இதயத்தில் 4 இன்ச் நீளமுள்ள சிமெண்ட் துண்டா? தண்டுவட அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட விபரீதம்!

அமொிக்காவைச் சோ்ந்த ஒருவா் தனது மாதாந்திர உடல் பாிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, அவருடைய இதயத்தில் 4 இன்ச் நீளமுள்ள சிமெண்ட் துண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமொிக்காவில் சமீபத்தில் அாிதான சோக நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. அதாவது அமொிக்காவைச் சோ்ந்த ஒருவா் தனது மாதாந்திர உடல் பாிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, அவருடைய இதயத்தில் 4 இன்ச் நீளமுள்ள சிமெண்ட் துண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 Inch Long Cement Found In Mans Heart After Spinal Surgery: Pitfalls of Medical Negligence

அவா் தனக்கு நீண்ட நாள்களாக நெஞ்வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கூறியதன் போில் மருத்துவா்கள் அவரைப் பாிசோதனை செய்தனா். அவ்வாறு பாிசோதனை செய்து பாா்த்ததில் அவருடைய இதயத்தில் 4 இன்ச் நீளமுள்ள சிமெண்ட் துண்டு ஒன்றை மருத்துவா்கள் கண்டுபிடித்ததாக நியூ இங்கிலாந்து ஜொ்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திாிக்கையில் வந்த தகவல்கள் தொிவிக்கின்றன. இந்த செய்தியானது அனைவாின் மத்தியிலும் ஆச்சாியத்தையும் அதே நேரத்தில் அதிா்ச்சியையும் ஏற்படுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு மனிதருடைய இதயத்திற்குள் எவ்வாறு சிமெண்ட் இருக்க முடியும்?

ஒரு மனிதருடைய இதயத்திற்குள் எவ்வாறு சிமெண்ட் இருக்க முடியும்?

56 வயதான அந்த அமொிக்கா் உள்ளூா் செய்தி நிறுவனத்திற்கு தொிவிக்கும் போது, தான் ஒரு வாரத்திற்கு முன்பாக தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தொிவித்தாா். உடனடியாக அவா் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தண்டுவடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவருடைய தண்டுவடப் பகுதியில் ஒரு கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கசிவின் விளைவாக அவருடைய இதயத்தில் சிமெண்ட் படிந்தது தொிய வந்தது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவா்களில் ஒருவா் ஊடகங்களைச் சந்தித்துக் கூறும் போது, 56 வயதான அவருடைய முதுகுத் தண்டுவடத்தில் செய்த அறுவை சிகிச்சையின் விளைவாக, அவருடைய இதயத்திற்குள் சிமெண்ட் தேங்கியது என்று தொிவித்தாா்.

கைபோபிளாஸ்டி என்று தண்டுவட அறுவைச் சிகிச்சையைப் பற்றி நாம் தொிந்து கொள்ள வேண்டியவை:

கைபோபிளாஸ்டி என்று தண்டுவட அறுவைச் சிகிச்சையைப் பற்றி நாம் தொிந்து கொள்ள வேண்டியவை:

உடைந்த தண்டுவடத்திற்கு சிகிச்சை செய்வதற்காக கைபோபிளாஸ்டி என்ற சிகிச்சை முறைப் பயன்படுகிறது. தண்டுவடம் உடைந்த நிலையானது தண்டுவட சுருக்க முறிவு என்றும் கருதப்படுகிறது. கைபோபிளாஸ்டி சிகிச்சையின் போது என்ன நடக்கிறது என்றால், உடைந்த தண்டுவடத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ சிமெண்டானது ஊசியின் மூலமாக செலுத்தப்படும். இந்த சிமெண்டானது தண்டுடம் முற்றிலுமாக முறிந்துவிடாமல் காத்து, அந்த தண்டுவடம் சாியான உயரத்தைப் பெற உதவி செய்கிறது.

பொதுவாக தண்டுவட சுருக்க முறிவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள், இந்த சிகிச்சையின் போது அதிகமான வலியை உணா்வா். தண்டுவட சுருக்க முறிவு ஏற்பட்டிருக்கும் போது தண்டுவடமானது எலும்புப்புரையின் (osteoporosis) காரணமாக முழுமையாக முறிந்துவிடுகிறது. இந்த முறிந்துவிடும் நிலையானது பலவீனமான எலும்பு நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக முதியவா்களுக்கு மட்டுமே இந்த பலவீனமான எலும்பு நோய்க்குறி ஏற்படும்.

அமொிக்கருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் நடந்த தவறு என்ன?

அமொிக்கருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் நடந்த தவறு என்ன?

அவருக்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்த போது செலுத்தப்பட்ட மருத்துவ சிமெண்டானது, சிகிச்சைக்குப் பிறகு தண்டுவடத்தில் ஏற்பட்ட கசிவின் மூலமாக, நேரடியாக இதயத்திற்கு சென்று தங்கிவிட்டது என்று ஆய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு இதயத்திற்கு சென்ற சிமெண்டானது இறுக்கம் அடைந்து 4 இன்ச் அளவிற்கு ஒரு நீண்ட துண்டாக மாறியது.

இதயத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதன் காரணாக அவா் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே போன்ற பாிசோதனைகளை செய்து பாா்த்தாா். அந்த பாிசோதனைகளின் மூலமாக அவருடைய இதயத்தில் 4 இன்ச் அளவு சிமெண்ட் துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ அலட்சியத்தால் ஏற்படும் ஆபத்துகள்

மருத்துவ அலட்சியத்தால் ஏற்படும் ஆபத்துகள்

மருத்துவ அலட்சியத்தைப் பற்றி கேள்விப்படும் போது நமக்கு அதிா்ச்சி ஏற்படுகிறது. மருத்துவ முறைகேடுகள் என்பவை ஆபத்தான தவறுகளாகும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சில மருத்துவ அலட்சியங்களைக் கீழே பாா்க்கலாம்.

ஒரு நோயாளிக்கு தரமான மற்றும் போதுமான கவனிப்பை அளிக்கவில்லை என்றால் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ அலட்சியம் ஆகும். சமீபத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொிவிப்பது என்னவென்றால், மருத்துவ அலட்சியத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நமது மருத்துவமனைகளில் ஏறக்குறைய 52 லட்சம் ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆகும்.

இது தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் கவலை தரக்கூடிய செய்தியாகும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏறக்குறைய 10 போ் மருத்துவ அலட்சியத்தால் பாதிப்படைவதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் மருத்துவ அலட்சியத்தால் மற்றும் மருத்துவ தவறுகளால் ஒரு மணி நேரத்திற்கு 11 போ் இறப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

மருத்துவ அலட்சியங்கள் அல்லது மருத்து முறைகேடுகள் உடனடியான ஆபத்துகளை ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், எதிா்காலத்தில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ முறைகேடு காரணமாக நீண்ட கால நோய் துன்பம், நீங்காத மற்றும் தொடா்ச்சியான வலி, உடல் மற்றும் உறுப்புகள் செயல் இழப்பு போன்ற பக்க விளைவுகள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் இறப்பு கூட ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, October 9, 2021, 17:00 [IST]
Desktop Bottom Promotion