For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமா செல்போன்ல பேசினாதால தலையில கொம்பு முளைத்த விபரீதம்... நீங்களே பாருங்களேன்...

அதிக அளவு மொபைல் போன் பயன்படுத்துகிற இளம் வயதினருக்கு தலையில் கொம்பு முளைக்கிறதாம். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? கதை விடுகிறோம் என்று தோன்றுகிறதா? இல்லவே இல்லை. நிஜமாகவே தான். தொடர்ந்து படித்து முழுவதை

|

குழந்தை வளர்ப்பு என்பது சவாலான ஒரு காரியம். அதுவும் இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் எல்லா நேரமும் மொபைல் போன், டேபிலேட், லேப் டாப், கம்ப்யுட்டர் என்று எல்லா நேரமும் எதையாவது பார்த்தபடி உள்ளனர். குழந்தை பிறந்த நாள் முதல் இந்த அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

Youngsters

தொடக்க காலத்தில் குழந்தைகள் மொபைல் போன் பிடித்துக் கொண்டு பேசுவது, விளையாடுவது என்பது தாய்மார்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அடுத்த சில வருடங்களில் அவர்கள் முற்றிலும் இவைகளுக்குள் மூழ்கி இருப்பதைக் கண்டு அவர்கள் மனம் கலங்கவே செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொபைல் போன்

மொபைல் போன்

பிள்ளைகளுக்கு உண்டாகும் தலைவலி முதல் அவர்கள் பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்குவது வரை எல்லாவற்றிற்கும் அவர்களின் மொபைல் மோகம் தான் காரணம் என்று தாய்மார்கள் கோபம் கொள்கின்றனர். இப்போது ஒரு புதிய பிரச்சனை. ஆம், அதிக அளவு மொபைல் போன் பயன்படுத்துகிற இளம் வயதினருக்கு தலையில் கொம்பு முளைக்கிறதாம். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? கதை விடுகிறோம் என்று தோன்றுகிறதா? இல்லவே இல்லை.. நிஜமாகவே தான். தொடர்ந்து படித்து முழுவதையும் அறிந்துக் கொள்ளுங்கள்.

MOST READ: மூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா? அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...

ஸ்மார்ட்போன் பயன்பாடு

ஸ்மார்ட்போன் பயன்பாடு

இன்றைய நாட்களில் மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினருக்கு தலையின் பின்புறம் கொம்பு முளைக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றைப் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் தலையில் கூர்முனைகள் கொண்ட எலும்பு ஒன்று வளர்வதாக உண்மையில் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் உண்மை.

பாதிப்புகள்

பாதிப்புகள்

தற்போது சில காலங்களாக சில நபர்களுக்கு தலையின் பின்புறம் பிடரியில் ஒரு அசாதாரண புடைப்பு ஏற்படுவதாக ஆறாய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் enlarged external occipital protuberances என்று கூறுகின்றனர். இது மண்டையோட்டின் அடிப்பகுதியில் காணப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இந்த நிலை மிகவும் அரிதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது, நமது விரல்கள் கொண்டு தொடும்போது அடையாளம் காணக்கூடிய அளவிற்கு இவை தெளிவாக தெரிகிறது. குறிப்பாக முடி இல்லாத வழுக்கைத் தலையில் இவை தெளிவாக காணக்கூடியதாக உள்ளன.

MOST READ: சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்? எப்படி தடுக்கலாம்?

கொம்பு முளைத்தது

கொம்பு முளைத்தது

இந்த வகை எலும்பு இளம் வயதினருக்கு மிக விரைவாக வளருவதாக இந்த நிலை பற்றி மேலும் அறியப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் ஆய்வறிக்கையில், 18-30 வயது உள்ள இளம் வயதினருக்கு இந்த கட்டி பரவலாக காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக் கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

இந்த கண்டுபிடிப்பை உறுதி செய்வதற்கு, 18-86 வயது வரை உள்ள நபர்களை தேர்வு செய்து, அவர்களின் மண்டை ஓடு ஸ்கேன் செய்யப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக நபர்களுக்கு இந்த எலும்பு புடைப்பு காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

இன்றைய நாட்களில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுவதற்கு காரணம் , மக்கள் கீழே குனிந்து பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவது தான் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றை குனிந்தபடி பார்த்துக் கொண்டே இருப்பதால், அதிகம் பயன்படுத்தப்படாத இந்த பகுதி அதிக சிரமத்தை ஏற்றுக் கொள்கிறது. இதனால் இந்த பகுதிகளில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

MOST READ: இந்த இலை பார்த்திருக்கீங்களா? தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...

மருத்துவ சோதனைகள்

மருத்துவ சோதனைகள்

மண்டை ஓட்டை நேராக நிறுத்தி வைப்பதற்காக முயற்சித்து, கழுத்தையும் தலையின் பின் பகுதியையும் இணைக்கும் தசைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இந்த தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் மாறுகின்றன. இதனால் உடற் கூட்டில் ஒரு புதிய அடுக்கு எலும்பு வளர வழிவகுத்து, இந்த பகுதியை வலுப்படுத்தவும் விரிவாக்கவும் உதவுகிறது.

தற்போதைய நாட்களில் இந்த எலும்பு புடைப்பின் அளவு சராசரியாக 2.6 செமி (1 இன்ச்) இருப்பதாகவும் இந்த அளவு 1996ம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவை விட பெரிதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நமது எதிர்கால சந்ததிகள் இந்த வகை கொம்புகளுடன் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Youngsters Are Developing Horns By Excess Use Of Mobile Phones

If you have an Indian mum, then you know how your mum relates your excessive use of mobile to all the problems that you have in life! From your headache to your lower grades in academics, all the problems are blamed on mobile phones.
Story first published: Tuesday, June 25, 2019, 13:02 [IST]
Desktop Bottom Promotion