For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம்

நீங்கள் உட்காரும் முறை பற்றியும் அதன்மூலம் எப்படி உங்களுடைய குணநலன்களையும் தெரிந்து கொள்வது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விரிவான தொகுப்பு தான் அது.

By Mahibala
|

பொதுவாகவே நம்முடைய உடல் மொழியானது நாம் பேசுகின்ற வார்த்தைகளை விடவும் அதிகமாகவே நிறைய விஷயங்களைச் சொல்லி விடும். இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கு உணர்வுப்பூாவமாகவும் கருத்துக்களைப் பரிமாறவும் மொழியல்லாத தொடர்பு முறைகளும் உடல் மொழிகளும் மிக முக்கியம்.

பொதுவாக யாம் யாரையாவது சந்திக்கிறோம் என்றால் நாம் பேச ஆரம்பிக்கும் வார்த்தைகளை விடவும் நம்முடைய உடல் மொழி மூலமே நம்முடைய எண்ணங்களில் பெரும்பாலானவற்றைச் சொல்லி முடித்துவிடுகிறோம். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைவிடவும் அதை சொல்வதற்கான மன நிலை என்ன, அதை எந்த உணர்வோடு சொல்கிறோம் என்பதெல்லாம் நம் வார்த்தைகளுக்கு முன்பாகவே அவர்களுக்கு வெளிக்காட்டி விடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன உணர்வுகள்

மன உணர்வுகள்

சில சமயங்களில் நம்முடைய மன உணர்வுகளை நம்முடைய வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. அதனால் அவற்றில் பெரும்பாலான விஷயங்களை உணர்வு ரீதியாக உடல் மொழி மூலம் அந்த தகவலை பரிமாறிவிடுகிறோம்.

சில சமயங்களில் நாம் சொல்லும் கருத்தை அதற்கு உள் அர்த்தம் வைத்து வேறு ஒன்றாகக் கூடு புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதனால் தான் ஒருவரிடம் பேசும்போதோ அல்லது ஏதேனும் விஷயங்களைச் சொல்கின்ற பொழுதோ நம்முடைய உடல் மொழி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

MOST READ: மூக்குல இந்த மூலிகை சாறை விட்டா கோமாவுல இருக்கறவங்கள கூட பிழைக்க வெக்க முடியுமாம்

பின்னணி

பின்னணி

அதேபோல் நாம் நினைப்பதை மட்டுமல்ல, நாம் யார், எப்படிப்பட்டவர், நம்முடைய மற்ற விஷயங்கள், நம்முடைய பின்னணி ஆகியவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளவும் இந்த உடல்மொழி பயன்படுகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் நாம் உட்காரும் முறை.

குணங்கள்

குணங்கள்

ஆம். நாம் உட்காருகின்ற முறையை வைத்தே நம்முடைய குணங்கள், எப்பேர்ப்பட்ட ஆள் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். சரி. நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எப்பேர்ப்பட்ட ஆள் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

பொசிஷன் ஏ

பொசிஷன் ஏ

இந்த படத்தில் ஏ நிலையில் உள்ளது போல் உட்காரும் பழக்கம் கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் அதிக படைப்பாற்றல் திறனுடன் எதையும் புதுமையாக யோசிக்கக் கூடியவராக இருப்பீர்கள். சார்மிங் என்று சொல்லக்கூடிய கொழுகொழுவென இருப்பவராக இருப்பீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் போகிற போக்கில் சாதாரணமாக முடிவெடுக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள். எதைப் பற்றியும் முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இதனாலேயே சில புதிய விஷயங்களில் மாட்டிக் கொள்வீர்கள். அதையும் உங்களுடைய புத்திசாலித்தனமான சாமிங்கால் எந்த சூழலையும் கடந்து வந்துவிடுவீர்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்வென்ச்சர்ஸ் நிறைந்ததாகவும் புதிய புதிய விஷயங்களைச் செய்து பார்க்கவும் விரும்புவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் தங்களுடைய செயல்பாடுகளால் மிக பிரபலமாகிவிடுவார்கள். அதேபோல் மிக எளிதாக நண்பர்களைச் சேமித்துவிடுவார்கள்.

MOST READ: ஆஃப் பாயில் சாப்பிட்டதால் எட்டு வயது சிறுமிக்கு மூளை முழுக்க புழு... அடக்கொடுமையே!

பொசிஷன் பி

பொசிஷன் பி

இந்த பி பொசிஷனில் உட்காரும் பழக்கம் கொண்டவர்கள் பொதுவாக சாதிக்கும் குணம் கொண்டவர்கள். உண்மையாகக் கனவு காண்பார்களே தவிர நடக்காத விஷயத்தை நினைத்து கனவு காண மாட்டார். அதேபோல் இவர்களுக்கு பகல் கனவு காணும் பழக்கம் இருக்கும். அதாவது எதையுமே மிகப் பெரிய அளவில் கற்பளை செய்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நினைவுகளிலேயே தங்களைத் தொலைத்து விடுவார்கள்.

எளிதில் மற்றவர்களுடன் பழகும் குணம் கொண்டிருப்பார்கள். அதோடு மற்றவர்கள் மீது அதிக இரக்க குணமும் கொண்டிருப்பார்கள். அதனாலேயே இவர் மீது மற்றவர்கள் தங்களுடைய பாரங்களைத் தூக்கிப் போட்டுவிடுவார்கள். மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் தன்னுடைய உணர்வுகளால் மற்றவர்களை கட்டிப்போட்டு விடும் ஆற்றலும் கொண்டவர்கள்.

பொசிஷன் சி

பொசிஷன் சி

இவர்கள் மிகவும் குழப்பமான பேர் வழிகளாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் இவர்களால் ஒழுங்காக கவனம் செலுத்த முடியாது. ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு எங்கெங்கோ தேவையில்லாமல் நினைவுகளைச் செலுத்தி யோசிப்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைத் தங்களுடைய வாயால் சொல்வதற்கு முன்பாகவே அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனையும் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும். தான் பேசுவது ஒன்றாக இருக்கும். சிந்தனை வேறு ஒன்றாக இருக்கும்.

ரொம்ப சீக்கிரம் மற்றவர்களுக்கு ஃபோரடித்து விடுவார்கள். யார் மீதும் எதன்மீதும் ஒழுங்கான முழுமையாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஏதாவது தூண்டுதலில் பெரில் சூழலுக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து யாராவது இயக்கிக் கொ்ணடே இருக்க வேண்டியது இருக்கும். எந்த உறவுகளையும் நீண்ட பாதுகாத்து பின்பற்ற மாட்டார். உறவுகளை பாதியிலேயே கழட்டி விட்டுவிடுவார்கள்.

பொசிஷன் டி

பொசிஷன் டி

இந்த பொசிஷனில் உட்காருகின்ற பழக்கம் இருப்பவர்களாக இருந்தால் அவர்கள் மிகவும் ஸ்மார்ட். எதையும் நல்லவிதமாக பரந்துபட்டு சிந்திக்கக் கூடியவராக இருப்பார்கள். நேரம் தவறாமல் எங்கு எந்த நேரத்திற்கு செல்ல வேண்டும், செய்ய வேண்டும் அதை மிகச்சரியாக கடைபிடிப்பார்கள். எதையும் வரிசைப்படி முறையாகவும் அதேசமயம் மிக தெளிவாகவும் செய்து முடிக்கக் கூடியவர்கள். தான் இருக்குமிடத்தை மிக சுத்தமாகவும் ஒழுங்கு முறையோடு பராமரிக்கக் கூடியவராக இருப்பார்கள்.

எல்லா பொருள்களும் இருக்க வேண்டிய இடத்தில் மிகச் சரியாக வைத்திருப்பார்கள். கொஞ்சம் ரிசர்வ் டைப் தான். ஆனாலும் இவர்களைப் பற்றி அவ்வளவு எளிதாக நம்மால் கணித்து விட முடியாது. அதற்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். மிக நேர்மையான ஆளாக இருப்பார்கள். புறம் பேசுவது இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. எந்த சூழலிலும் பொறுமையாக இருப்பார்கள். தன்னுடைய எண்ணங்களை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

MOST READ: ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை... எப்படி எந்த அளவு சாப்பிடணும்?

பொசிஷன் ஈ

பொசிஷன் ஈ

இந்த பொசிஷனில் உட்காரும் குணம் கொண்டவர்கள் எப்போதும் குறிக்கோளை எதிர் நோக்கியவர்களாகவே இருப்பார்கள். தங்களுடைய மிகவும் மதிப்பவர்களாக இருப்பார்கள். எதிலும் அவ்வளவு சீக்கிரம் திருப்தியடைய மாட்டார்கள். தங்களுடைய குறிக்கோளை அடைய மிக மூர்க்கத்தனமாக செயல்படுவார்கள். அதேசமயம் காதல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடப்பார்கள்.

தங்களுடைய தோற்றம் முதல் அனைத்து செயல்பாடுகளிலும் பர்ஃபெக்டாக இருப்பார்கள். நிறைய விஷயங்களால் ஈர்க்கப்படும் இவர்கள் சில சமயங்களில் ஏற்கனவே செய்த சில விஷயங்களை மறந்து விட்டு மீண்டும் செய்து கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் இவர்கள் நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Sitting Posture Says About Your Personality

Body language; it often tells you much more than words could ever do. It’s an incredibly important tool when it comes to establishing relationships, because most emotions are communicated non-verbally.
Story first published: Thursday, March 7, 2019, 16:55 [IST]
Desktop Bottom Promotion