Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
இராமருடன் லக்ஷ்மணன் வனவாசத்திற்கு செல்லும்போது ஊர்மிளா ஏன் அவரை தடுக்கவில்லை தெரியுமா?
லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது.
இராமாயணத்தில் அனைவரும் இராமர், சீதை, அனுமன், இராவணன், லக்ஷ்மணன் இவர்களை பற்றித்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இராமயணத்தில் புகழ் பெறாத பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா ஆவார்.

லக்ஷ்மணனுக்கும், ஊர்மிளாவுக்கும் இருந்த காதலும், அவர்கள் இருவரின் தியாகமும் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானது. லக்ஷ்மணன் தன் சகோதரனுடன் வனத்திற்கு செல்கிறேன் என்று கூறியபோது ஊர்மிளா எந்த தடங்கலும் கூறாமல் அவரை அனுப்பி வைத்தார். ஊர்மிளா லக்ஷ்மணனை ஏன் தடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த ஓவியர்
இராமரின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஊர்மிளாவும்தான். ஊர்மிளா ஓவியக்கலையில் சிறந்து விளங்கினார். இராமருக்கு முடிசூட்டுவது போன்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். விழா நடைபெறுவதற்கு முன்னரே ஊர்மிளா ஓவியம் வரைய தொடங்கி விட்டார்.

லக்ஷ்மணனின் வருகை
ஊர்மிளா ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது திடீரென லக்ஷ்மணன் வந்துவிட்டார். அவரின் எதிர்பாராத வருகையால் கவனம் சிதறிய ஊர்மிளா தனது கையில் இருந்த வண்ணப்பூச்சை ஓவியத்தின் மீது கொட்டிவிட்டார்.

ஓவியம் பாழாகிவிட்டது
ஊர்மிளாவின் இந்த செயலால் ஓவியம் பாழாகிவிட்டது. இது ஒரு அபசகுணம் என்று ஊர்மிளா கருதினார். இதனால் மோசமான சம்பவம் ஏதோ நடக்க போகிறது என்று லக்ஷ்மணனிடம் கூறினார்.

லக்ஷ்மணரின் முடிவு
லக்ஷ்மணன் தான் வந்ததற்கான காரணத்தை கூறினார். கைகேயி செய்த சதியையும் அதனால் முடிசூட்டு விழா நடக்காது என்பதையும் கூறினார். இதனால் இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதையும் அவருடன் தானும் வனவாசம் செல்லவிருப்பதாகவும் கூறினார்.

ஊர்மிளா சொன்னது சரிதான்
ஓவியம் பாழடைந்தது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் அறிகுறி என்று சந்தேகித்த ஊர்மிளா இப்போது தனது சந்தேகம் உறுதியாகி விட்டதை உணர்ந்தார். ஆனால் ஊர்மிளா அதனை நினைத்து வருந்தவில்லை. அவர் எந்த வகையிலும் லக்ஷ்மணனின் முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை.

ஊர்மிளாவின் முடிவு
ஒரு மனைவியாக தான் லக்ஷமணனின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும், ஆனால் இப்போது தான் உங்களுடன் வனவாசத்திற்கு வந்தால் லக்ஷ்மணன் தன்னுடைய தமையனுக்கு முழுவதுமாக இராமருக்கு சேவை முடியாது என்று கூறினார்.

லக்ஷ்மணரின் நிம்மதி
லக்ஷ்மணருக்கு இருந்த பெரிய கவலை இதுவாகத்தான் இருந்தது. லக்ஷ்மணன் ஊர்மிளாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஆனால் ஊர்மிளாவின் தியாகத்தையும், கடமையுணர்ச்சியையும் பார்த்த பிறகு லக்ஷ்மணனுக்கு ஊர்மிளா மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தது.



Click it and Unblock the Notifications
