For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரத போரின் முடிவிற்கு பின் நடந்த துயர சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?

குருஷேத்திர போரின் முடிவுக்கு பின் பூமியின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குறைந்திருந்தது. இருசேனைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 30 லட்சம் வீரர்கள் இறந்திருந்தனர்.

|

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாடங்களையும் கொண்ட மாபெரும் இதிகாசம்தான் மகாபாரதம். இதில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நன்னெறிகள் இந்த காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருந்த கூடியவையாகும். மகாபாரதத்தில் நமக்கு தெரியாத கதைகள் பல உள்ளது. மகாபாரத போரின் பேரழிவிற்கு பிறகு பாண்டவர்களும், கிருஷ்ணரும் என்ன ஆனார்கள் என்று நமக்கு தெரியும்.

Why Kunti, Gandhari and Dhritarashtra decided to die together

ஆனால் பாண்டவர்களின் தாய் குந்தி மற்றும் கௌரவர்களின் பெற்றோர் திருதராஸ்டிரன் மற்றும் காந்தாரிக்கு என்ன நடந்தது என்பது நம்மில் பலரும் யோசிக்காத ஒரு விஷயமாகும். அவர்கள் மூவரும் தங்கள் முடிவை தானாகவே ஒரே நேரத்தில் தேடி கொண்டனர். அவர்கள் ஒரே நேரத்தில் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர் முடிவு

போர் முடிவு

குருஷேத்திர போரின் முடிவுக்கு பின் பூமியின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குறைந்திருந்தது. இருசேனைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 30 லட்சம் வீரர்கள் இறந்திருந்தனர். திருதராஷ்டிரன் தன் 100 புதல்வர்களையும் இழந்திருந்தார், குந்தி தன் மகன் கர்ணனை இழந்திருந்தார், பாஞ்சாலி அபிமன்யு உட்பட தன் அனைத்து புதல்வர்களையும் இழந்தார். அனைத்திற்கும் மேலாக குருவம்சத்தின் பிதாமகர் பீஷ்மரும் இறந்திருந்தார். அனைவரின் மனதிலும் சோகமும், துக்கமுமே நிறைந்திருந்தது.

அஸ்தினாபுர வருகை

அஸ்தினாபுர வருகை

போரில் வெற்றிபெற்ற பிறகு யுதிஷ்டிரன் தன் சகோதரர்கள், தாய் குந்தி மற்றும் கிருஷ்ணருடன் அஸ்தினாபுர கோட்டைக்கு வருகை புரிந்தார். அதன்பின் அஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக முடியும் சூட்டிக்கொள்ள போவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

திருதராஷ்டிரனின் கோபம்

திருதராஷ்டிரனின் கோபம்

முடிசூட்டிய பிறகு திருதராஷ்டிரன் தன் தம்பியின் மகன்களை கட்டித்தழுவினார். யுதிஷ்டிரனை கட்டித்தழுவிய பிறகு பீமனை கட்டியணைக்க முயன்றார். அவரின் மனநிலையை அறிந்த கிருஷ்ணர் பீமனுக்கு பதிலாக அவனை போன்ற சிலை ஒன்றை அந்த இடத்தில் வைத்துவிட்டார். தன் அனைத்து மகன்களையும் கொன்ற பீமன் என நினைத்து கோபத்துடன் அந்த சிலையை அணைத்தார் திருதராஷ்டிரன் இறுதியில் அந்த சிலை உடைந்து நொறுங்கியது.

MOST READ: தெரியாமகூட இந்த இடங்களுக்கு காலணியுடன் போகாதீங்க! அப்புறம் துரதிர்ஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிரும்.

காந்தாரியின் வருத்தம்

காந்தாரியின் வருத்தம்

மகன்களை இழந்த சோகத்தில் இருந்த காந்தரியுடன் குந்தியும் இணைந்து கொண்டார். இருவரும் தங்கள் சந்ததியினரின் இழப்பை எண்ணி அழுது தீர்த்தனர். இராஜ்ஜிய அதிகாரத்திற்காக இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை பலிகொடுத்து விட்டோமே என்று அவர்களின் மனம் துயருற்றது.

வனவாசம்

வனவாசம்

15 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்தினாபுரத்தின் மூன்று மூத்தவர்களும் இராஜ்ஜியம் துறந்து வனவாசம் மேற்கொள்ள முடிவெடுத்தனர். அவர்கள் தங்கள் முடிவை தனது புத்திரர்களிடம் கூற அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். மகன்களின் சம்மதத்துடன் அவர்கள் மூவரும் வனத்தை நோக்கி சென்றனர்.

சஞ்சயன்

சஞ்சயன்

சஞ்சயனும் திருதராஷ்டிரனுடன் வருவதாக கூறினார். திருதராஷ்டிரன் பிறந்த நாள் முதலே பார்வையில்லா அவருக்கு பார்வையாக இருந்த சஞ்சயன் தன் மன்னருடன் செல்வதற்கு முடிவெடுத்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அவர்கள் அனைவரும் அடர்ந்த வனத்திற்குள் குடில் அமைத்து தங்கினர். சஞ்சயன் அவர்களுக்கான பணிவிடைகளை செய்து கொண்டிருந்தார்.

MOST READ: இந்த இன மக்கள் பிணங்களை எரிக்கவோ,புதைக்கவோ மாட்டார்கள் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்கள் ஏன் தெரியுமா

கங்கை ஆறு

கங்கை ஆறு

அவர்களின் குடில் கங்கை ஆற்றுக்கு அருகில் இருந்தது. தினமும் அதில் குளித்து தங்களின் பாவங்களை மன்னித்து விரைவில் மோட்சம் வழங்கும்படி ஆண்டவனை வேண்டி கொண்டிருந்தனர்.

மரணத்தின் கணம்

மரணத்தின் கணம்

ஒருநாள் அவர்கள் காத்திருந்த மோட்சத்திற்கான நேரம் வந்தது. அவர்கள் தங்கியிருந்த வனத்தில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்தது. சஞ்சயன் அவர்கள் மூவரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடும்படி கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர். தங்கள் தவத்தை நிரூபிக்கவும், மோட்சத்தை அடையவும் இதுதான் சரியான நேரம் என்று திருதராஷ்டிரன் கூறிவிட்டார்.

யோக நிலை

யோக நிலை

திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி மூவரும் தங்களுடைய விதியை ஏற்றுக்கொண்டு மரணத்தை தழுவ தயாராகினர். அவர்கள் மூவரும் யோகா நிலையில் அமர்ந்து தனது உடலின் கட்டுப்பாட்டை தங்களுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெளிக்கொண்டு வந்தனர்.

MOST READ: இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

இறுதிச்சடங்குகள்

இறுதிச்சடங்குகள்

சஞ்சயன் அவர்கள் இறந்த பிறகு இமயமலைக்கு சென்று தன் துறவு வாழ்க்கையை தொடர்ந்தார். அவர்கள் இறந்த சில காலங்களுக்கு பிறகு நாரத முனிவர் அம்மூவரின் கொடூரமான மரண செய்தியை பாண்டவர்களிடம் தெரிவித்தார். தன் தாயும், பெரியப்பாவும் இறந்த செய்தி கேட்டு துயரமுற்ற பாண்டவர்கள் அவர்கள் இறந்த இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் இறந்த இடத்திற்கு சென்ற பாண்டவர்கள் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய அதற்கான சடங்குகளை செய்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vedas spiritual
English summary

Why Kunti, Gandhari and Dhritarashtra Decided to Die Together?

Find out the reasons why Kunti, Gandhari and Dhritarashtra decided to die together.
Desktop Bottom Promotion