Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
5 ஏலக்காயை இந்த இடத்தில் வெச்சிருந்தா, அது உங்களை சீக்கிரம் பணக்காரராக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க...
ஜோதிடத்தின் படி, ஏலக்காய் பரிகாரம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறைக்க உதவகிறது. குறிப்பாக ஏலக்காய்க்கு ஒருவரை பணக்காரக்கும் சக்தி உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.
நல்ல மணம் நிறைந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள். அப்படி தான் உருவத்தில் சிறிய மற்றும் நல்ல மணம் கொண்ட ஏலக்காயிலும் லட்சுமி தேவி குடியிருக்கிறாள். ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதைத் தவிர, நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

ஜோதிடத்தின் படி, ஏலக்காய் பரிகாரம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறைக்க உதவகிறது. குறிப்பாக ஏலக்காய்க்கு ஒருவரை பணக்காரக்கும் சக்தி உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. இப்போது ஒருவரது வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைப் போக்க ஏலக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

பரிகாரம் #1
நீங்கள் பணப் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் பணப்பையில் 5 ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இது நிதி பிரச்சனைகளை நீக்கி, வருமானத்தை அதிகரிக்க உதவும். இதன் பலனானது ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் தெரியும் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

பரிகாரம் #2
குடும்பத்தில் சண்டைகள் அதிகம் ஏற்படுகிறதா? அப்படியானால் தினமும் உங்கள் சட்டைப் பையில் 3 ஏலக்காயை வைத்திருங்கள். இது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க உதவகிறது. முக்கியமாக இந்த பரிகாரம் கணவன் மனைவிக்குள் உள்ள சண்டைகளை நீக்க உதவுகிறது.

பரிகாரம் #3
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஏலக்காய் கொடுப்பது நல்லது. இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள காதல் அதிகரிக்கும்.

பரிகாரம் #4
தினமும் காலையில் குளிக்கும் போது 2 சிறிய ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு குளிக்க வேண்டும். முக்கியமாக அப்படி குளிக்கும் போது உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் சொல்லிக் கொண்டே குளிக்க வேண்டும். இப்படி செய்வதனால், மனதில் நல்லெண்ணம் மேம்பட்டு, நிதி பிரச்சனைகளும் தீரும்.

பரிகாரம் #5
உங்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டுமா? அப்படியானால் ஒரு பச்சை துணியை எடுத்து, அதில் 4-5 ஏலக்காயை வைத்துக் கட்டி, அதை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் அந்த ஏலக்காய் மூட்டையை யாரிடமானது கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம் #6
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், 2 ஏலக்காயை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியானதும், அதை குளிக்கும் நீரில் அதை ஊற்றி, அந்நீரால் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது 'ஓம் ஜெயந்தி மங்கள காளி பத்ரகாளி' என்று சொல்ல வேண்டும். இப்படி செய்வதால் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகும்.

பரிகாரம் #7
உங்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், லட்சுமி தேவியை வணங்கும் போது, 3 ஏலக்காயை எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி, பிரச்சனைகள் நீங்க வேண்டுமென்று மனதில் தேவியை வேண்டி, நவகிரக யந்திரத்திற்கு அருகில் ஏலக்காயை வையுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications