For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டை விரலை தானமாக கொடுத்து சென்ற ஏகலைவனை கிருஷ்ணர் ஏன் கொன்றார் தெரியுமா?

ஏகலைவனின் பாத்திரம் மஹாபாரதத்தில் மிக மிக சிறிய பாத்திரம்தான், ஆனால் இன்றும் அவரை பற்றி அனைவரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

|

மகாபாரதம் பூமியின் மக்கள் தொகையை குறைத்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ண பரமாத்மா தலைமையில் நடத்தப்பட்ட போராகும். மகாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை பிடித்திருக்கும், சிலருக்கு அர்ஜுனன், சிலருக்கு கர்ணன் ஏன் துரியோதனனை பிடிப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மகாபாரதத்தில் அனைவரின் அன்பையும், அனுதாபத்தையும் பெற்ற ஒருவர் உள்ளார் எனில் அது ஏகலைவன்தான்.

Why Did Krishna Kill Ekalavya?

ஏகலைவனின் பாத்திரம் மஹாபாரதத்தில் மிக மிக சிறிய பாத்திரம்தான், ஆனால் இன்றும் அவரை பற்றி அனைவரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குருபக்திக்கும், வீரத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாக இன்றும் ஏகலைவன் போற்றப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் குருதட்சணை செலுத்திய பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது பலரும் அறியாத ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக ஏகலைவன் தன் சகோதரன் கிருஷ்ணர் கையாலேயே கொல்லப்பட்டார். கிருஷ்ணர் ஏன் ஏகலைவனை கொன்றார் ஏகலைவனுக்கு கிருஷ்ணர் வழங்கிய வரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏகலைவன்

ஏகலைவன்

மகாபாரதத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரமான ஏகலைவன் வில்லாற்றலில் அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் இணையானவராக இருந்தார். வேடர் குல இளவரசராக இருந்த இவர் தன் குருவிற்காக வழங்கிய குருதட்சணை எவராலும் வழங்க முடியாததாகும்.

ஏகலைவனும் துரோணாச்சாரியாரும்

ஏகலைவனும் துரோணாச்சாரியாரும்

வில் வித்தை பயில ஆசைப்பட்ட ஏகலைவன் துரோணாச்சாரியாரை தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்ப்பயிற்சி வழங்கிய போது அதனை மறைந்திருந்து பார்த்தே வித்தைகளை கற்றார், சொல்லப்போனால் வில்வித்தையில் இவர் அர்ஜுனனை விட ஒருபடி மேலாகவே இருந்தார்.

குருதட்சணை

குருதட்சணை

ஏகலைவனை பற்றி அறிந்த துரோணாச்சாரியார் அவன் ராஜவம்சத்தை சேர்ந்தவன் இல்லையென்பதாலும், அவன் அதர்மத்தின் பக்கம் சென்றுவிட்டால் அவனின் திறமை உலகிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதாலும் தனக்கு குருதட்சணையாக எந்த குருவும் கேட்க முடியாத ஏகலைவனின் கட்டை விரலை கேட்டார். தன் குருபக்தியை நிரூபிக்க ஏகலைவன் சற்றும் சிந்திக்காமல் அவர் கேட்ட குருதட்சணையை வழங்கி அழியாப்புகழ் பெற்றார்.

ஏகலைவனும், கிருஷ்ணரும்

ஏகலைவனும், கிருஷ்ணரும்

மகாபாரதத்தை சுற்றியிருக்கும் எண்ணற்ற கிளைக்கதைகளில் ஒன்றுதான் கிருஷ்ணருக்கும், ஏகலைவனுக்கும் இருக்கும் தொடர்பாகும். உண்மையில் ஏகலைவன் கிருஷ்ணருடைய சகோதரன் முறை ஆவார், இது பலரும் அறியாத ஒன்றாகும். ஏகலைவனின் தந்தை தேவசிராவர் கிருஷ்ணருடைய தந்தையான வாசுதேவரின் சகோதரன் ஆவார். இவர் வேடர்களின் மன்னரான நிஷாத யாத்ராஜா இரண்யதானுவால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.

MOST READ:இந்த மிருகம் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம்...!

குருதட்சணைக்கு பின் ஏகலைவன்

குருதட்சணைக்கு பின் ஏகலைவன்

ஏகலைவன் வழங்கிய குருதட்சணைக்கு பின் அவனது புகழ் மேலும் அதிகரித்தது, ஆனால் அதற்கு பின் தர்மத்தின் பாதையிலிருந்து விலகி செயல்பட தொடங்கினான் ஏகலைவன். யாதவர் மற்றும் குரு வம்சத்தை சேர்ந்த இருவருக்குமே எதிரியாக மாறிவிட்டான்.

ஏகலைவனும், ஜராசந்தனும்

ஏகலைவனும், ஜராசந்தனும்

ஏகலைவனும் அவனது முன்னோர்களும் ஆரம்பகாலம் முதலே ஜராசந்தனின் ஆதரவாளர்களாக இருந்தனர். கம்சனை வதம் செய்ததால் ஜராசந்தனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் பலகாலமாக பகை இருந்தது. கிருஷ்ணர் ஜராசந்தனுக்கு எதிரியாக இருந்ததால் ஏகலைவனுக்கும் எதிரியாக மாறினார். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் எதிரிகளாக காலம் அவர்களை மாற்றியது.

ஏகலைவன் மரணம்

ஏகலைவன் மரணம்

ஏகலைவன் கட்டை விரலை இழந்தாலும் வீரம் குறையாதவனாகவே இருந்தான். எனவே ஜராசந்தனுக்காக கிருஷ்ணரை எதிர்த்து சண்டையிட அறைகூவல் விடுத்தான். கிருஷ்ணர் அவனின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு சண்டையில் கலந்து கொண்டதுடன் அவனை கொல்லவும் செய்தார். அதற்கு முன் அவர் ஏகலைவனுக்கு வரமொன்றை வழங்கினார்.

ஏகலைவன் மரணத்தின் காரணம்

ஏகலைவன் மரணத்தின் காரணம்

ஏகலைவனின் மரணத்திற்கு காரணமாக இருந்தது அவனின் வீரமும் அவன் அதர்மத்தின் பக்கம் இருந்ததும்தான். துரோண பருவத்தில் கிருஷ்ணர் கூறுவது என்னவெனில் குருஷேத்ர போருக்கு முன்பே ஜராசந்தன், கீசகன், சிசுபாலன் மற்றும் ஏகலைவன் போன்ற மாவீரர்களின் மரணத்திற்கு கிருஷ்ணர் காரணமாக இருந்தார். ஏனெனில் அதர்ம பக்கம் இருந்த இவர்கள் துரியோதனனுடன் கைகோர்த்திருந்தால் போரின் முடிவு வேறுமாதிரி மாறியிருக்க வாய்ப்புள்ளது.

MOST READ:இந்த விரல் நீளமாக இருக்கும் ஆண்களை சுற்றி எப்போதும் பெண்கள் குவிந்திருப்பார்களாம் தெரியுமா?

ஏகலைவனின் மறுபிறப்பு

ஏகலைவனின் மறுபிறப்பு

கிருஷ்ணர் ஏகலைவனை கொள்வதற்கு முன் அவனுக்கு அளித்த வரம் என்னவெனில் அவனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்ட துரோணாச்சாரியாரின் மரணம் ஏகலைவன் கையால் ஏற்படும் என்பதுதான். அதன்பின்னர் ஏகலைவன் திருஷ்டதுய்மனாக மறுபிறப்பெடுத்து துரோணரை கொன்றதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god
English summary

Why Did Krishna Kill Ekalavya?

Did you know that Ekalavya was killed by Lord Krishna?
Desktop Bottom Promotion