Latest Updates
-
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தப்பித்தவறியும் இந்த விஷயங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் செஞ்சுடாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...
லருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பது தெரியாது. ஆகவே இக்கட்டுரையில் ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத சில செயல்களைக் காண்போம்.
இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தெய்வம் வழிபடப்படுகிறது. அதில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கும், செவ்வாய் கிழமை அனுமனுக்கும், புதன் கணபதிக்கும், வியாழன் குருவிற்கும், வெள்ளிக்கிழமை அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சனிக்கிழமை சனி பகவான் மற்றும் விஷ்ணுவிற்கும், ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் பல விஷயங்களை செய்வார்கள். பொதுவாக ஒரு நாளுக்கு உரிய தெய்வத்திற்கு ஆகாத விஷயங்களை அந்நாளில் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு செய்தால், அது அந்த நாளுக்குரிய தெய்வத்திற்கு பிடிக்காது மற்றும் அது அந்த தெய்வத்தின் கோபத்தை அதிகரிக்கும் என்பார்கள். அதில் பலருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பது தெரியாது. ஆகவே இக்கட்டுரையில் ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத சில செயல்களைக் காண்போம்.

இறைச்சி, மது கூடாது
ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நமக்கு பிடித்தவாறு இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஜோதிடத்தின் படி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அது ஒருவரது முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்துமாம்.

அடர் நிற உடைகளை அணியக்கூடாது
சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமைகளில் அடர் நிற உடைகளை அணிவது நல்லதல்ல என்று கூறப்படுகிறது. அதுவும் நீலம், கருப்பு மற்றும் கிரே போன்ற நிறங்களைக் கொண்ட உடைகளை அணியக்கூடாது.

துளசிக்கு நீர் ஊற்றக்கூடாது
ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லதல்ல என்று கூறப்படுகிறது. ஏனெனில் புராணங்களில், இந்த நாள் அன்னை துளசியின் சபதமாக பார்க்கப்படுகிறது.

முடி வெட்டக்கூடாது
பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடியை வெட்டுவார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முடி வெட்டுவது கெட்டதாக கருதப்படுகிறது. ஒருவேளை செய்தால், வாழ்க்கையில் எந்த வேலையை செய்தாலும் அதில் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்.

உப்பு சாப்பிடக்கூடாது
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் உப்பு உட்கொள்வது நல்லதல்ல என்று கூறப்படுகிறது. இது வீட்டின் நலனைக் குறைக்குமாம்.



Click it and Unblock the Notifications