For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா?

ராமேஸ்வரம் கோயில் பற்றி முக்கியமான சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

By Mahibala
|

இந்தியாவில் புகழ்ப்பெற்று விளங்கும் புண்ணியத் திருத்தலங்களுல் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பாம்பன் தீவின் மேற்குப் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Rameshwaram

இந்தியா முழுவதிலுமிருந்து ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்ககணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து இறையருளைப் பெறுகின்றனர். குறிப்பாக மகாசிவரிராத்தி அன்று இங்கு நடக்கும் ஆன்மீக விழா மிகவும் சிறப்புக்கு உரியதாகும். இராமநாதசுவாமி கோவிலைப் பற்றிய பல அறிய தகவல்களை இங்குக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராமரால் கட்டப்பட்ட கோவில்.

இராமரால் கட்டப்பட்ட கோவில்.

விஷ்ணுவின் அவதாரமான இராமரால் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இராமநாதன் என்னும் சொல்லுக்கு "இராமனின் தலைவன்" என்பது பொருளாகும். இாமன் தான் வணங்கும் தலைவனான சிவனுக்குக் கோவில் கட்டி வழிபாடு செய்த திருத்தலம் என்பதால் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் மிகுந்த சிறப்புக்கு உரியதாகத் திகழ்கிறது. இராமாயண காலத்தில், இலங்கையில் நடந்த போரில் ஏற்பட்ட துயரங்களுக்கு ஆறுதல் தேடும் வகையில் இராமன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

MOST READ: ஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும்? தினமும் சொன்னால் என்ன நடக்கும்?

அருட்பெரும் ஜோதிலிங்கம்

அருட்பெரும் ஜோதிலிங்கம்

இந்தியாவில் சுயம்புவாகத் தோன்றிய 12 ஜோதிலிங்கத் தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இப்பன்னிரண்டு ஜோதிலிங்கத்தையும் வழிபாடு செய்பவர்கள், சிவபெருமானின் அருளால், பிறப்பு இறப்பு என்னும் மனித சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி என்னும் முழுமையை அடைய முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

நான்கு புண்ணியத்தலங்களுள் ஒன்று

நான்கு புண்ணியத்தலங்களுள் ஒன்று

மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் வரையறை செய்யப்பட்ட நான்கு புண்ணியத் தலங்கள், பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி ஆகியவை. தற்காலத்தில், பத்ரிநாத், துவாரகா, பூரி, இராமேஸ்வரம் ஆகியவை நான்கு புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன. இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த நான்கு புண்ணியத் தலங்களுக்கும் சென்று வழிபட்டால் தங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.

MOST READ: உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...

5. இணையற்ற இரு லிங்கங்கள்

5. இணையற்ற இரு லிங்கங்கள்

"ராமலிங்கம்", "விஸ்வலிங்கம்" என்னும் இரண்டு லிங்கங்கள் அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். சிவ வழிபாட்டுத் தலத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் இந்த லிங்கத்தை, இராமன், சீதாதேவி மற்றும் அனுமனோடு சேர்ந்து வழிபட்டு மகிழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த இரு லிங்கங்களும் உருவானது குறித்த சுவராஸ்யமான வரலாறும் உண்டு.

6. இரு லிங்கங்களின் கதை

6. இரு லிங்கங்களின் கதை

இராமநாதசுவாமி கோவிலில் ஒரு பெரிய லிங்கத்தை வைத்து வழிபாடு செய்ய நினைத்தார் இராமர். இமாலய மலையிலிருந்து பெரிய லிங்கத்தைச் சுமந்து வருமாறு அனுமனைக் கேட்டுக் கொண்டார் இராமர். அனுமன் இமாலய மலையிலிருந்து லிங்கத்தை எடுத்துவருவதற்கு காலதாமம் ஏற்பட்டது. எனவே, தன்னுடைய நாதனின் ஆசையை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு சீதை கடற்கரையிலிருந்த மணலைத் திரட்டி ஒரு லிங்கத்தைச் செய்து கொடுத்தார். இவ்வாறாக அனுமனாலும், சீதாதேவியாலும் இராமநாதசுவாமி கோவிலுக்கு இரண்டு சிவலிங்கங்கள் உருவாக்கப்பட்டன.

7. ஆயிரங்கால் மண்டபம்

7. ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூண்களால் அமைக்கப்பட்ட பழங்கால மண்டபங்கள் உலகில் மிகச்சில இடங்களில மட்டுமே காணப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அத்தகைய இடங்களில் ஒன்று. இரமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவிலில் 1212 தூண்களோடு கூடிய வெளிப்பிரகார மண்டபம் அமைந்துள்ளது. இக்கோவிலின் இராஜகோபுரம் 53 மீட்டர் நீளமுடையது.

8. சந்நிதிகளின் சங்கமம்

8. சந்நிதிகளின் சங்கமம்

இராமரால் நிர்மாணிக்கப்பட்ட சிவபெருமான் சிலை மூலவராக கோயிலின் உள்ளே அமைந்துள்ளது. இக்கோயில் கருப்புநிறக் கிரானைட் கற்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் விமான கோபுரம் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலில், இராமநாதசுவாமி, விசாலாட்சி, பர்வதவர்த்தினி, சந்தானகணபதி, மகாகணபதி, சுப்பிரமணியர், சேதுமாதவர், மகாலட்சுமி, நடராஜர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்குத் தனித்தனியாக சிலைகளும் வழிபாட்டிடங்களும் அமைந்துள்ளன.

9. நன்மையளிக்கும் புண்ணிய தீர்த்தங்கள்

9. நன்மையளிக்கும் புண்ணிய தீர்த்தங்கள்

இக்கோயிலில் 22 புண்ணிய தீர்த்தத் தலங்கள் அமைந்துள்ளன. இராமன் தன்னுடைய அம்பறாத்தூணில் வைத்திருந்த 22 அம்புகளைக் குறிக்கும் வகையில் இந்த 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைவதற்குள் இந்தத் தீர்த்தங்களில் நீராடுவது பக்கதர்களின் முக்கியக் கடமையாகும்.

MOST READ: இந்த எட்டு விஷயத்த செய்றீங்களா? அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...

10. உலகின் மிக நீளமான பிரகாரம்.

10. உலகின் மிக நீளமான பிரகாரம்.

இராமநாதசுவாமி கோவிலின் சுற்றுப் பிரகாரம் உலகின் மிக நீண்ட பிரகாரமாகக் கருதப்படுகிறது. இப்பிகாரம் 6.9 மீட்டர் உயரமுடையது. கிழக்கு மற்றும் மேற்காக 400 அடி நீளமும், வடக்கு மற்றும் தெற்காக 640 அடி நீளமும் உடையது இப்பிரகாரம்15.5 அடி முதல் 17 அடிவரை அகலமுடையதாகும். இந்தச் சுற்றுப் பாதையின் மொத்த நீளம் 3850 அடியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Rama Build Shivan Temple In Rameshwaram

Ramanathaswamy Temple is a Hindu temple dedicated to the god Shiva. It is located on Rameshwaram, at the eastern side of the Pamban Island, in the state of Tamil Nadu, India. The temple is a holy site of immense importance for Hindus that attracts millions of pilgrims and massive devotees every year, especially during the festival of Maha Shivratri.
Story first published: Saturday, June 29, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion