Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா?
லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு கொண்டு வர சில பொருட்களை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது.
இந்து மதத்தில் லக்ஷ்மி தேவிதான் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று புராணங்கள் கூறுகிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லக்ஷ்மி தேவியின் அருளும் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் அளப்பரியதாய் இருக்கும்.

லக்ஷ்மி தேவி வழிபாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு கொண்டு வர சில பொருட்களை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்குள் அழைத்து வர வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குபேரர்
உங்கள் வீட்டில் குபேரர் சிலையை வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகும். செல்வத்தை பாதுகாக்கும் கடவுளாக குபேரர் கருதப்படுகிறார். குபேரர் சிலையை வைக்கும் இடம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சிறிய தேங்காய்
இந்த தேங்காய்கள் வழக்கமான தேங்காயை விட சின்னதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு லக்ஷ்மியின் பழம் என்று அர்த்தம். இந்த தேங்காயை வீட்டிற்குள் வைத்து வழிபடுவது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

மெர்குரி சிலைகள்
மெர்குரியால் செய்யப்பட்ட சிலைகளும், படங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உங்கள் வீட்டில் மெர்குரியால் செய்த லக்ஷ்மி சிலைகளை வீட்டில் வைப்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துவரும்.

சோழிகள்
குழந்தைகள் இதனை வீட்டில் வைத்து விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த சோழிகள் கடலில் இருந்து கிடைக்கிறது லக்ஷ்மி தேவியும் கடலில் இருந்து பிறந்தவர்தான். எனவே இது உங்கள் வீட்டில் இருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

மோதி சங்கு
விலைமதிப்பற்ற இந்த சங்கு மந்திர, தந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இது லக்ஷ்மியின் அருளை உங்கள் இல்லம் தேடி வரவைக்கும்.

வெள்ளி சிலைகள்
வெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி மாற்றம் பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த சிலைகளை தினமும் வழிபடுவது நீங்கள் நினைத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஸ்ரீ எந்திரம்
தாந்திரீக அறிவியலில் ஸ்ரீ எந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்திரங்களின் அரசனாக கருதப்படுகிறது. உங்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

தாமரை கட்டா
இது தாமரையில் இருந்து கிடைக்கும் ஒருவகை விதை ஆகும். லக்ஷ்மி தாமரையில் வசிப்பவர் ஆவார், இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.

ஒரு கண் தேங்காய்
இந்த வகை தேங்காய்தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்த தேங்காயில் ஒரு கண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.



Click it and Unblock the Notifications