இராவணன் இலங்கையை பெறுவதற்காக சிவபெருமானுக்கு செய்த துரோகம் என்ன தெரியுமா?

சிவபெருமான் இலங்கையை இராவணனுக்கு கொடுத்ததற்கு பின்னால் பல சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது,.

அசுர வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கையை பற்றி நாம் நன்கு அறிவோம். இலங்கை முழுவதும் தங்கத்தால் நிரம்பி வழிந்தது அதனால்தான் அது பொன்னிலங்கை அல்லது ஸ்வர்ண இலங்கை என்னும் பெயர் பெற்றது. ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் உண்மையில் இலங்கை சிவபெருமானுக்கு சொந்தமானதாகும்.

golden Lanka to Ravana

சிவபெருமானிடம் இருந்து நயவஞ்சகமாக இராவணன் இலங்கையை பெற்றான். சிவபெருமான் இலங்கையை இராவணனுக்கு கொடுத்ததற்கு பின்னால் பல சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது, இலங்கையை கொடுத்தபின் அதற்கு சிவன் ஆற்றிய எதிர்வினையும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. இந்த பதிவில் இராவணன் எப்படி பொன்னிலங்கையை சிவபெருமானிடம் இருந்து பறித்தான் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராவணன்

இராவணன்

இராவணன் புகழ்பெற்ற முனிவரான விஷ்ரவிற்கும் அவரது மனைவி அசுர குல இளவரசியான கைகேசிக்கும் மகனாக பிறந்தார். இவர் தேவகனா என்னும் இடத்தில் பிறந்தார், இவரது தாத்தா புலஸ்தயர் பிரம்மாவின் பத்து மகன்களில் ஒருவராவர். மேலும் இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் விளங்கினார். இராவணன் பாதி பிராமணனும், பாதி ராட்சஷனும் ஆவான். அதனால்தான் இராவணன் பிரம்மராட்சஷன் என்று அழைக்கப்பட்டான்.

சிவபக்தி

சிவபக்தி

இராவணன் மிகச்சிறந்த ஞானியாகவும், சிவபக்தியில் ஈடு இணையில்லாதவதனாகவும் விளங்கினான். இராவணனுக்கு தச சீஷன் என்னும் பெயரும் இருந்தது. அதற்கு பொருள் பத்து தலைகளை உடையவன் என்பதாகும். இராவணனது பத்து தலைகளும் அவனுடைய ஞானத்தை குறிப்பதாகும். இந்த பத்து தலைகளும் 4 வேதங்களையும், 6 உபநிஷதங்களையும் குறைப்பதோடு 10 ஞானிகளின் திறமை இராவணனுக்கு இருப்பதை உணர்த்தியது.

கைலாய மலை

கைலாய மலை

சிவபெருமான் ஆசைகள் அற்றவர், உலக ஆசைகளை துறந்தவர். பார்வதி தேவி சிவபெருமானிடம் தங்களுக்கென ஒரு மாளிகையை கைலாய மலையில் கட்ட வேண்டும் என்று ஈசனிடம் கோரிக்கை வைத்தார். சிவனும் தன் மனைவியின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தார்.

தங்க கோட்டை

தங்க கோட்டை

சிவன் பார்வதியின் ஆசையை நிறைவேற்ற தயங்கவில்லை. தீவிர சிவபக்தனான இராவணன் சிவபெருமானை அணுகி சிவனுக்காகவும் , பார்வதிக்காகவும் கைலாயத்தில் தான் ஒரு தங்கத்தால் ஆன கோட்டையை கட்ட விரும்புவதாகவும் அதற்கு லங்கா என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறினான். சிவபெருமானும் இராவணனுக்கு கோட்டை கட்ட அனுமதி அளித்தார்.

குபேரன்

குபேரன்

இராவணன் கைலாயத்தில் கோட்டை கட்ட தேவையான தங்கத்திற்காக தனது சகோதரன் குபேரனை அணுகினார். யக்ஷர்களின் அரசனாக இருந்த குபேரன்தான் இந்திரனின் தங்கநகரமான அமராவதிக்கு பொறுப்பாளராக இருந்தார்.

விஸ்வகர்மா

விஸ்வகர்மா

குபேரன் ஈசனனுக்காக கோட்டை கட்டப்படுவதால் இராவணன் கேட்ட அளவிற்கு தங்கத்தை வாரிவழங்கினார். பிறகு இராவணன் கோட்டைகளை கட்டுவதில் வல்லவரான விஸ்வகர்மாவை அழைத்து ஈசனுக்காக தான் வழங்கும் தங்கத்தை கொண்டு கோட்டையை எழுப்பும்படி கூறினார். விஷ்வகர்மாவும் கற்பனைக்கு எட்டாத ஒரு பொன் கோட்டையை எழுப்பினார். இராவணன் அந்த கோட்டையை ஈசனுக்கு காணிக்கையாக கொடுத்தான்.

கிரகப்பிரவேசம்

கிரகப்பிரவேசம்

புது வீட்டிற்க்குள் செல்வதற்கு முன் கிரகபிரவேச பூஜை செய்வது வழக்கமாகும். இராவணன் அந்த பூஜையை செய்ய அழைக்கப்பட்டான், ஏனெனில் இராவணன் அளவிற்கு ஞானம் கொண்டவர்கள் அப்போது யாருமில்லை. இராவணன் மகிழ்ச்சியுடன் சிவனுக்காகவும், பார்வதிக்காகவும் பூஜையை செய்து முடித்தான்.

இராவணனின் தட்சணை

இராவணனின் தட்சணை

இராவணனுக்கு தட்சணை வழங்கும் நேரம் வந்தது. சிவனுக்கு வழங்கிய லங்கா கோட்டையை தனக்கு தட்சணையாக இராவணன் கேட்டபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சிவன் அவன் கேட்டபடியே கோட்டையை அவனுக்கு வழங்கினார். இராவணன் கோட்டையை எடுத்துக்கொண்டு பூமியின் தெற்கு புறம் சென்று அதனை அசுரர்களின் குடியிருப்பாக மாற்றிக்கொண்டான்.

இராமாயணம்

இராமாயணம்

இராமாயணத்தில் அனுமன் எவ்வாறு சீதையை தேடி இலங்கையை அடைந்தார், தன்னை அவமதித்ததால் இலங்கையை அவர் எப்படி எரித்தார் என்பது பற்றியெல்லாம் கூறப்பட்டிருக்கும். ஆஞ்சநேயர் ஈசனின் ருத்ர அவதாரங்களில் ஒருவர் ஆவார். ஆனால் செல்வம் மற்றும் அதிகார போதையில் இருந்த இராவணனால் ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம்தான் என்பதை உணர இயலவில்லை.

சிவபெருமானின் நெற்றிக்கண்

சிவபெருமானின் நெற்றிக்கண்

சிவபெருமான் தனக்கு தொந்தரவு ஏற்படும்போதும், தன்னை அவமதிக்கும் போதும் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறப்பார் என்று சிவபுராணம் கூறுகிறது. தனது அவதாரமான அனுமனை இராவணன் அவமதித்த போது சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்துதான் இலங்கையை எரித்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion