For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் கோவிலில் தேங்காய் உடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் தெரியுமா?

கோவில்களில் எந்தவொரு நல்ல காரியம் செய்வதற்கு முன்னும் தேங்காய் உடைக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது, குறிப்பாக பிள்ளையார் கோவில்களில்.

|

இந்தியாவில் கோவில்கள் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாய் இருப்பதாகும். இந்தியாவின் வரலாற்றையும், கோவில்களையும் ஒருபோதும் பிரிக்க இயலாது. அந்த அளவிற்கு கோவில்கள் இந்திய சமூகத்தின் அடையாளங்களாக இருக்கிறது. கோவில்கள் எப்படி பல நூறாண்டுகளை கடந்தும் இன்றும் அழியாமல் இருக்கிறதோ அதேபோல கோவில்களில் செய்யப்படும் சில சடங்குகளும் இன்றும் அழியாமல்தான் இருக்கிறது.

Why women arent allowed to break coconuts in the temple

ஆண்டுகள் பல கடந்தும் நம் சமூகத்தின் வழிபாட்டு முறையில் முக்கியமாக இருக்கும் ஒரு சடங்கு கோவில்களில் தேங்காய் உடைப்பதாகும். கோவில்களில் எந்தவொரு நல்ல காரியம் செய்வதற்கு முன்னும் தேங்காய் உடைக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது, குறிப்பாக பிள்ளையார் கோவில்களில். ஆனால் வேதங்களின் படி பெண்கள் தேங்காய் உடைப்பது என்பது அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். இவ்வாறு கூறப்படுவதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவில் பிரசாதம்

கோவில் பிரசாதம்

தேங்காய் இல்லாத சடங்குகளையே நீங்கள் இந்தியாவில் பார்க்க முடியாது. சுப காரியங்களாக இருந்தாலும் சரி, துக்க காரியங்களாக இருந்தாலும் சரி அதில் தேங்காய் இல்லாமல் இருக்காது. கோவில்களில் கடவுளுக்கு படைக்கப்படும் முக்கியமான பொருளாக தேங்காய் இருக்கிறது. அதன்பின் கடவுளின் பிரசாதமாக பக்தர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

தூய்மையான பொருள்

தூய்மையான பொருள்

கடவுளுக்கு தேங்காய் படைக்கப்படுவதற்கான முக்கியமான காரணம் அதுதான் இயற்கை படைத்து மனிதனால் இன்றளவும் மாசடையாத தூய்மையான பொருளாக இருக்கிறது. தேங்காய் தண்ணீரும் அதற்குள் இருக்கும் வெள்ளை பகுதியும் கலப்படமில்லாத தூயப்பொருள் என்பதால் கடவுளுக்கு படைக்கப்படுகிறது. இது இப்பொழுதும் சுத்தமான பொருளாக இருக்க காரணம் இதனை பாதுகாக்கும் வலிமையான ஓடுதான்.

கடவுளுக்கு பிடித்த பொருள்

கடவுளுக்கு பிடித்த பொருள்

அனைத்து சுபகாரியங்களுக்கு முன்னரும் வணங்கப்படும் கடவுளென்றால் அது விநாயகர்தான். தேங்காய் விநாயகருக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றாகும். இதனால்தான் புதிய வாகனங்கள் வாங்கினாலோ அல்லது புது வீட்டிற்கு சென்றாலோ தேங்காய் முதலில் உடைக்கப்படுகிறது.

MOST READ: இந்த இரண்டு கிழமைகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்... நீங்க பிறந்த கிழமையானு பாருங்க..!

கர்வத்தை உடைத்தல்

கர்வத்தை உடைத்தல்

தேங்காய் உடைக்க மற்றொரு காரணம் கோவிலில் தேங்காய் உடைப்பது உங்கள் கர்வத்தை உடைப்பதன் அடையாளமாகும். தேங்காய் மனித உடலை பிரதிபலிக்கிறது, அது கடவுளின் முன்னால் உடைக்கப்படுகிறது. இது உணர்த்துவது என்னவெனில் நம்முடைய கர்வத்தை உடைத்து நமது ஆன்மாவை பிரம்மத்துடன் இணைப்பதாகும். இத்தனை சிறப்புகளை இருந்தாலும் பெண்கள் கையால் ஒருபோதும் தேங்காயை உடைக்கக்கூடாது.

வீட்டின் லக்ஷ்மி

வீட்டின் லக்ஷ்மி

வீட்டில் இருக்கும் லக்ஷ்மி என்றால் அது பெண்தான். எனவே அவர்கள் உடைப்பது மற்றும் அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இது உங்கள் குடும்பத்தின் மீது லக்ஷ்மி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

பலி கொடுப்பது

பலி கொடுப்பது

தேங்காய் உடைப்பதும் ஒருவகையில் பலி கொடுப்பது போன்றதுதான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதுபோன்ற செயல்களை பெண்களின் கையால் செய்வது அவர்களின் குடும்பத்திற்கு நல்லதல்ல.

வாழ்க்கையை முடிப்பது

வாழ்க்கையை முடிப்பது

தேங்காய் ஒருவகையில் விதைதான். அதனை உடைப்பது என்பது ஒரு வாழ்வை முடிப்பது போன்றது. இந்த வேலையை பெண்கள் செய்வது பாவச்செயல் எனவும், இவ்வாறு செய்வது அவர்களின் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் வேதங்கள் கூறுகிறது.

MOST READ: இந்த ரேகை கைகளில் இருக்கும் ஆண்கள் காமத்தால் அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொள்வார்கள்...!

கர்ப்பிணி பெண்

கர்ப்பிணி பெண்

இது கர்ப்பிணி பெண்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையும் ஒரு விதை போன்றதுதான். எனவே கர்ப்பிணி பெண்கள் அவர்கள் கையால் ஒரு விதையை உடைப்பது நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why women aren't allowed to break coconuts in the temple?

In most of the Indian temples women aren't allowed to break coconuts.
Story first published: Wednesday, March 13, 2019, 17:27 [IST]
Desktop Bottom Promotion