For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் பிரைம் டே விற்பனை 2021: அசத்தலான தள்ளுபடியில் உள்ள டாப் 20 பொருட்கள்!

இறுதியாக அமேசான் பிரைம் டே விற்பனை வந்துவிட்டது. இரண்டு நாள் விற்பனை, அதாவது ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் பொருட்களை விற்கிறது.

|
Amazon Prime Day Sale 2021

இறுதியாக அமேசான் பிரைம் டே விற்பனை வந்துவிட்டது. இரண்டு நாள் விற்பனை, அதாவது ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் பொருட்களை விற்கிறது. ஃபேஷன் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் மற்றும் காலணிகள் வரை அமேசான் அனைத்திலும் தள்ளுபடியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கானது மற்றும் இந்த தள்ளுபடியானது பொருட்கள் இருக்கும் வரை நீடிக்கும் என்றும் உறுதியளிக்கிறது.

இன்று உங்களுக்கு விருப்பமான சில பொருட்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம். அமேசான் பிரைம் டே விற்பனையின் போது அட்டகாசமான தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களை அறிய தொடர்ந்து பாருங்கள்.

ILLI LONDON பெண்களுக்கான டாப்ஸ்

பெண்களே, நீங்கள் ஒரு அட்டகாசமான மற்றும் ட்ரெண்டியான டாப்ஸ் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த டாப்ஸ் சரியான தேர்வாக இருக்கும். இந்த லாங் ஸ்லீவ் கொண்ட பாலியஸ்டர் டாப் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இந்த டாப்ஸ் 4 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. அதோடு, S, M, L மற்றும் XL அளவுகளிலும் உள்ளது. இதன் விலை ரூ.499. இந்த டாப்ஸ் வாஷிங் மெஷினில் துவைக்க ஏற்றது மற்றும் இது டெனிம் மற்றும் ட்ரௌசர்களுடன் அணிய ஏற்றது. இந்த டாப்ஸ் இங்கே பாருங்கள்.

மிஸ் சேஸ் பெண்களுக்கான மினி பாடிகான் உடைகள்

பாடிகான் உடைகள் அற்புதமானவை மற்றும் சில பெண்கள் தங்கள் அலமாரிகளில் ஒருசில பாடிகான் உடைகளை வைத்திருக்க விரும்புவார்கள். உங்களுக்கும் பாடிகான் உடைகள் பிடிக்குமானால், அமேசான் பிரைட் டே விற்பனை இரண்டு பாடிகான் உடைகளை ஒரே நேரத்தில் வாங்குவதற்கான காம்போ சலுகையை உங்களுக்கு வழங்குகிறது. அதில் ஒன்று கருப்பு நிறத்தில் மிகவும் மென்மையான மற்றும் வட்ட வடிவ கழுத்து கொண்ட பாடிகான் உடை மற்றொன்று கோடுபோட்ட ஸ்லீவ்லெஸ் மற்றும் காட்டன் பாடிகான் உடை. இந்த பாடிகான் உடைகளை இங்கே பாருங்கள்.

எஸ்.எல்.கே மர தயாரிப்புகளின் மல்டிஃபங்க்ஸ்னல் மரப்பெட்டி

அழகுசாதனப் பொருட்கள், நகைகள், மருந்துகள் மற்றும் பலவற்றை சேமிப்பதற்கு ஏற்ற ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் மரப்பெட்டியை வீட்டில் வைத்திருந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அமேசான் பிரைம் டே விற்பனை உங்களுக்காக பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஐரோப்பிய பீச் வுட் பாடி பெட்டியை அற்புதமான தள்ளுபடியில் கொண்டு வந்துள்ளது. இந்த பெட்டியில் பல பிரிவுகள் உள்ளன. இவை உங்களின் பொருட்களை ஒழுங்காக பிரித்து வைக்க உதவும். இந்த மரப்பெட்டியை குளியலறை கவுண்டர் அல்லது டிராயராகவும் பயன்படுத்தலாம். இந்த மல்டிஃபங்க்ஸ்னல் மரப்பெட்டியின் விலை ரூ.699. இந்த மல்டிஃபங்க்ஸ்னல் மரப்பெட்டியை இங்கே பாருங்கள்.

ஸ்காட்ச்-பிரைட் 2-இன்-1 பக்கெட் ஸ்பின் மாப்

உங்கள் வீட்டை எளிய முறையில் ஸ்காட்ச்-பிரைட் 2-இன்-1 பக்கெட் ஸ்பின் மாப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். இந்த செட்டில் ஒரு பக்கெட் மற்றும் ஒரு கைப்பிடி மற்றும் 2 ரீபில்கள் உள்ளன. மேலும் இந்த மாப் 360 டிகிரி தொலைநோக்கி கைப்பிடியைக் கொண்டுள்ளதால், வீட்டின் மூலை முடுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய உதவும். இந்த மாப்பின் விலை ரூ. 899. இந்த மாப்பை இங்கே பாருங்கள்.

பிளவுஸ் பீஸ் கொண்ட வுமனிஸ்டாவின் பெண்களுக்கான க்ரீப் புடவை

உங்களுக்கு புடவை அணிய பிடிக்குமானால், பிளவுஸ் உடன் வரும் இந்த அழகிய வெள்ளை மற்றும் பிங்க் நிறங்கள் கெண்ட க்ரீம் புடவையை முயற்சித்துப் பாருங்கள். இந்த வுமனிஸ்டாவின் சிந்தடிக் புடவை மிகவும் லேசான எடையைக் கொண்டது. ஆனால் இந்த புடவையில் உள்ள டிசைன் அழியாமல் இருக்க வேண்டுமானால், இதை ட்ரை க்ளீன் முறையில் தான் சுத்தம் செய்ய வேண்டும். இந்த புடவையை இங்கே பாருங்கள்.

சொனாட்டா ஃபார்மல் அனலாக் பிளாக் டயல் ஆண்களுக்கான வாட்ச் NM7924NM01 / NN7924NM01

இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில் சொனாட்டா ஃபார்மல் அனலாக் பிளாக் டயல் ஆண்கள் வாட்ச்சை வாங்குங்கள். இந்த கருப்பு நிற வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஆனது மற்றும் இது வட்ட வடிவ டயலைக் கொண்டது. இந்த அனலாக் வாட்ச் ஒரு குவார்ட்ஸ் இயக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் இதற்கு 12 மாத வாரண்ட்டியும் உள்ளது. இந்த வாட்ச்சின் விலை ரூ. 1,300. இந்த வாட்ச்சை இங்கே பாருங்கள்.

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் 2.0 ஆண் மற்றும் பெண்களுக்கான ஆக்டிவிட்டி டிராக்கர்

இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில் உங்களில் பலர் வாங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் 2.0 ஆண் மற்றும் பெண்களுக்கான ஆக்டிவிட்டி டிராக்கரை வாங்க சரியான நேரம். டட்ச் பட்டனட்ன கூடிய இந்த வாட்ச்சிற்கு ஒரு வருட வாரண்டி உள்ளது. இந்த வாட்ச் கலோரிகளை கணக்கிட மற்றும் எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள், எவ்வளவு நேரம் தூங்கினீர்கள் ஆகியவற்றை காண உதவும். மேலும் இதை உங்கள் போனில் போட்டோ எடுக்க ரிமோட் கண்ட்ரோலராக பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் போனை இழந்தால், அதை கண்காணிக்க உதவும். இந்த கடிகாரத்தின் பேண்ட் நிறம் பச்சை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் விலை ரூ. 1,195. இந்த ஆக்டிவிட்டி டிராக்கரை இங்கே பாருங்கள்.

பெண்களுக்கான பிங்க் நிற V2A அனலாக் டிஜிட்டல் வாட்டர்ப்ரூப் ஃபேஷன் ஸ்போர்ட்ஸ் வாட்ச்

நீங்கள் ஒரு ஃபேஷன் ஸ்போர்ட்ஸ் வாட்சை வாங்க விரும்பினால், இந்த V2A அனலாக் டிஜிட்டல் வாட்டர்ப்ரூப் ஃபேஷன் ஸ்போர்ட்ஸ் வாட்ச்சை வாங்குங்கள். இந்த வாட்ச் பேக்லைட் அலாரம் ஸ்டாப்வாட்சுடன் வருகிறது. இந்த வாட்ச்சை எந்த உடையுடனும் அணிந்து கொள்ளலாம். இந்த வாட்ச்சில் காலெண்டர் உள்ளது. இதன் விலை ரூ. 764. இந்த ஸ்போர்ட்ஸ் வாட்ச்சை இங்கே பாருங்கள்.

கார்ல்டன் லண்டனின் பெண்களுக்கான ஹீல்ஸ் செருப்பு (CLL-6270)

நல்ல வசதியான காலணிகளை வைத்திருப்பது என்பது பேரின்பம். இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில், கார்ல்டன் லண்டனின் பெண்களுக்கான ஹீல்ஸ் செருப்பை வாங்குங்கள். இந்த செருப்பு மூன்று வெவ்வேறு வண்ணங்களில் உள்ளது. இந்த ஹீல்ஸ் செருப்பை இங்கே பாருங்கள்.

XE Looks-இன் பெண்களுக்கான வசதியான டேன் பிளாட் செருப்பு

பிளாட் செருப்புகள் வசதியானவை மட்டுமல்ல, ஸ்டைலான மற்றும் ட்ரெண்டியும் கூட. அதுவும் இந்த XE Looks-இன் பெண்களுக்கான வசதியான டேன் பிளாட் செருப்பு அனைத்து வேளைகளிலும் அணிவதற்கு ஏற்றது. இந்த பிளாட் செருப்பின் அடிப்பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால், அணிவதற்கு வசதியாக இருக்கும். இந்த பிளாட் செருப்பின் விலை ரூ. 549. இந்த பிளாட் செருப்பை இங்கே பாருங்கள்.

ஆண் பெண்களுக்கான க்ரோக்ஸ் காலணி

இப்போது யுனிசெக்ஸ் க்ரோக்ஸ் காலணிகள் ட்ரெண்ட்டாக இருக்கிறது. அதுவும் ஆர்மி க்ரீன் மற்றும் காக்கி பிரிண்ட் போடப்பட்ட கிளாக்குகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வருகின்றன. ஸ்லிப்-ஆன் மற்றும் புல்-ஆன் மூடல் மூலம், இந்த கிளாக்குகள் வருவது வசதியாக உள்ளன. இதன் விலை ரூ.2,125 - ரூ.3,225.75 வரையில் உள்ளன. இந்த க்ளாக்குகள் 7 வண்ணங்களில் உள்ளன. எனவே உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து வாங்கலாம். இந்த க்ரோக்ஸ் காலணியை இங்கே பாருங்கள்.

க்ரோக்ஸ் யுனிசெக்ஸ் குழந்தைகளுக்கான ப்ளூ க்ளாக்ஸ் (206833-410)

இனிமேல் உங்கள் குழந்தைகளை எந்த கவலையும் இல்லாமல் வசதியாக ஓடியாடி விளையாட விடுங்கள். ஏனெனில் அமேசான் பிரைம் டே விற்பனையில், குழந்தைகளுக்கான க்ரோக்ஸ் ப்ளூ க்ளாக்ஸ் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இந்த க்ளாக்குகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் உள்ளன. மேலும் இதன் விலையும் நியாயமான விலை வரம்பில் உள்ளது. இந்த ப்ளூ க்ளாக்ஸ் காலணியை இங்கே பாருங்கள்.

விக்டோரினாக்ஸ் நைலான் 57 செ.மீ. ஆந்த்ராசைட் சாஃப்ட்ஸைட் கேரி-ஆன் (601478)

வெளியூருக்கு செல்லும் போது, தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று லைட் வெயிட் கொண்ட ஒரு கேரி-ஆன் கொண்டு செல்வது. இந்த விக்டோரினாக்ஸ் கேரி-ஆன் நீடித்தது மற்றும் விசாலமானது. இது நைலானால் ஆனது மற்றும் இது ஆந்த்ராசைட் நிறத்தில் வருகிறது. இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பிரதான பெட்டியுடன், இந்த கேரி-ஆன் ஒரு TSA பூட்டைக் கொண்டுள்ளது. இந்த கேரி-ஆன் வாங்க இங்கே பாருங்கள்.

வோக் ஐவர் யு.வி. பாதுகாப்பு சன்கிளாஸ்கள் ( 0VO5393S | 54 மிமீ | வட்டம் | பிங்க் ஃபிரேம்)

வோக் சன்கிளாஸை வாங்க நீங்கள் விரும்பினால், அமேசான் பிரைம் டே சேல் உங்களுக்கானது. ரூ.3,725-இல் வோக்கின் யு.வி. பாதுகாப்பு சன்கிளாஸ் வாங்கலாம். இந்த சன்கிளாஸ் பிங்க் நிறத்தில் உள்ளதால், இது கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும். சன்கிளாஸின் கை நீளம் 135 மிமீ மற்றும் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த வோக் ஐவரை இங்கே பாருங்கள்.

GoSriKi-யின் பெண்களுக்கான துப்பட்டாவுடன் கூடிய ரேயான் அனார்கலி குர்தா

GoSriKi பெண்களுக்கு முக்கால் கை கொண்ட அழகிய மெஜந்த பிங்க் அனார்கலி குர்தா மற்றும் அதற்கு துப்பட்டாவை வெளியிட்டது. இந்த அனார்கலியானது அமேசான் பிரைம் டே விற்பனையில் ரூ.599-இல் வாங்கலாம் மற்றும் இதில் இரண்டு வேறு வண்ணங்கள் உள்ளதால், உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்வு செய்து வாங்கலாம். இந்த அனார்கலி குர்தாவை இங்கே பாருங்கள்.

பெண்களுக்கான ஃபேப்ரிகார்ன் பிளாக் காட்டன் ஃபிளீஸ் காலர் ஜிப்பர் ஜாக்கெட் ஸ்வெட்ஷர்ட்

ஸ்வெட்ஷர்ட் ஒரு பெண்ணின் அலமாரிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்றாகும். ஃபேப்ரிகார்ன் உங்களுக்கான கருப்பு நிற காட்டன் ஃபிளீஸ் காலர் ஜிப்பர் ஜாக்கெட்டை கொண்டு வந்துள்ளது. இந்த ஜாக்கெட் குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்றது. ஒருவேளை உங்களுக்கு கருப்பு நிற ஸ்வெட்ஷர்ட் பிடிக்காவிட்டால், இதில் வேறு இரண்டு வண்ணங்களும் உள்ளன. அதில் பிடித்ததை தேர்ந்தேடுக்கலாம். இந்த ஜாக்கெட் விலை ரூ.599 மற்றும் இதில் 5 வெவ்வேறு அளவுகளும் உள்ளன. இந்த ஸ்வெட்ஷர்ட்டை இங்கே பாருங்கள்.

ஸ்கை பேக்ஸ் ட்ரூப்பர் 55 செ.மீ பாலிகார்பனேட் ப்ளூ ஹார்ட்ஸைட் கேபின் லக்கேஜ்

இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில், உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்கு ஸ்கை பேக்ஸ் கேபின் லக்கேஜ்ஜை வாங்குங்கள். இது பாலிகார்பனேட் பொருளால் ஆனது மற்றும் இந்த 55 செ.மீ ட்ரூப்பர் வாட்டர் ப்ரூப் கொண்டது. நான்கு சக்கரங்கள் மற்றும் ஜிப் கொண்டுள்ள இந்த ட்ரூப்பர் நீல நிறத்தில் இருப்பதோடு, இதன் விலை வெறும் ரூ.1,999 மட்டுமே. இந்த ட்ரூப்பரை இங்கே பாருங்கள்.

15.6 இன்ச் லேப்டாப் ஸ்லீவ்

லேப்டாப் பேக் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கக்கூடாது என்று யார் சொன்னது? ஒருவேளை உங்களுக்கு மோனோக்ரோம் பையை எடுத்து செல்ல பிடிக்காவிட்டால், உங்களுக்காக சம்பக் என்னும் பிராண்ட் டேட் அபவுட் இந்தியா லேப்டாப் பேக்கை கொண்டு வந்துள்ளது. இந்த பேக் 15.6 அங்குலங்கள் வரை ஒரு லேப்டாப்புக்கு இடமளிக்கும் அளவுக்கு விசாலமானது. இது கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல ஏற்றது. இந்த லேப்டாப் பேக் 16 வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு வடிவங்களில் உள்ளது. இந்த பேக்கின் விலை ரூ.767. இந்த லேப்டாப் பேக்கை இங்கே பாருங்கள்.

அமேசான் பிராண்ட்- பெண்களுக்கான கேசுவல் ட்ரௌசர்

நீங்கள் தினமும் ஜாக்கிங் செல்வீர்களா? அப்போது அணிவதற்கு ஏற்ற ஒரு கேசுவல் ட்ரௌசரை வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அமேசான் பிராண்ட் வழங்கும் கேசுவர் ட்ரௌசரை வாங்குங்கள். இந்த ட்ரௌசர் காட்டனால் ஆனது. இதன் விலை ரூ. 389- ரூ.577 வரை. இந்த ட்ரௌசரை இங்கே பாருங்கள்.

பிபா-வின் சிந்தெடிக் சல்வார் சூட் செட்

நீங்கள் ஒரு அழகான சல்வாட் சூட் செட் வாங்க எதிர்பார்த்தால், பிபா உங்களுக்காக ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த வெள்ளை மற்றும் ப்ரௌன் நிறங்களால் ஆன சல்வார் சூட் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த சிந்ரெடிக் சல்வார் சூட் உங்கள் தோற்றத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டும். இதன் விலை ரூ. 1,710. இந்த சல்வார் சூட்டை இங்கே பாருங்கள்.

English summary

Amazon Prime Day Sale 2021: Sunglasses, Dresses, Trousers, Luggage, Shoes - Top 20 Products On Discount!

The Amazon Prime Day Sale begins on 26 July 2021 and will last till 27 July 2021. Exclusively for Prime members, this sale promises to provide exciting offers and discounts to its customers. Today we have curated a list of products.
Story first published: Tuesday, July 27, 2021, 14:40 [IST]
Desktop Bottom Promotion