Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள்
ஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!
திரைப்படங்களைப் போன்றே பல நடிகைகள் தங்களது நிஜ வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். அதில் சில நடிகைகளது காதல் திருமணமான ஆண்களின் மீது ஏற்பட்டுள்ளது தெரியுமா?
வாழ்க்கையைப் போலவே, காதலும் கணிக்க முடியாதது. காதல் யாருக்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், யார் மீது வேண்டுமானாலும் ஏற்படலாம். திரையுலகில் நடிகர், நடிகைகள் பல ரொமான்டிக் திரைப்படங்களை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுள் சிலரது நிஜ வாழ்க்கையைப் பார்த்தால், அதுவும் முழுவதுமாக ரொமான்ஸ் மற்றும் நாடகம் நிரம்பியதாகவே இருக்கும்.

திரைப்படங்களைப் போன்றே பல நடிகைகள் தங்களது நிஜ வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். அதில் சில நடிகைகளது காதல் திருமணமான ஆண்களின் மீது ஏற்பட்டுள்ளது தெரியுமா? இந்த கட்டுரையில் ஏற்கனவே திருமணமான ஆண்கள் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகைகள் யார் யார் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேமா மாலினி
நடிகை ஹேமா மாலினி பஞ்சாப்பில் பிரகாஷ் கவுர் என்பவரை மணந்திருந்த தர்மேந்திரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தர்மேந்திரா ஹோமா மீது அதீத காதல் கொண்டிருந்ததால், இரண்டாவது திருமணத்திற்கான அனுமதியைப் பெறுவதற்காக இஸ்லாத்திற்கு மாறினார்.

ரவீனா டாண்டன்
ரவீனா, ஏற்கனவே நடாஷா ஷிப்பி என்பவரை மணம் புரிந்திருந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர், அனில் தடானியின் மீது காதலில் விழுந்தார். அனில் தடானி மற்றும் நடாஷாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக இல்லை. எனவே தடானி நடாஷாவை விவாகத்து செய்து விட்டு, 2003-இல் ரவீனாவை திருமணம் செய்து கொண்டார்.

கரீஷ்மா கபூர்
அபிஷேக் பச்சனுடன் காதல் முறிவு ஏற்பட்ட பின், கரீஷ்மா கபூர் ஏற்கனவே நந்திதா மெஹ்தானியை மணந்த சுஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 2003 இல் திருமணம் செய்து கொண்டு, 2016 இல் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீரா மற்றும் கியான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்த குழந்தைகள் கரீஷ்மாவுடன் உள்ளனர்.

அம்ரிதா அரோரா
விவாகரத்து பெற்ற ஷகீல் லடக்கை அமிர்தா அரோரா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அசான் லடக் மற்றும் ராயன் லடக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை 2009-இல் திருமணம் செய்து கொண்டார். ராஜ் குந்த்ரா கவிதா என்பவரை ஏற்கனவே திருமணம் செய்தவர். இவர் ஷில்பாவை திருமணம் செய்வதற்காக முதல் மனைவியான கவிதாவை விவாகரத்து செய்தார். ஷில்பா மற்றும் ராஜ் குந்த்ராவிற்கு வியான் என்னும் மகன் உள்ளான்.

மஹிமா சவுத்ரி
மஹிமா சவுத்ரி ஏற்கனவே இரண்டு மகன்களைக் கொண்ட பாபி முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராணி முகர்ஜி
நடிகை ராணி முகர்ஜி, ஆதித்யா சோப்ராவிற்கு இரண்டாவது மனைவியாவார். ஆதித்யா முதலில் பாயல் கன்னா என்பவரை திருமணம் செய்திருந்தார். ராணி மற்றும் ஆதித்யாவிற்கு அதிரா என்னும் மகள் இருக்கிறாள்.

லாரா தத்தா
லாரா தத்தா இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரரான மகேஷ் பூபதியை 2011-இல் திருமணம் செய்து கொண்டார். மகேஷ் பூபதி ஏற்கனவே ஸ்வேதா ஜெய்சங்கரை திருமணம் செய்தவராவார். லாரா மற்றும் மகேஷ் அவர்களுக்கு சாய்ரா என்னும் மகள் இருக்கிறாள்.

பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு கரன் சிங் க்ரோவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கரன் சிங் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர்.

வித்யா பாலன்
பிரபல நடிகை வித்யா பாலன் தயாரிப்பாளரான சித்தார்த் ராய் கபூரை 2012-இல் திருமணம் செய்து கொண்டார். சித்தார்த் ஏற்கனவே திருமணமானவர் மட்டுமின்றி, வித்யா பாலனை மணம் புரிவதற்கு இரண்டு முறை விவாகரத்து பெற்றவரும் கூட.

ஜூஹி சாவ்லா
ஜூஹி சாவ்லா, சுஜாதா பிர்லா என்பவரை மணம் புரிந்திருந்த ஜே மெஹ்தாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். சுஜாதா விமான விபத்தினால் 1990-இல் இறந்துவிட்டார். அதன் பின் 1995-இல் ஜே ஜூஹியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஜான்வி மற்றும் அர்ஜுன் மெஹ்தா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் 2012-இல் சாய்ப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். சாய்ப் ஏற்கனவே அம்ரிதா சிங்கை மணம் புரிந்தவராவார். அம்ரிதாவுடன் இவருக்கு இப்ராஹிம் மற்றும் சாரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கரீனாவுடன் இவருக்கு தைமுர் அலி கான் என்னும் மகன் உள்ளான்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி, மோனா கபூரை திருமணம் செய்திருந்த போனி கபூர் மீது காதலில் விழுந்தார். போனி கபூர் 1996-இல் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications