Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட... செல்வம் பெருக இதை முக்கியமா செய்யுங்க
சிலருக்கு உடல்நலக்கோளாறுகள் படுத்தி எடுக்கும், சிலருக்கு எல்லாமே தடங்களாக இருக்கும். வறுமையும் பஞ்சமுமாக இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. வறுமை நீங்கி செல்வம் பெருக இந்த பரிகாரங
செல்வம் பெருகவேண்டும், கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கி நல்லது நடக்க வேண்டும் வறுமை நீங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். சிலரது வீட்டில் நோய்களும், கடனும் படுத்தி எடுக்கும், சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதனால் மனச்சோர்வும் அழுத்தமும் இருக்கும். அதற்கேற்ற பரிகாரம் செய்தால் வறுமை நீங்கும் செல்வம் பெருகும். வீண் விரையங்கள் தடுக்கப்படும். நோய்கள் நீங்கி சுகம் பெருகும்.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும். நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

குபேர பூஜை
வியாழக்கிழமை மாலை 4, 5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும். ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும் செல்வம் தங்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு
கிண்ணங்களில் அரிசி, உப்பு, மிளகாய், புளி, பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள், எண்ணெய், சர்க்கரை, நெய், காய்கறிகள் என அனைத்தையும் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த பொருட்கள் குறைவில்லாது நிறைவாக இருக்கும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

பண பீரோவில் பணம் தங்க
தென்மேற்கில் அமைந்த அறையில் பணம், நகை புழங்கும் பீரோவை, கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். மேலும், பீரோவில் மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைத்தால், எந்த தோஷமும் வராது. பணம் பீரோவில் தங்கும்.

தம்பதியர் ஒற்றுமை
சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒரே மெத்தையாக தான் பயன்படுத்த வேண்டும். மனைவி கணவனின் இடது பக்கம் படுத்து உறங்க வேண்டும்.

மன அழுத்தம் நீங்க பரிகாரம்
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும்பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.

கல் உப்பு
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும். காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டலாம். பயம் குறையும். தற்கொலை எண்ணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளிக் கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை. பெண்கள் மூக்குத்தி அணியலாம்.

துர்சக்தி நீக்கும் மருதாணி
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம். துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க
வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் சிறிது வேப்பிலை சிறிது மஞ்சள் எடுத்து செல்ல அதில் உள்ள பாசிட்டீவ் எனர்ஜியால் எந்த விபத்தும் இன்றி பயணம் இனிமையானதாக இருக்கும்.வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.

வழக்குகளில் வெல்ல விளக்கு பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 முதல் 7 மணிக்குள் வீட்டில் பூஜையறையில் 31 தீபம் ஏற்றி கோளாறு பதிகமும் விநாயகர் அகவலும் படிக்க எப்படிபட்ட எந்த வித வழக்குகளாக இருந்தாலும் வெல்ல முடியும் வழக்கும் உங்களுக்கு சாதகமாக முடியும். மிகவும் நெருக்கடியான சூழ்நிலை பூதாகரமான பிரச்சனைகள் ஏற்பட்டால் நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை உடனே 108 நெய் தீபம் பூஜையறையில் ஏற்றி கோளாறுபதிகம் மற்றும் கந்த சஷ்டி கவசம் படிக்க பாதிப்புகளின் வேகம் உடனடியாக குறையும் கைமேல் பலன் உடனடி பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications