For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த கிழமை எந்த நிற உடையணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணம் உள்ளது. அதேசமயம் ஒவ்வொரு நிறமும் ஒரு கிரகத்தை பிரதிபலிக்கிறது.

|

நம் அனைவருக்குமே பிடித்த நிறம் என்று ஒன்றிருக்கும். அதற்கு காரணம் அந்த நிற உடையில் நாம் அழகாக காட்சியளிப்பதுதான். ஆனால் நிறங்கள் என்பது நம்மை அழகாக காட்டுவதற்கு மட்டுமல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

What color you should wear, according to Astrology

சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணம் உள்ளது. அதேசமயம் ஒவ்வொரு நிறமும் ஒரு கிரகத்தை பிரதிபலிக்கிறது. அதேபோல வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. அந்த கிரகத்திற்கு உண்டான நாளில் அதற்கான நிறத்தை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திங்கள் கிழமை

திங்கள் கிழமை

திங்கள் கிழமை சந்திரனுடன் தொடர்புடைய நாளாகும். எனவே இந்த கிழமையில் வெள்ளை நிற உடையணிவது நல்லது. இது உங்களை நாள் முழுவதும் அமைதியாக வைத்திருக்கும்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமை இராமபக்தர் அனுமனுக்கு சிறந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் ஆரஞ்சு நிற திலகம் வைப்பது இராமரின் மீது இருக்கும் பக்தியை உணர்த்தும். அதனால் செவ்வாய் கிழமை ஆரஞ்சு நிற உடையணிவது நல்லது.

புதன் கிழமை

புதன் கிழமை

புதன் கிழமை சுபகாரியங்களுக்கு சிறந்த நாளாகும். புதன் கிழமை வினைதீர்க்கும் விநாயகருக்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் பச்சை நிற உடையணிவது நல்ல பலன்களை வழங்கும்.

MOST READ: இந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க?

வியாழக் கிழமை

வியாழக் கிழமை

இந்த நாள் குரு பகவானுக்கு சிறந்த நாளாகும். சுக்கிரனை விட குரு பகவான் பல நன்மைகளை வழங்கக்கூடியவர். இந்த நாளில் மஞ்சள் நிற உடையணிவது உங்களுக்கு கோடி நன்மைகளை வழங்கும்.

வெள்ளி கிழமை

வெள்ளி கிழமை

அனைத்து தீயசக்திகளுக்கும், அசுரர்களுக்கும் எதிரா போராடி வெற்றி பெற்ற துர்கை அம்மனுக்கு சிறந்த நாள் இதுவாகும். எனவே இந்த நாளில் துர்கையை வழிபட பலவண்ண நிற உடைகளை அணிவது நல்லது.

சனிக்கிழமை

சனிக்கிழமை

சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்று அனைவரும் அறிவோம். இந்த நாளில் கருப்பு அல்லது நீல நிற உடையணிவது சனிபகவானிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும்.

MOST READ: பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குவதாகும். இது மட்டுமின்றி ஒவ்வொருக்கு கிரகங்களும் ஒரு வண்ணத்துடன் தொடர்புடையது.

சூரியன்

சூரியன்

சூரியனின் நிறம் பிரகாசமான சிவப்பு ஆகும். உங்கள் ஜாதகத்தில் சூரியனை பலப்படுத்த விரும்புபவர்கள் இந்த நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். இவர்கள் கையில் மாணிக்கக்கல் அணிவது நல்லது. இதன் நிறமும் சிவப்பாகத்தான் இருக்கும்.

சந்திரன்

சந்திரன்

சந்திரனின் நிறம் வெள்ளை ஆகும். உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் இடத்தை பலப்படுத்த வெள்ளை நிற மலர்கள் மற்றும் பால், தயிர் போன்ற பொருட்களை தானம் கொடுப்பது நல்லது.

MOST READ: தும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் கிரகத்தின் நிறம் மஞ்சள் ஆகும். செவ்வாய் கிரகம் சரியான இடத்தில் இல்லாதவர்கள் வன்முறையாளர்களாக மாட்ட வாய்ப்புள்ளது. இவர்கள் சிவப்பு நிற பவளம் அணிவது நல்லது.

புதன்

புதன்

புதனின் நிறம் பச்சையாகும் மேலும் இது வாழ்க்கையில் சமநிலையை, அமைதி மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் கோளாகும். இது நரம்புகளையம், மனதையும் அமைதிப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த நிறத்தை அடிக்கடி அணிவது நல்லது.

குரு

குரு

குருவின் நிறம் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த ஆரஞ்சு ஆகும். இது உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன், நரம்பு மண்டலங்களை பராமரிக்க உதவுகிறது. இவர்கள் பாதாம், முந்திரி போன்றவற்றை தானமாக கொடுப்பது நல்லது.

MOST READ: கோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...!

சுக்ரன்

சுக்ரன்

சுக்கிரனின் நிறம் பிரகாசமான வெள்ளை ஆகும். இது அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. ஜாதகத்தில் சுக்ரன் பலவீனமாக இருப்பவர்கள் ரோஜா, குங்குமப்பூ, மல்லி, தாமரை போன்றவற்றை தானமாக கொடுக்க வேண்டும்.

சனி

சனி

சனிபகவானின் நிறம் கருப்பு ஆகும். சனிபகவானை கண்டு அனைவருமே பயப்படுவார்கள். சனிபகவான் தவறான இடத்தில் இருந்தால் அவர்கள் ஆக்கிரமிப்பு, மனசோர்வு, வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம். எனவே சனிபகவானை எச்சரிக்கையாக வழிபட வேண்டும்.

ராகு

ராகு

ராகு புகைபிடித்த கருப்பு நிறமாக இருக்கிறார். ராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரம், தாமரை, சந்தனம் போன்ற பொருள்களை தானமாக கொடுப்பது நல்லது.

MOST READ: சாஸ்திரங்களின் படி சிவபெருமானை இந்த இடத்தில் தொட்டு வழிபடுவது அவரின் சாபத்தை பெற்றுத்தரும்...!

கேது

கேது

கேது சற்று பழுப்பு நிறமாக இருக்கிறார். கேதுவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்கள் கற்பூரம், இஞ்சி போன்றவற்றை தானமாக கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What color you should wear, according to Astrology

Here's what color you should wear, according to the day of the week.
Desktop Bottom Promotion