இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விடுவார்களாம் தெரியுமா?

மற்றவர்களை வசீகரிக்கும் குணம் என்பது பொதுவாக அனைவரும் கற்றுக்கொண்டதாகவும், புத்தகங்களை படித்து தெரிந்து கொள்பவராகவும் இருப்பார்கள். ஆனால் சிலருக்கு இது அவர்களின் பிறவியிலேயே வரும்.

முதல் சந்திப்பு என்பது அனைத்து உறவுகளுக்கும் மிகவும் முக்கியாயமானதாகும். ஏனெனில் எந்த நீண்ட கால உறவிற்கும் முதல் சந்திப்பு என்பது மறக்கமுடியாத தருணமாக இருக்கும். இதுவரை பல நல்ல உறவுகளை முதல் சந்திப்பு சரியாக இல்லாததால் நம் வாழ்க்கையில் இழந்திருப்போம். இந்த முதல் சந்திப்பை வெற்றிகரமாக செய்ய கற்றுக்கொண்டாலே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் யாரையும் இழக்கமாட்டிர்கள்.

Zodiac Signs Who Make a Good First Impression

மற்றவர்களை வசீகரிக்கும் குணம் என்பது பொதுவாக அனைவரும் கற்றுக்கொண்டதாகவும், புத்தகங்களை படித்து தெரிந்து கொள்பவராகவும் இருப்பார்கள். ஆனால் சிலருக்கு இது அவர்களின் பிறவியிலேயே வரும். குறிப்பாக ஆண்களுக்கு இந்த குணம் இருப்பது அவர்களுக்கு கிடைத்த வரமாகும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் இயற்கையாகவே இருக்கும். இந்த பதிவில் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களை கவரக்கூடிய ராசிக்காரர்கள் யார் யாரென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

வாழ்க்கை நமக்கு தினமும் பல புதுப்புது அனுபவங்களை தந்துகொண்டேதான் இருக்கும். தினமும் பல புதிய நபர்களுடன் அறிமுகிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுடன் நீண்ட நாள் பழகுகிறோமோ, இல்லையோ அவர்கள் நினைவில் எப்பொழுதும் நாம் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் அதுதான் நமக்கு கிடைக்கும் பரிசாகும். தனித்துவம் என்னும் வரும்போது மோசமான சம்பவங்கள் கூட இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவ்வாறு இல்லாமல் நமது நகைச்சுவையாலோ, சமயோசித புத்தியாலோ அந்த தருணத்தை எதிரில் இருப்பவர்களுக்கு மறக்க முடியாத பசுமையான நினைவாக மாற்ற வேண்டும்.

முதல் சந்திப்பின் முக்கியத்துவம்

முதல் சந்திப்பின் முக்கியத்துவம்

வேலைக்கு செல்பவர்களுக்கும், தனக்கு பிடித்த பெண்ணை பார்க்க போகிறவர்களுக்கும் முதல் சந்திப்பின் முக்கியத்துவம் நன்கு தெரியும். ஏனெனில் முதல் சந்திப்பில் இவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் சூழலை இவர்களுக்கு எதிரானதாக மாற்றலாம். பெண்களுக்கு ஆண்களை கவர்வது என்பது மிகவும் சுலபமானது, ஆனால் ஆண்களுக்கோ பெண்களை கவர்வது என்பது உலகிலேயே மிகவும் கடினமான ஒன்றாகும். ஒருவரை கவர்வதற்கு 7 நொடிகள் போதுமென்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களை முன்னிலை படுத்திக்கொள்வதில் எப்பொழுதும் சிறந்தவர்களாக இருப்பார்கள். பொருத்தமான உடை அணிவதோடு இவர்கள் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை இருக்கும். இவர்கள் மற்றவர்கள் தங்களை நினைவில் வைத்துக்கொள்ள வலிய சென்று எதையும் செய்ய தேவையில்லை. நட்பாக பழகக்கூடிய இவர்கள் பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள், இவர்களின் பேச்சுக்கள் எப்பொழுதும் இவர்களை மையப்படுத்தியே இருக்காது. இவர்கள் கூட்டத்தில் இருந்து தான் தனியாக பிரகாசிக்க கூடுதலாக எதையும் செய்ய தேவையில்லை என்பதை நன்கு உணர்ந்தவராக இருப்பார்கள்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் உற்சாகமும், ஆர்வமும்தான் மற்றவர்கள் இவர்களை எப்பொழுதும் மறக்காமல் இருக்க முக்கிய காரணமாகும். இவர்கள் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களை கவர இவர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அவர்களின் உடல் மொழிதான். இவர்கள் சந்திக்கும் புதிய நபர்கள் இவர்களை சாதரணமாக நினைக்கும் போது இவர்களின் உடல்மொழியும், குறும்பும் இவர்களின் இடத்தை தக்கவைக்க உதவும். இவர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் மற்றவர்களை இவர்களை நோக்கி எளிதில் ஈர்க்கும், இவர்கள் உதடுகளால் சிரிப்பதை காட்டிலும் கண்களால் சிரித்தே மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் புதிதாக ஒருவரை சந்திக்க போகிறோம் என்று போலி ஆர்வம் எப்போதும் காட்ட மாட்டார்கள், எதார்த்தத்தில் அவர்கள் அதை அனுபவிப்பார்கள். இவர்கள் சிறந்த உள்ளுணர்வை கொண்டிருப்பார்கள். அதனால் உடனடியாக என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை அறிவார்கள் இதுவே மற்றவர்களை இவரை நோக்கி நகர்த்தும். இவர்கள் சிறந்த கவனிப்பாளராக இருப்பார்கள், ஏனெனில் அனைத்து விவாதங்களிலும் சுவாரஸ்யமான ஒன்றை கண்டுபிடித்து விடுவார்கள். இவர்கள் முதல் சந்திப்பில் மற்றவர்களை கையாளும் விதம் அவர்களுக்கு இவரை மீண்டும் மீண்டும் பார்க்கும் எண்ணத்தை தூண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பணிவானவர்களாக இருப்பார்கள், ஆனால் மற்றவர்களை முதல் சந்திப்பிலேயே எப்படி கவர்வது என்பது இவர்க்ளுக்கு கை வந்த கலையாக இருக்கும். அவர்களின் ஸ்டைலும், கவர்ச்சிகரமான அணுகுமுறையும் மற்றவர்கள் எப்பொழுதும் இவர்களுடன் இருக்க விரும்பும்படி செய்யும். ரிஷப ராசிக்காரர்கள் கண்ணியமாக இருப்பதும், அமைதியாக இருப்பதும் சலிப்பான விஷயமல்ல என்று நம்பக்கூடியவர்கள், மற்றவர்களின் மரியாதையை குறைக்காமல் தங்களுக்கான மரியாதையை பெறுவதில் வல்லவர்கள். இவர்கள் காட்டும் பணிவே அனைத்தையும் இவர்களின் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறக்கூடிய, அற்புதமான பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள், மிதுன ராசிக்காரர்கள் இருந்தால் அந்த இடமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அனைவரும் நினைப்பார்கள். திறந்த மனதுள்ள இவர்கள் அனைவரையும் வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்பவராக இருப்பார்கள். இவர்களின் உடல்மொழி முதன் முதலாக இவர்களை பார்பவர்களை கூட இவர்கள் பேசுவது உண்மைதான் என்று நம்பும்படி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் முதல் சந்திப்பிலேயே எப்படி கவர வேண்டும் என்று திட்டம் தீட்டி செயல்படுவார்கள், அழகான உடை, பயனுள்ள பேச்சு, பதட்டமில்லாத அணுகுமுறை என இவர்கள் செய்யும் அனைத்தும் எதிரில் இருபவர்களை அசரடிக்கும். யாரை சந்திக்க போகிறோம், எந்த சூழ்நிலையில் சந்திக்க போகிறோம் என்பதை நன்கு ஆராய்ந்து அதற்கேற்றாற் போல செயல்படக்கூடியவர்கள். சூழ்நிலைகள் இவர்களுக்கு ஏற்றார் போல இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களின் சமயோசித புத்தியை பயன்படுத்தி எளிதில் எதிரில் இருப்பவர்களை கவர்ந்து விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion