Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மற்றவர்களின் யோசனையை திருடி அதை தன்னுடையதுனு சொல்ல இந்த ராசிக்காரர்களால்தான் முடியுமாம்...!
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த உலகம். ஆனால் இன்றோ ஒருவரை ஒருவர் அழித்து வாழும் உலகமாக இது மாறிவிட்டது.
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த உலகம். ஆனால் இன்றோ ஒருவரை ஒருவர் அழித்து வாழும் உலகமாக இது மாறிவிட்டது. அழிப்பது என்றால் கொல்வது மட்டுமல்ல ஒருவரின் உடைமை, உணர்ச்சிகள், சிந்தனைகள் போன்றவற்றை அபகரித்து கொள்வதும் கூட அழிப்பதுதான்.

ஒருவரின் முன்னேற்றம் என்பது எப்பொழுதும் அவர்களின் முயற்சியாலும், சிந்தனையாலும் பெற்றதாக இருந்தால் மட்டுமே அது அவர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் மற்றவர்களின் சிந்தனைகளை திருடி அதில் முன்னேறுவது உங்களுக்கு முழுமையான சந்தோசத்தை ஒருபோதும் வழங்காது. இருப்பினும் சில ராசிக்காரர்கள் மற்றவர்களின் சிந்தனைகளை திருடி அது தன்னுடையது என்று கூச்சமே படாமல் கூறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்
மற்றவர்களின் சிந்தனைகளை திருடி அதை தனக்கேற்றார் போல மாற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் மற்றவர்களின் சிந்தனைகளை மட்டுமல்ல வாய்ப்புகள், உறுப்பினர்கள் போன்றவற்றை கூட தட்டிப்பறித்து கொள்வார்கள். உங்களின் குற்றத்தை நீங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டிர்கள். உஙக்ளின் இந்த செயலால் மற்றவர்கள் வேதனைப்படுவதை பற்றிய எந்த கவலையும் இவர்களுக்கு கிடையாது.

துலாம்
இவர்கள் மற்றவர்களின் சிந்தனைகளை திருடினால் அதனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் பெரும்பாலான துறைகளில் திறமை குறைவானவர்களாக இருப்பார்கள், அதற்காக இவர்களின் ஆசையை ஒருபோதும் குறைத்து கொள்ளமாட்டார்கள். உங்களால் ஒரு விஷயத்தை உருவாக்க முடியாமல் போனால் அதை மற்றவர்களிடம் இருந்து திருடிக்கொள்ள நீங்கள் தயங்க மாட்டார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பொதுவாகவே அடுத்தவரின் திறமையை திருடுபவர்களாக இருப்பார்கள், மேலும் அதனை தனது திறமையாகவே காட்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள். நீங்கள் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் திறமையானவராக காட்டிக்கொள்வீர்கள். ஆனால் உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுடையதாக இருக்கும். எப்பொழுதும் நீங்கள் பேச்சை தொடங்க மாட்டிர்கள் மற்றவர்கள் பேசும்வரை காத்திருந்து அதனை வேறு மாதிரி பேசுவீர்கள்.

சிம்மம்
நீங்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே நீங்கள் இந்த தவறை செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், ஆனால் அது மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் தீங்காக இருக்கும். மற்றவர்களின் சிந்தனைகளை நீங்கள் திருடினால் அதனை அவர்கள் சொல்வதற்கு முன் நீங்கள் அதனை உங்கள் ஐடியாவாக கூறிவிடுவீர்கள்.உங்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் எப்பொழுதும் உங்களின் சிந்தனைகளை மதிக்க மாட்டார்கள்.

விருச்சிகம்
மற்றவர்களின் சிந்தனைகளை நீங்கள் திருடினாலும் அதில் சிறிது நேர்மையை கடைபிடிப்பார்கள். அதேசமயம் சிந்தனைக்கு சொந்தகாரர்களுக்கு எப்பொழுதும் உரிமை கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் புகழ் வெளிச்சம் மிகவும் பிடிக்கும் அதற்காக மற்றவர்களின் சிந்தனைகளை திருடுவதில் இவர்களுக்கு குற்ற உணர்வே இருக்காது.

கடகம்
மற்றவர்களின் சிந்தனைகளை திருடும் வாய்ப்பு கிடைத்தால் கடக ராசிக்காரர்கள் அதனை ஒருபோதும் தவற விடமாட்டார்கள். மற்றவர்களின் சிந்தனைகளையும், புகழையும் திருடுவதில் இவர்களுக்கு இரக்கமோ, கவலையோ இருக்காது. உங்களின் திருட்டுத்தனத்தை ஒப்புக்கொள்வதில் உங்களுக்கு எப்பொழுதும் ஆர்வம் இருக்காது.



Click it and Unblock the Notifications