Latest Updates
-
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் பிறருக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பார்களாம்...!
விட்டு கொடுத்து வாழ்வது சுயநலமாய் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருப்பதற்கான எளிய வழி என்பதை பலரும் அறிவதில்லை.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் எண்ணமாகும். அதற்கான முயற்சிகளிலும் அனைவரும் ஈடுபடுகிறோம். ஆனால் சுயநலமாக சிந்திப்பதும் தன்னலத்திற்கான செயல்களை செய்வதும் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எளிய வழி என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறர்கள்.

உண்மையில் விட்டு கொடுத்து வாழ்வது சுயநலமாய் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருப்பதற்கான எளிய வழி என்பதை பலரும் அறிவதில்லை. மற்றவர்களுக்காக விட்டு கொடுப்பதோ அல்லது தியாகம் செய்வதோ பெரும்பாலும் முட்டாள்தனம் என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த விட்டு கொடுக்கும் குணம் சிலருக்கு அவர்களின் பிறந்த ராசி மூலம் பிறவியில் இருந்தே வரும். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிகள் அதிகம் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் பிறருக்காக விட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு செய்யும்போது தனக்கான அங்கீகாரம் கிடைக்காத போது அது அவர்களுக்குள் சிக்கலான மனநிலையை உண்டாக்கும். இந்த மனநிலை அவர்களுக்குள் அதிகரிக்கும் போது அது அவர்களுக்குள் தன்னை தவிர மற்ற அனைவரும் சுயநலவாதிகள் என்ற எண்ணம் வளரும். மற்றவர்களுக்கு தங்கள் ஆற்றலை வழங்குவதன் மூலம் தான் எதையும் இழக்கப்போவதில்லை என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கும். சிந்தனையற்ற, உணர்ச்சிகளற்றவர்களுடன் பழகுவது தங்களின் துரதிர்ஷ்டம் என்று கருதுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் அதிக உணர்ச்சிகள் உடையவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் வெடித்து சிதறும் சூழ்நிலை வரை பொறுமையை கடைபிடிப்பார்கள். அவர்கள் தங்கள் பணம், நேரம், ஆற்றல் என அனைத்தையும் மற்றவர்களுக்காக செலவிடும் போது அதற்கான பாராட்டை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் ஏன் மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடன் இருப்பவர்கள் இவர்களை பாராட்டினாலே போதும் இவர்கள் விட்டுக்கொடுத்து கொண்டேதான் இருப்பார்கள்.

மீனம்
ஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்கும்போது இவர்கள் அது தனது தவறல்ல தான் உதவி செய்யத்தான் முயன்றேன் என்று கூறுபவர்களாக இருப்பார்கள். தவறு செய்தவர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் மறுவாய்ப்பை கொடுக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் எதனையும் தங்களுக்கு சொந்தாமாக நினைத்து கொள்வதில்லை, அதனால தங்களுக்கு எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை என்று நம்புகிறவர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் மனசாட்சியை பற்றியும், இரக்க குணம் பற்றியும் எப்பொழுதும் பெருமையாக எண்ணிக்கொள்வார்கள். எனவே அவர்களின் தியாகத்தால் ஏதாவது தவறு நடந்தால் அதனை தனது தவறு என்று கூறமாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் சரி செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் அவர்கள் ஒட்டுமொத்த உலகமும் தனக்கு எதிராக இருக்கிறது என்று நினைப்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களின் பிரச்சினையே நம்பிக்கை தொடர்பானதுதான். ஏனெனில் இவர்கள் ஒருவரை நம்பியதால் ஏற்கனவே காயம் பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் அதனை செய்ய தயங்குவார்கள். அதனால் அவர்கள் அதற்கு பின் அனைவரின் உள்நோக்கங்களையும் சந்தேகிப்பார்கள், இதனால் அவர்கள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். இவர்களின் விட்டுக்கொடுக்கும் குணத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது எப்பொழுது தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்கள் அதை செய்வதை நிறுத்தி விடுவார்கள். அவர்களால் அதுவரை பயனடைந்தவர்கள் அதன்பின் அவர்களை தூற்ற தொடங்கி விடுவார்கள்.



Click it and Unblock the Notifications