Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தனுசு ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம்: டிசம்பர் 16 முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
புதன் சூரியன் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகும். இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகுந்த நற்பலனையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள்.
வேத ஜோதிடத்தின் படி, கிரக பெயர்ச்சிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதோடு, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சில யோகங்கள் உருவாகும். அந்த யோகங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. யோகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த யோகமாக கூறப்படுவது புதாத்திய யோகம் தான். இந்த யோகமானது சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையினால் உருவாகும். இது ஒரு மங்களகரமான யோகமாகும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் இந்த மங்களகரமான புதாதித்ய யோகம் உருவாகவுள்ளது.

2022 டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் தனுசு ராசிக்கு சென்றார். அதன் பின் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். தனுசு ராசியில் சூரியன் நுழைந்ததும், அந்த ராசியில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகும். இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகுந்த நற்பலனையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் நற்பலனையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டத்தின் உதவியால் பணியிடத்தில் நல்ல வெற்றியை காண்பார்கள். இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றமும் மரியாதையும் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பாதியில் நின்று போன வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் கும்ப ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீடு செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் இக்காலத்தில் முயற்சித்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வேலை கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதாத்திய யோகம் உருவாகவுள்ளது. இதனால் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

சூரியன் மற்றும் புதன்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த இரண்டு கிரகங்களுமே மனித வாழ்க்கையில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் புதன் ஒருவருக்கு ஞானத்தையும், புத்திசாலித்தனத்தையும் வழங்குபவர். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் சிறப்பாக கையாள்வதோடு, நல்ல பேச்சாற்றல் கொண்டிருப்பார். அதேப்போல் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல புகழையும், மரியாதையையும் பெற்றிருப்பார்.

புதாதித்ய யோகம் எம்மாதிரியான பலனைத் தரும்?
சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம் தான் புதாதித்ய யோகம். இந்த யோகம் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். புதாதித்ய யோகத்தின் மூலம் ஒருவர் செழிப்பு, மேன்மை மற்றும் கௌரவம் ஆகியவற்றை பெறுவார். முக்கியமாக இந்த யோகத்தில் பிறந்த அனைவருமே பணக்காரர்களாக ஆவார்கள் என்பது நம்பிக்கை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications