Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
விமானத்துல போய்ட்டு இருக்கும்போது 6 மாத குழந்தை இதயத்துடிப்பு நின்று மரணம்...
பாட்னா - டெல்லி செல்லும் விமானத்தில் பறந்த போது குழந்தையின் இதயம் நின்றுபோய் இறந்து போனது. அதுபற்றிய தகவல்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் ஒருவருடைய இழப்பு என்பது அந்த குடும்பத்தையே ஒருவழியாக ஆட்டி அசைத்துப் பார்த்துவிடும். அது வயதானவர்களாக இருந்தாலும் அப்படித்தான். அவர்களுடைய இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று தான்.

அப்படி இருக்கிற பொழுது, ஒரு தாய்க்கு தான் பெற்றெடுத்த குழந்தையை இழப்பது என்பது எவ்வளவு பெரிய வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும். அதுவும் எதிர்பாராமல் திடீரென குழந்தையின் உயிர் பிரிகிற பொழுது, அந்த தாய் தன்னுடைய உயிரைவிட அதிக வலியை அனுபவிப்பார். அப்படி ஒரு சம்பவம் தான் வியாழக்கிழமை நடந்திருக்கிறது. அந்த கொடுமையான சம்பவம் பற்றித்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

விமானப் பயணம்
தாயும் தந்தையும் தன்னுடைய ஆறு குழந்தையுடன் விமானத்தில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்கிறார்கள். அவர்களுடைய சொந்த ஊர் பிகாரில் பெங்குசரய் என்னும் இடம். பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இவர்கள் சென்றிருக்கிறார்கள்.

என்ன ஆச்சு?
ஸ்பைஷ்ஜெட் விமானத்தில் பயணம் செய்த அவர்கள் போர்டிங் ஏரியாவில் இருந்து கிளம்பி விமானத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் திடீரென குழந்தைக்கு மருத்துவ அவசர சிகிச்சை தேவைப்படவே, விமானத்தில் இருக்கும் மருத்துவரை அழைத்து பரிசோதிக்கப்பட்டது.

விமான தரையிறங்க
அவசர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவை இருந்ததால் விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. கட்டுப்பாட்டு அறையிலும் இருந்து விமானத்தை தரையிறக்க அனுமதியும் கிடைத்து விமானம் தரையிறக்கப்பட்டது.

குழந்தை இறப்பு
விமானம் தரையிறக்கப்பட்டதும் அவசரமாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மருத்துவர் சோதித்து பார்த்த போது குழந்தை இறந்து போயிருந்தது.

அப்புறம் என்னாச்சு?
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது எதற்காக இந்த திடீர் டெல்லி பயணம் என்ற சந்தேகம் வந்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் தெரிய வந்தது குழந்தைக்கு இதயத்தில் கோளாறு என்பதாலும் இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதாலும் சிகிச்சைக்காக ஆல் இந்தியா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ்க்கு செல்வதற்காகத் தான் இவர்கள் டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

மறைத்தல்
குழந்தைக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கிறது என்று எந்தவித முன் தகவலும் இவர்கள் பயணங்களுக்கு முன்பு விமான நிலைய அலுவலகத்தில் தெரிவிக்காமல் மறைத்து வைத்து சென்றிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications