Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
நட்பு கிரகமாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த நட்பு கிரகங்களின் சேர்க்கையால் பல ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கவுள்ளன.
வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கம் மற்றும் கிரகங்களின் சேர்க்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில சமயங்களில் எதிரி கிரகங்களின் சேர்க்கை நிகழலாம், இன்னும் சில சமயங்களில் நட்பு கிரகங்களின் சேர்க்கையும் நிகழலாம். அதில் நட்பு கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்தால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு சனி வந்துள்ளார். தனது சொந்த ராசியில் சனி இருப்பதால் பல ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்குவார். இந்நிலையில் நட்பு கிரகமாக கருதப்படும் புதன் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த நட்பு கிரகங்களின் சேர்க்கையால் பல ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கவுள்ளன.

புதன் மற்றும் சனி
ஜோதிடத்தில் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், வங்கி, நிதி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதேப் போல் சனி வேலை, முன்னேற்றம், வெற்றி, வெளிநாட்டு வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் இணையும் போது, அதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இப்போது இந்த சனி-புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத் திறமையால், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வங்கி, கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் இந்த சேர்க்கையால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் குழந்தைகள் விருதுகள் அல்லது மிகப்பெரிய வெற்றியை காண்பதற்கான வாய்ப்புள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் மகர ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தல் ஏராளமான பண பலன்களைப் பெறுவார்கள். பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தால், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் பேச்சால் மற்றவர்களின் மனதை வெல்வீர்கள். குடும்பத்துடன் சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
