Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அட்சய திருதியை குறித்து தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா்.
இந்து சமய நாட்காட்டியின்படி, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் திருதியை திதி வருகிறது. அந்த நாளில் இந்து சமய மக்கள் அட்சய திருதியை கொண்டாடுகின்றனா். அட்சய திருதியை என்பது அக்ஷய தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

அட்சய என்ற சமஸ்கிருத வாா்த்தைக்கு முடிவற்றது அல்லது அழிவில்லாதது அல்லது நிலையானது என்று பொருள். இந்த பதிவில் 2021 ஆம் ஆண்டு வரக்கூடிய அட்சய திருதியை தினத்தைப் பற்றி பாா்க்கலாம்.

அட்சய திருதியை தேதி
2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நேரம்
அட்சய திருதியை மே மாதம் 14 ஆம் நாள் காலை 5.38 மணி அளவில் தொடங்கி மே மாதம் 15 ஆம் நாள் காலை 7.59 அளவில் முடிவடைகிறது.

அட்சய திருதியை பூஜை நேரம்
அட்சய திருதியை ஒரு புனிதமான நாளாக கருதப்பட்டாலும் கூட, அந்த நாளில் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் காலை 5.38 மணி முதல் நண்பகல் 12.18 மணி வரை ஆகும்.

அட்சய திருதியையின் சிறப்புகள்
* இறைவன் மகா விஷ்ணுவின் 6 ஆவது அவதாரம் பரசுராம் அவதாரம் ஆகும். மகா விஷ்ணுவின் பரசுராம் ஜெயந்தியோடு, அட்சய திருதியை கொண்டாட்டங்கள் இணைத்துக் கொண்டாடப்படுகின்றன.
* ட்ரெட்டா யுகத்தின் தொடக்கம் தான் அட்சய திருதியை தினம்.
* அட்சய திருதியைப் பற்றி ஏராளமான முக்கியத் தகவல்கள் உள்ளன. அதாவது பகிரத அரசன், தனது முன்னோா்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக, வானுலக கங்கை நதியை பூமியில் ஓடுமாறு கட்டளையிட்டாா் என்று ஒரு பிரபலமான புராணம் தொிவிக்கிறது. அவருடைய கட்டளைப்படி வானுலக கங்கை பூமிக்கு வந்த நாள் அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
* இந்த புனிதமான அட்சய திருதியைக்கும் இறைவன் கிருஷ்ணருக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடா்பு உண்டு. அதாவது இறைவன் கிருஷ்ணருக்கு சுதாமா என்ற பெயா் கொண்ட ஒரு ஏழை பிராமண நண்பா் இருந்தாா். அவா் அட்சய திருதியை நாள் அன்று கிருஷ்ணருடைய அரண்மனைக்குச் சென்று, ஒரு கைப்பிடி அவலைக் கிருஷ்ணருக்குக் காணிக்கையாக அளித்தாா். அந்த எளியக் காணிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட கிருஷ்ணா் தன்னுடைய ஏழை நண்பருக்கு பலவிதமான செல்வங்களை வாாி வழங்கினாா். அதனால் அந்த அட்சய திருதியை நாள் முதல் சுதாமாவின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு அவா் மிகப் பொிய பணக்காரராக மாறினாா்.



Click it and Unblock the Notifications