உலகின் அழிவைப் பற்றிய பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பாபா வாங்கா உலகின் முடிவைப் பற்றியும் கணித்துள்ளார். பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, உலகமானது 5079 ஆம் ஆண்டில் அழியும்.

உலகில் எதிர்காலத்தைப் பற்றி கணித்து கூறும் பலர் உள்ளனர். அதில் 111 ஆண்டுகளுக்கு முன் பல்கேரியாவில் பிறந்த பாபா வாங்காவும் ஒருவர். இவர் அவரது 12 வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனால் இவருக்கு பார்வை இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறுவதில் வல்லவர். இவர் இந்த உலகை விட்டு பிரிந்த பின்னரும், இவர் எதிர்காலத்தைப் பற்றிய சில கணிப்புக்களை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவரது கணிப்புகளால் உலகம் முழுவதும் பிரபலமானார்.

Baba Vanga Prediction: People Will Live More Than 100 Years After

பாபா வாங்கா இதுவரை உலகைப் பற்றி பல கணிப்புகளை செய்துள்ளார். அதில் பல உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இவரது கணிப்புகள் நிறைவேறும் போது, மக்கள் அவரை நினைவில் கொள்வார்கள். அதே வேளையில், இவரது பல கணிப்புகளும் தவறானவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டில் நடக்கவிருப்பதையும் இறப்பதற்கு முன் கணித்து குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2022-ல் இந்தியா பற்றிய கணிப்பு

2022-ல் இந்தியா பற்றிய கணிப்பு

பாபா வாங்காவின் கணிப்பின் படி, 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இருக்கலாம் இது தவிர பஞ்சம் போன்ற பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பாபா வாங்கா ஆசியாவின் சில பகுதிகள் வெள்ளத்தால் அழியும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேப் போன்று பல ஆசிய பகுதிகளும் வெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கின்றன.

2023 மற்றும் 2028 ஆம் ஆண்டின் கணிப்புகள்

2023 மற்றும் 2028 ஆம் ஆண்டின் கணிப்புகள்

பாபா வாங்கா தனது குறிப்பில் 2023 ஆம் ஆண்டு பூமி தனது சுற்றுப்பாதயை மாற்றும் என்று கணித்துள்ளார். இது மட்டுமின்றி 2028 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் வெள்ளி கிரகத்திற்கு பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கணித்துள்ளார்.

2046 ஆம் ஆண்டின் கணிப்பு

2046 ஆம் ஆண்டின் கணிப்பு

பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2046 ஆம் ஆண்டில் மனிதர்கள் மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள் மற்றும் இதன் உதவியால் மனிதர்களால் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியுமாம்.

இரவு வேளை இருக்காது

இரவு வேளை இருக்காது

பாபா வாங்காவின் கணிப்பின் படி, 2100 ஆம் ஆண்டில் பூமியில் இரவே இருக்காது. பூமியானது இரவு வேளையில் செயற்கை சூரிய ஒளியால் மிளிரும். இந்த கணிப்பு நிச்சயம் நமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

உலகின் முடிவு

உலகின் முடிவு

பாபா வாங்கா உலகின் முடிவைப் பற்றியும் கணித்துள்ளார். பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, உலகமானது 5079 ஆம் ஆண்டில் அழியும். 2022 ஆம் ஆண்டில் பாபா வாங்கா கணித்த படி, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. ஐரோப்பாவில் வறட்சி ஏற்படும் என்று கணித்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு, ஐரோப்பாவின் போர்ச்சுகல் அரசு அதன் மக்களை குறைவான நீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. மேலும் இத்தாலியிலும் நீர் பஞ்சம் காணப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கதை பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்போல்ட் ஸ்கை அதை உறுதிப்படுத்தவில்லை.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion