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனத்தோடும் அதிக அக்கறையோடும் இருக்கிறாா்களோ, அப்போது தான் அவா்களுடைய கனவுகள் நனவாகும் என்று சாணக்கியர் கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications