Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரியனும், புதனும் விருச்சிக ராசியில் இணைந்திருப்பதால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் நவம்பர் 21 ஆம் தேதியில் இருந்து இணைந்துள்ளார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும், புதனும் ஒரே ராசியில் சந்திக்கும் போது புதன் ஆதித்ய யோகம் உண்டாகும்.
2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். அதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு வந்துள்ளார். செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் நவம்பர் 21 ஆம் தேதியில் இருந்து இணைந்துள்ளார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும், புதனும் ஒரே ராசியில் சந்திக்கும் போது புதன் ஆதித்ய யோகம் உண்டாகும்.

புதன் ஆதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் விளைவாக, ஒருவர் தனது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் வேலை போன்றவற்றில் வெற்றியைப் பெற முடியும். இப்போது நவம்பர் 21 முதல் விருச்சிக ராசியில் உருவாகும் புதன் ஆதித்ய யோகத்தால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
சூரியனும், புதனும் மேஷ ராசியின் 8 ஆம் வீட்டில் இணைந்திருப்பதால், அறிவியல், ஜோதிடம் போன்ற விஷயங்களில் ஆர்வம் கூடும். அதே வேளையில், இந்த துறையில் அல்லது இந்த பாடங்களைப் படிப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியனும், புதனும் சேர்ந்திருப்பதால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்கள் தொழில் நல்ல பாதையில் செல்லும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைந்துள்ளனர். இந்த சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசியின் 5 ஆம் வீட்டில் சூரியனும், புதனும் சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை கல்வி துறையில் இருப்பவர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைந்திருப்பது, இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். வாகனம் வாங்கும் எண்ணம் இக்காலத்தில் நிறைவேறும். தாயுடனான உறவு இனிமையாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியனும், புதனும் இணைந்தள்ளனர். இதனால் இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்திலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதனும் சூரியனும் சேர்ந்துள்ளனர். இதனால் பேச்சு மேம்படும். இக்காலத்தில் வேலைக்காக நேர்காணல் செல்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த காலத்தில் உங்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சூரியனும், புதனும் இணைந்துள்ளனர். இதனால் மன ரீதியாக சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவீர்கள். இது உங்களின் தேவையற்ற கவலைகளைப் போக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆம் வீட்டில் புதனும் சூரியனும் இணைவதால், இந்த ராசிக்காரர்கள் ஆன்மீகத் துறையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு காணும் தனுசு ராசிக்காரர்களின் ஆசைகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆம் வீட்டில் சூரியனும் புதனும் இணைந்திருப்பதால், பல வழிகளில் பணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் புதனும் சூரியனும் சேர்ந்திருப்பதால், இந்த காலத்தில் பல வேலைச் சிக்கல்களைச் சமாளிக்க முடியும். இந்தக் காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் தொழிலை விரிவுபடுத்தும் அதே வேளையில் சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆம் வீட்டில் புதனும் சூரியனும் இணைந்திருப்பதால், இந்த காலத்தில் மத பணிகளில் தீவிரமாக பங்கேற்பீர்கள். உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலர் வேலை காரணமாக பயணம் செய்யலாம், ஆனால் இந்த பயணங்களால் அவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications