Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
கும்ப ராசியில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
Budhaditya Rajyoga In Aquarius On February 2023: நவகிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நிகழும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். மேலும் இது சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம். இந்த யோகம் உருவாகும் போது, சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பு கிடைக்கும்.

தற்போது நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், இக்காலத்தில் அது நிறைவேற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் அற்புதமான காலமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு, இக்காலத்தில் ஒரு நல்ல பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அற்புதமான பலன்களை வழங்கப் போகிறது. குறிப்பாக இக்காலத்தில் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். அதோடு அதிர்ஷ்டத்தால் நல்ல பண வரவும் கிடைக்கும். இதனால் இக்காலகட்டத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். அதே வேளையில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளை இக்காலத்தில் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications