For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா?

அனைவரும் வாழக்கையில் ரகசியங்களை வைத்திருப்பது நல்லதுதான். தேவையான விஷயங்களை வெளியே சொல்வது எப்படி ஆபத்தானதோ அதேபோலத்தான் தேவையற்ற விஷயங்களை உங்களுக்குள்ளே வைத்திருப்பதும் ஆபத்து.

|

அனைவருக்குமே மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் இருக்கும். ஆனால் நமது ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்ல விரும்ப மாட்டோம். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கூறாத சில ரகசியங்கள் நம்மிடம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கும் வரைதான் நமது வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

Always keep these things secret in your life

அனைவரும் வாழக்கையில் ரகசியங்களை வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் எதனை ரகசியமாக வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தேவையான விஷயங்களை வெளியே சொல்வது எப்படி ஆபத்தானதோ அதேபோலத்தான் தேவையற்ற விஷயங்களை உங்களுக்குள்ளே வைத்திருப்பதும் ஆபத்து. இந்த பதிவில் நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாத ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களின் நீண்டகால திட்டங்கள்

உங்களின் நீண்டகால திட்டங்கள்

உங்களின் சிந்தனைகளை மற்றவர்களிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால் உங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் அதற்காக நீங்கள் வைத்திருக்கும் உத்திகள், வியூகங்கள் போன்றவற்றை மற்றவர்களிடம் கூறவேண்டுமென்ற அவசியமில்லை. விஞ்ஞானரீதியாக தங்களின் திட்டங்களை அனைவரிடமும் கூறுபவர்கள் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குடும்ப பிரச்சினைகள்

உங்கள் குடும்ப பிரச்சினைகள்

உங்களின் குடும்ப பிரச்சினைகள் குறித்தோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருபவர்களின் குறைகள் குறித்தோ ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களின் குடும்ப பிரச்சினைகள் எப்போதும் நாலு சுவருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு பகிர்ந்து கொள்வது பின்னாளில் உங்களுக்கே பிரச்சினையை ஏற்படுத்தலாம். மேலும் இது உங்கள் குடும்பத்தின் மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றும்.

MOST READ: இந்த விஷயங்களை கூறிவிட்டால் மாமியார், மருமகள் இடையே பிரச்சினையே வராதாம் தெரிஞ்சிக்கோங்க...!

நீங்கள் செய்த தானம்

நீங்கள் செய்த தானம்

மற்றவர்களுக்கு தானமோ அல்லது உதவியோ செய்துவிட்டு அதனை அனைவரின் முன்னும் சொல்வதில் என்ன பயன் இருக்கிறது. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று கூறுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டு அமைதியாக இருங்கள் அதற்கான பலன் உங்களை தேடி வந்து சேரும்.

மற்றவர் மீதான உங்களின் கண்ணோட்டம்

மற்றவர் மீதான உங்களின் கண்ணோட்டம்

உங்களுடன் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் என ஒவ்வொருவரின் மீதும் உங்களுக்கு தனிப்பட்ட விமர்சனங்களும், கண்ணோட்டமும் இருக்கும். இதனை எப்பொழுதும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் இவற்றை பகிர்ந்து கொள்வது உங்களின் மீது மற்றவர்கள் விமர்சனத்தை வைக்கவும், முத்திரைக் குத்தவும் வழிவகுக்கும்.

பொருள் உடைமைகள்

பொருள் உடைமைகள்

நீங்கள் புதிதாக விலை மதிப்பான பொருள் வாங்கினால் அதனை மற்றவர்களுக்கு காட்டலாம், ஆனால் அதன் விலையை மற்றவர்களிடம் கூற வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களின் உடைமைகள் உங்களுக்கானது மட்டுமே, அதனை மற்றவர்களிடம் சொல்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது. இது உங்களை தற்பெருமை மிக்கவர்களாக காட்டுவதுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது பொறாமையை ஏற்படுத்தும்.

MOST READ: இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா?

நெருக்கமான உறவுகள்

நெருக்கமான உறவுகள்

உங்களின் நெருக்கமான உறவுகள் பற்றியோ அல்லது உங்கள் மனைவியுடனான உங்களின் நெருக்கமான தருணங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களின் அந்தரங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது உங்களின் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். இது உங்களின் இல்லற வாழ்க்கைக்குள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தம்பதிகளுக்குள் விரிசல்கள் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Always keep these things secret in your life

Read to know things you never share with anyone.
Story first published: Friday, September 20, 2019, 17:41 [IST]
Desktop Bottom Promotion