இறந்த உடல்களை எரிப்பதற்கு பதில் இவர்கள் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்களாம் ஏன் தெரியுமா?

பார்சி இன மக்கள் பிணங்களை எரிக்கவும் மாட்டார்கள், புதைக்கவும் மாட்டார்கள். அதற்கு பதிலாக பிணம் தின்னும் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்கள்.

உலகில் மரணம் என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகும். மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்பது அனைத்து மதங்களிலும் இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். எனவே மரணத்திற்கு பிறகான ஆன்மாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைய பல்வேறு சடங்குகளை நாம் செய்கிறோம். குறிப்பாக இந்தியாவில் அதிகளவு இறுதி சடங்குகள் நடத்தப்படுகிறது.

Why Parsis Dont Bury or Burn Their Dead?

பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு இனமக்களும் பிணங்களை எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் பண்டைய காலங்களில் ஒருசில இனத்தவர்களின் இறுதிச்சடங்குகள் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக பார்சி இன மக்கள் பிணங்களை எரிக்கவும் மாட்டார்கள், புதைக்கவும் மாட்டார்கள். அதற்கு பதிலாக பிணம் தின்னும் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்கள். இந்த சடங்கிற்கு பின்னால் இருந்தால் அதிர்ச்சியான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டவர் ஆப் சைலன்ஸ்

டவர் ஆப் சைலன்ஸ்

பார்சி இன மக்களுக்கு ஜோரோஸ்ட்ரியர்கள் என்ற பெயரும் உண்டு. இவர்கள் இறுதிச்சடங்கிற்காக டவர் ஆப் சைலன்ஸ் என்னும் கட்டிடத்தை பயன்படுத்தினார்கள். இது வட்ட வடிவில் கட்டப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இந்த இடத்தில் இறந்த உடல்கள் பிணம் தின்னும் பறவைகளால் சிதைக்கப்படும்.

எப்போது தொடங்கப்பட்டது?

எப்போது தொடங்கப்பட்டது?

ஜோரோஸ்ட்ரியர்களின் குறிப்பு படி இந்த சடங்கு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இது ஆவணப்படுத்தப்பட்ட காலகட்டம் என்றால் அது 9 ஆம் நூற்றாண்டுதான். இந்த சடங்கிற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் பூமி மற்றும் நெருப்புடன் இறந்த உடல்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவை இரண்டும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

வித்தியாசமான சடங்கு

வித்தியாசமான சடங்கு

இந்த சடங்கை பற்றி கேள்விப்பட்ட யாராக இருந்தாலும் கண்டிப்பாக அதிர்ச்சியடையத்தான் செய்வார்கள். ஏனெனில் நமது உறவினரின் உடலை பறவைகள் துளையிடுவதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் அவர்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது. இந்த சடங்கிற்கான காரணங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

இறந்த உடல் 'நசு'

இறந்த உடல் 'நசு'

அவர்களின் பாரம்பரியத்தில் இறந்த உடல் 'நசு' என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் அசுத்தம் என்பதாகும். வெட்டப்படும் முடி மற்றும் நகங்கள் கூட அவர்களால் இவ்வாறுதான் கருதப்பட்டு வந்தது. இயற்கையை இந்த அசுத்த பொருட்கள் மாசுபடுத்துவதை தவிர்க்கவே இந்த முறை முன்மொழியப்பட்டது.

பிணத்திற்குள் ஆன்மா நுழையலாம்

பிணத்திற்குள் ஆன்மா நுழையலாம்

உடலை விட்டு பிரிந்த ஆத்மா மீண்டும் உடலுக்குள் நுழைய முயற்சி செய்ய இயலும், அப்படி நுழைந்தால் அதனுடன் தொடர்புடைய அனைத்தும் மாசுபட நேரிடும். எனவே வெண்டிடாட் என்று அழைக்கப்பட்ட மத திருச்சபை பேய்களை விரட்ட இறந்த உடலை இந்த முறையில் அப்புறப்படுத்தும் முறையை பரிந்துரைத்தது.

