Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
2023-ல் நடக்கப் போவதாக கூறியுள்ள பாபா வாங்காவின் சில கதிகலங்க வைக்கும் கணிப்புகள்!
2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் நடக்கப்போவதை பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பல தீர்க்கதரசிகள் இருந்துள்ளார்கள். அவர்களுள் பலரது கணிப்புகள் ஆரம்பத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும், இறுதியில் அந்த கணிப்புகள் நிறைவேறி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட பிரபலமான ஓர் தீர்க்கத்தரசி தான் பாபா வாங்கா. இவர் பல்கேரியாவைச் சேர்ந்தவர். இவருக்கு பார்வை தெரியாவிட்டாலும், இவரது பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. அதுவும் இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது. அதில் 2022 ஆம் ஆண்டில் கூட இவரது 6 கணிப்புகளுள் 2 நிறைவேறியுள்ளன.

தற்போது நாம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் நடக்கப்போவதை பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். இப்போது 2023 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார் என்பதைக் காண்போம்.

பாபா வாங்கா என்பவர் யார்?
பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்தார். இவரது உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. இவர் தனது 12 வயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் சக்தியை பெற்றவர். இரண்டாம் உலகப் போர் குறித்த இவரது கணிப்புகளால் உலகில் மிகவும் பிரபலமானார். மேலும் இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின. பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் காலமானார். இவர் 5079 ஆம் ஆண்டு வரை கணித்துள்ளார். இப்போது 2023 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் சில கணிப்புகளைக் காண்போம்.

சூரிய சுனாமி
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை கண்டிராத அளவில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும். சூரிய சுனாமி என்பது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் வெடிப்புகள் ஆகும். இவை பில்லியன் கணக்கான அணுகுண்டுகளைப் போல சக்தி வாய்ந்தவை. இது பூமியின் காந்த கவசத்தைப் பாதிக்கும். இதனால் பூமியின் வேகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாற்றம் பேரழிவை உண்டாக்கும்.

பயோ ஆயுதங்கள்
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் ஒரு பெரிய நாடு மக்கள் மீது பயோ ஆயுத ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இந்த சோதனையால் நூறாயிரக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இதை திறம்பட செய்தாலும், சில நாடுகள் ரகசியமாக பயோ ஆயுதங்களை இயக்கும் என்று தனது குறிப்புகளில் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.

ஏலியன் படையெடுப்பு
பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். பூமியை ஏலியன்கள் ஆக்கிரமித்து வருவார்கள். அப்போது லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்றும் கணித்து குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் அணு வெடிப்பு
2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் அணு வெடிப்பு ஏற்படலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். அணுமின் நிலையத்தில் ஏற்படும் வெடிப்பால் மேகங்களில் நச்சுக்கள் கலந்து ஆசியா கண்டம் நச்சு மேகங்களால் மூழ்கிவிடக்கூடும். இதனால் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் நோய்கள் ஏற்படக்கூடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

ஆய்வகத்தில் மனிதர்களின் உருவாக்கம்
2023 ஆம் ஆண்டில் இருந்து இயற்கையான பிறப்புகள் தடைசெய்யப்பட்டு, மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இப்படி ஆய்வகங்களில் பிறக்கும் மனிதர்களின் குணாதியம் மற்றும் தோலின் நிறம் போன்றவற்றை பெற்றோர்களே தீர்மானிக்க முடியும். இது நிச்சயம் பாபா வாங்காவின் மிகவும் திகிலூட்டும் கணிப்புக்களில் ஒன்றாகும்.

பூமியின் சுற்றுப்பாதை மாறும்
பாபா வாங்காவின் 2023 கணிப்புகளில் ஒன்று, பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படும் என்பதாகும். தற்போது பூமி ஒரு நல்ல சமநிலையில் உள்ளது. சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது காலநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2023-ல் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். அதிலும் பூமி சூரியனுக்கு அருகில் நகர்ந்தால், அதிக வெப்ப கதிர்வீச்சை சந்திக்க நேரிடும். மறுபுறம், மேலும் பூமி நகர்ந்தால், உலகம் பனியுகத்திற்குள் மூழ்கி, இருள் பல மணிநேரம் நீடிக்கும்.
2023 ஆம் ஆண்டில் பாபா வாங்காவின் இந்த கணிப்புகளில் எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications











