Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த ஒரு ரூபா பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களோட பல பிரச்சனைகள் நீங்கும் தெரியுமா?
கற்பூரம் ஜோதிட சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் வாழ்வில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைப் போக்க கற்பூரம் உதவுகிறது.
கற்பூரம் ஒரு நல்ல வாசனை நிறைந்த பொருள். இந்து மதத்தில் கற்பூரம் ஒரு புனிதமான பொருள். இது வழிபாடுகளின் போது ஆரத்தி காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது. கற்பூரமானது தீய சக்திகளை விரட்டுவதாக கூறப்படுகிறது. கற்பூரத்தை ஏற்றி கடவுளை வழிபடும் போது அவரது பிரச்சனைகள் கற்பூரம் கரைவது போன்று கரையும் என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட கற்பூரம் ஜோதிட சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் வாழ்வில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைப் போக்க கற்பூரம் உதவுகிறது. கீழே இந்த ஒரு ரூபாய் கற்பூரம் எந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து ஒருவரை விடுவிக்க உதவுகிறது என்பதைக் காண்போம்.

பணப்பிரச்சனை நீங்க...
உங்களுக்கு கால சர்ப்ப தோஷம் அல்லது ராகு-கேது தோஷம் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையில் கற்பூரத்தை எப்போதும் வைத்து கட்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், தோஷங்கள் நீங்குவதோடு, பண பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கற்பூரம் மற்றும் நெய்
பித்ரு தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் போன்றவை நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தவறான நிலையால் ஏற்படுகிறது. இந்த தோஷங்களை சமாளிக்க கற்பூரம் மற்றும் நெய்யை ஒன்றாக சேர்த்து தினமும் எரிக்க வேண்டும்.

சரும பிரச்சனைகள் குறைய...
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அல்லது நீங்கள் சரும பிரச்சனைகளை அதிகம் சந்தித்தால், அதிலிருந்து கற்பூரம் விடுபட உதவும். அதற்கு கற்பூரத்தை வெள்ளைத் துணியில் வைத்து கட்டி, பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து பாருங்கள் ஒரு நல்ல பலனைப் பெறுவதை உணர்வீர்கள்.

எதிர்மறை ஆற்றல் நீங்க...
தினமும் வீட்டில் கற்பூரத்தை எரிப்பதனால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாஸ்து தோஷம் குறைய
உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதா? வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் பிரச்சனைகள், குறிப்பாக பணப்பிரச்சனைகள் அதிகம் இருக்கும். எனவே வாஸ்து தோஷத்தைக் குறைக்க வீட்டின் மூலைப் பகுதியில் கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டும். இதனால் வீட்டின் வாஸ்து தோஷம் குறையும்.

கெட்ட கனவுகள்
இரவு தூங்கும் போது பயங்கரமான கனவுகள் வருகிறதா? அப்படியானால் இரவு படுக்கையறையில் ஒரு கற்பூரத்தை எரியுங்கள். இது அறையில் எதிர்மறை ஆற்றலை நீக்கும். மறுபுறம், கற்பூரத்தை ஒரு வெள்ளை துணியில் கட்டி பாக்கெட்டில் வைத்திருப்பது வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications