For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனை கட்டிவைத்து அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சோகத்தின் உச்சம்

|

கணவனை அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சந்தேகத்தால் வந்த கோர சம்பவம் கேட்கவே நம்முடைய மனதைப் பதைபதைக்க வைக்கிறது. அப்படியென்றால் அந்த குடும்பத்தின் நிலையை கொஞ்சம் யோசித்துதான் பாருங்கள். கண்முன்னே ஒரு குடும்பம் இப்படி சிதைந்து போனது எதனால்? இதோ பார்க்கலாம் வாருங்கள்.

சந்தேகத்தால் தன்னுடைய வாழ்ககையைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படி அதே சந்தேகத்தால் ஒரு கும்பமே நிர்மூலமாகிப் போன கதை தான் இது. தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகான குடும்பம்

அழகான குடும்பம்

அது ஒரு 5 பேர் கொண்ட குடும்பம். ரவிக்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு வயது ஏறத்தாழ 40 இருக்கும். அவரோபக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரிய துணிக்கடையில் உள்ள துணி தைக்கும் கடையில் டெய்லராக வேலை பார்த்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் சாந்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இப்படி அழகாக குதூகலமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் தான் சந்தேகம் என்றும் சூறாவளி வீசத் தொடங்கியது.

MOST READ: வீட்டுகிட்ட ஏலியனை பார்த்தேன் - ஒரு பைத்தியம் மோடிக்கு அனுப்பிய சுவாரஸ்ய கடிதம்... இதோ உங்களுக்காக

நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகம்

மனைவி சாந்தியின் நடத்தையின் கணவன் ரவிக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்த வண்ணம் இருந்திருக்கின்றன.

மகள் தற்கொலை

மகள் தற்கொலை

ஒருகட்டத்தில் தாய்க்கும் தந்தைக்கும் இப்படி தொடர்ந்து பிரச்சினையாக இருப்பது கண்டு மன உளைச்சலுக்கு ஆளான ரவிக்குமாரின் மூத்த மகள் (வயது 15) தற்கொலை என்னும் விபரீத முடிவெடுத்து மரணித்துள்ளார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் மனைவியின் மீது இருந்து சந்தேகம் தீராமல் சண்டை போடுவதுமாக பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ் நாடகம்

ஆம்புலன்ஸ் நாடகம்

சில நாட்களுக்கு முன்பு கணவர் ரவிக்குமாரை படுகாயங்களுடன் அரசு ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார் மனைவி சாந்தி. தன்னுடைய கணவர் ரவிக்குமார் மதுபோதையில் தவறி கீழே விழுந்துவிட்டதாக சாந்தி கூறியிருக்கிறார். இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக நகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்துபோனார்.

MOST READ: பெண்களோட செக்ஸ் ஆர்வம் குறையறதுக்கும் மாதவலிக்கு காரணமா? செக்ஸ் டாக்டர் என்ன சொல்றார் தெரியுமா?

வழக்கு - விசாரணை

வழக்கு - விசாரணை

அதன்பின் போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியது. போலீசாரின் முதல் சந்தேகப் பார்வை ரவிக்குமாரின் மனைவி சாந்தியின் மீதே விழுந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடததிய போதுதான் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளன.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

மனைவி சாந்தியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மனைவி சாந்தியுடன் மீண்டும் சண்டையில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சாந்தியின் தம்பி ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அக்காவின் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் கண்டை நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய கண்முன்னே தன் அக்காவை மாமா திட்டுவதைப் பார்த்து மாமாவைக் கண்டித்தார் ராஜ்குமார்.

அடித்தே கொன்றாள்

அடித்தே கொன்றாள்

இதனால் வாக்குவாதம் மேலும் முற்றிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் சாந்தி, அவருடைய தம்பி ராஜ்குமார் மற்றும் சாந்தியின் 16 வயது உடைய மூத்த மகன் ஆகிய மூவரும் ரவிக்குமார் கயிறால் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டு குச்சியால் பலமாக அடித்திருக்கிறார்கள். இதில் ரவிக்குமாரின் தலையில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது. கயிறால் அடித்து, குரல்வளையில் கால் வைத்து மிதித்து துன்புறுத்தியிருக்கின்றனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

சிகிச்சை பலனின்றி மரணம்

அடுத்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற சாந்தி, தன்னுடைய கணவன் குடிபோதையில் தவறி கீழே விழுந்து விட்டார். அதனால் தலையில் பலமாக அடிபட்டுள்ளது என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது தான் தெரிந்தது மனைவியே கணவனை கட்டி வைத்து அடித்து கொன்றிருக்கிறார் என்று.

MOST READ: இந்த 4 ராசிக்காரங்க மட்டும் ஏன் பொண்ணுங்களோட ஒத்துப்போகவே மாட்றாங்க...

நிர்கதியான குடும்பம்

நிர்கதியான குடும்பம்

இதையடுத்து சாந்தி, அவருடைய மூத்த மகன் மற்றும் சாந்தியின் தம்பி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகம் என்ற பிசாசு வீட்டில் மூவரை சிறை செல்ல வைத்து, இரண்டு உயிரைக் காவு வாங்கியதால், ரவிக்குமார் - சாந்தி தம்பதியினரின் கடைசி பெண் குழந்தை தனிஷா (பெயர் மாற்றப்பட்டது) நிர்கதியாக நின்று தவித்துக் கொண்டிருக்கின்றாள்..

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகமும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புபளுகம் ஒரு குடும்பத்தையு சிதைத்து விட்டது. சந்தேகம் என்பது குடும்பத்தை சீரழிக்கும் கொடிய அரக்கன் என்பதைப் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அழகாய் கட்டிய குடும்பம் என்னும் கூடு சிதைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wife Who Tied And Murdered Her Husband

a man killed by his wife. always he was fight with her.oneday he drunk and started to fight with his wife. that time his brother-in-law got angry on hime. noth of them beaten, Tied And Murdered Her Husband
Story first published: Monday, January 28, 2019, 12:20 [IST]