துன்பத்தை தவிர்க்க

துன்பத்தை தவிர்க்க

இறந்த உடலை எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போதோ அது பூமி அல்லது நெருப்புடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ஜோரோஸ்ட்ரியத்தில் இந்த இரண்டும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பூமியை தொடுவது தவிர்க்கப்பட்டால் இறந்தவர்களின் மறுவுலக வாழ்க்கையானது துன்பமின்றி இருக்கும் என இவர்கள் நம்பினார்கள். மேலும் பிணம்தின்னும் பறவைகள் சூரியனின் அடையாளம் என இவர்கள் கருதினார்கள்.

ஈரான் நடைமுறை

ஈரான் நடைமுறை

டவர் ஆப் சைலன்ஸ் அல்லது பிணத்தை அப்புறப்படுத்தும் பொதுவான இடம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னால் பண்டைய ஈரானில் மலைகள் இந்த சடங்கிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. கழுகுகள் போன்ற பெரிய பறவைகள் மாமிசத்தை உண்டுவிட்டு எலும்புக்கூடுகளை அங்கேயே விட்டு சென்றுவிடும்.

எலும்புகள் வயல்களில் பயன்படுத்தப்பட்டது

எலும்புகள் வயல்களில் பயன்படுத்தப்பட்டது

உடலின் மீதமுள்ள எலும்புகள் வயலில் உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. எலும்புகள் நன்கு காயும்வரை அவை சூரிய ஒளியில் வைக்கப்படும். இதில் சுவாரசியமானது என்னவெனில் எந்தவித கல்லரைகளும் கட்ட அங்கே அனுமதியில்லை.

தனித்துவமான சடங்கு

தனித்துவமான சடங்கு

இந்த சடங்கில் பல தனித்துவங்கள் இருந்தது, குறிப்பாக மிகவும் விரைவாக உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டது. பறவைகளுக்கு உடலின் சதைப்பகுதியை அப்புறப்படுத்துவதற்கு சராசரியாக 25 நிமிடங்களே போதுமானது. இதற்கென எந்த கட்டைகளோ, எரிபொருளோ தேவையில்லை, இதனால் பணமும் தேவைப்படவில்லை. ஏழைகளுக்கு உடலை அப்புறப்படுத்தவுதில் எந்த சிக்கல்களும் இல்லாமல் இருந்தது. பணக்காரர் முதல் ஏழைகள் வரை ஒரே மாதிரியாக அப்புறப்படுத்தபட்டதால் சமூகத்தில் சமநிலை நிலவியது.

பறவைகளுக்கு உணவு

பறவைகளுக்கு உணவு

இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம் ஆனால் இந்த முறையில் பறவைகளுக்கு உணவளிப்பதன் மூலம் அவர்கள் புண்ணியங்களை பெற்றனர். இறந்தும் பறவைகளுக்கு உணவானதால் அவர்களின் மறுவுலக வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்பப்பட்டது. இதில் ஆகச்சிறந்த சுவாரஸ்யம் என்னவெனில் பறவைகள் ஒருபோதும் சடங்குகள் செய்பவர்களை தாக்காது.

டவர் ஆப் சைலன்ஸ் அமைப்பு

டவர் ஆப் சைலன்ஸ் அமைப்பு

டவர் ஆப் சைலன்ஸின் ஒவ்வொரு அமைப்பும் பார்த்து பார்த்து கட்டப்பட்டது. இதில் சேரும் மழைத்தண்ணீர் கூட வெளியே வராத வண்ணம் பார்சி மக்கள் இதனை வடிவமைத்திருந்தனர். இதில் இருக்கும் மழைநீர் அதிலுள்ள வடிகட்டிகள் மூலம் நிலத்தடி கிணறுகளுக்குள் நுழைந்து விடும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion