Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன
இந்தியாவில் கடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது.
இந்தியாவின் வரலாற்றில் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் முக்கியாமான பங்கு உள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கடவுள்களும், கடவுள் சார்ந்த நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் இந்தியாவில்தான் அதிகம்.

இந்தியாவில் கடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மந்திரங்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது காயத்ரி மந்திரம்தான். மற்ற மந்திரங்களை காட்டிலும் காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆராய்ச்சி
டாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

காயத்ரி மந்திரம்
அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்து மதத்தை சேர்ந்த காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.

காரணம்
காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்த மந்திரமாக அறிவிக்கப்பட காரணம் குறிப்பட்ட அதிர்வெண்கள் அல்லது ஒலிக்கலவையில் இருக்கும் மந்திரங்கள் குறிப்பிட்ட பலன்களையும், ஆன்மீகம் தொடர்பான முக்கியத்துவத்தையும் குறிக்கும்.

ஹாம்பர்க் பல்கலைக்கழகம்
இந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.

ஒலிபரப்பு
ஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.

முடிவுகள்
இரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

விஞ்ஞான உண்மைகள்
காயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது, இதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.



Click it and Unblock the Notifications