Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
8 வயது முதல் 15 வயது வரை தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - மனம் திறந்த குஷ்பு!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், இவர் கூறிய ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அதிர்ச்சியை அளித்துள்ளது.
90-களில் கோயில் கட்டி கும்பிடும் அளவு மிகவும் பிரபலமான நடிகை தான் குஷ்பு. இவர் தமிழில் தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் தமிழில் மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சொல்லப்போனால் மூன்று தலைமுறைகளாக நடித்து வருகிறார். குஷ்பு சிறந்த நடிகை மட்டுமின்றி, தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர். ஏன் சின்னத் திரையிலும் நடித்துள்ளார். இது தவிர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2010 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த குஷ்பு, அதன் பின் அரசியலில் தனது அனல்பறக்கும் பேச்சுத் திறமையால் செய்திகளில் அதிகம் பேசப்பட்டார். அதன் பின் தனது முயற்சியால் அரசியலில் பல முன்னேற்றங்களைக் கண்ட குஷ்பு, சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், இவர் கூறிய ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அதிர்ச்சியை அளித்துள்ளது.

8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில், சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசினார்.
இதுக்குறித்து அவர் விரிவாக கூறுகையில், தனக்கு 8 வயதில் இருந்து தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததோடு, இதை வெளியே கூறினால் தன்னுடைய அம்மாவையும், சகோதரர்களையும் அடிப்பேன் என்று மிரட்டினார். இதனால் இதுக்குறித்து என்னால் வெளியே சொல்ல முடியவில்லை.
மேலும் எனது தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அது தன்னுடைய உரிமையாகவும் கருதியதாக கூறினார். தன்னுடைய அம்மா ஒரு மோசமான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

15 வயதில் எதிர்க்கும் தைரியம்
ஒரு ஆணோ, பெண்ணோ குழந்தையாக இருக்கும் போது துன்புறுத்தலுக்கு ஆளானால், அது ஆறாத காயத்தை மனதில் ஏற்படுத்திவிடும். என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் என் தந்தையோடு பேசினாலும், என்னால் அவரை தந்தையாக ஏற்க முடியவில்லை. ஏனெனில் இந்த பாலியல் துன்புறுத்தலை 15 வயது வரை அனுபவித்துள்ளேன். 15 வயதிற்கு பின்னரே, எதிர்த்து பேசும் தைரியம் எனக்கு வந்தது. அதன் பின் அவர் எங்களை தனியே விட்டு சென்றுவிட்டார். பின்னர் எங்கள் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் மன தைரியத்தோடு போராட வேண்மென்ற மனப்பான்மை வந்தது மற்றும் என் தாயார் அனைத்து விதத்திலும் தனக்கு ஆதரவாக இருந்தார் என்றும் கூறினார்.
நடிகை குஷ்பு குழந்தை பருவத்தில் தான் சந்தித்த பாலியல் கொடுமை குறித்து தற்போது பேசியிருப்பது, நாட்டில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

முடிவு
நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு இத்தனை ஆண்டுகள் கழித்து தான் அனுபவித்த பாலியல் கொடுமை குறித்து கூறியிருப்பதைப் பற்றி பல விமர்சனங்கள் எழலாம். ஆனால் என்ன தான் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலும், குஷ்பு அவர்கள் சற்றும் மனம் துவண்டு போகாமல், வாழ்க்கையை தைரியமாக வாழ ஆரம்பித்து, திரைத்துறையில் சாதனை புரிந்ததோடு, அரசியலிலும் நுழைந்து தற்போது தேசிய மகளிர் உறுப்பினராக ஆகியுள்ளார். இதிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. அதில் குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications