Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த மிருகங்களை பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் அற்புத நல்ல மாற்றங்களை உண்டாக்கும் தெரியுமா?
முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்லும்போது நீங்கள் வழியில் பார்க்கும் மிருகங்களை வைத்தே அது வெற்றிகரமாக முடியுமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம்
பழங்கால வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் படி சில மிருகங்களை அடிக்கடி பார்ப்பது என்பது இயற்கை நமக்கு எதையோ கூற வருவதன் அர்த்தமாகும். இதில் சில மிருகங்கள் அதிர்ஷ்டத்தை கொண்டுவரலாம், சில மிருகங்கள் ஆபத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரலாம்.

முக்கியமான காரியங்களுக்காக வெளியே செல்லும்போது நீங்கள் வழியில் பார்க்கும் மிருகங்களை வைத்தே அது வெற்றிகரமாக முடியுமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் மிருகங்கள் கூறவரும் அர்த்தங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பல்லி
பல்லி மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் புனிதமான உயிரினம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகிறது. நீங்கள் வெளியே செல்லும்போது பல்லி உங்கள் பாதையில் வந்தால் நீங்கள் செல்லும் காரியம் வெற்றிகரமாக முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் நல்ல செய்திகள் உங்களை தேடி வருவதன் அடையாளமாகவும் பல்லி இருக்கும். பல்லி உங்கள் வழியில் வந்தால் உங்களுக்கு வெற்றிதான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஆந்தை
ஆந்தை உங்கள் பாதையில் வந்தாலோ அல்லது உங்கள் கண்களில் அடிக்கடி அது பட்டாலோ அது இயற்கை உங்களுக்கு கூறவரும் செய்தி என்று புரிந்து கொள்ளுங்கள். ஆந்தை அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகும். ஆந்தை உங்கள் வழியில் வருவது நீங்கள் சில குழப்பமான சூழ்நிலைகளில் விழப்போவதை குறிக்கும். அவ்வாறு குழப்பமான சூழ்நிலைகளில் நீங்கள் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் உங்களின் சொந்த அறிவை உபயோகப்படுத்தி முடிவெடுக்க வேண்டும்.

கிளி
கிளி உங்கள் பார்வையிலோ அல்லது வழியிலோ வருவது என்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இது உங்களுடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதன் அறிகுறி ஆகும். உங்கள் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உடனிருந்து காப்பாற்றுவார்கள் என்பதன் அறிகுறிதான் கிளி ஆகும்.

கழுகு
கழுகின் பெரிய கண்கள் ஆர்வத்தை குறிப்பதாகும். கழுகு உங்கள் வழியிலோ அல்லது நெருக்கமாகவோ வந்தாலோ இயற்கை உங்களுக்கு உணர்த்த வருவது என்னவெனில் வரும் நாட்களில் நீங்கள் பல முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.

பச்சோந்தி
சிலசமயம் போதுமான முயற்சிகள் செய்தாலும் உங்களால் நினைத்த முடிவுகளை அடைய முடியாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உங்களுடைய குறிக்கோள் மற்றும் எண்ணங்களை மாற்றிக்கொள்ள நினைப்பீர்கள். நீங்கள் தோல்வியில் இருக்கும்போது உங்கள் வழியில் பச்சோந்தியை பார்த்தால் நீங்கள் உங்கள் இலக்கை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே வேறு முயற்சிகளை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பாம்பு
பொதுவாகவே பாம்பு என்பது கெட்ட சகுனம்தான் என்று நம்பப்படுகிறது, ஆனால் உண்மையில் அவை எப்பொழுதும் கெட்ட செயல்களை மட்டும் கொண்டு வருவதில்லை. இவை சக்தி மற்றும் ஞானத்தின் அடையாளமாக இருக்கிறது. இது நமக்குள் இருக்கும் ஆற்றலை உணர்த்துவதாக இருக்கிறது. உங்கள் பாதையில் பாம்பு வந்தால் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிலந்தி பூச்சி
அசிங்கமான உயிரினமாக கருதப்படும் இது அறிவின் அடையாளமாகும். உண்மையில் சிலந்தி பூச்சி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது, இதன் வலை நாம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்த்தும். பழங்காலத்தில் சிலந்தி நண்பர்கள் மற்றும் கடந்த காலத்தின் அடையாளமாக கருதப்பட்டது, இப்போதும் அதன் அர்த்தம் அதுதான். இது உங்களை நோக்கி உபயோகமான செய்திகள் வருவதை குறிக்கும்.

காகம்
இந்த பறவையும் மோசமானதாக சித்தரிப்படுகிறது. இது இருள் மற்றும் மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையின் அடையாளமாகவும் இருக்கிறது. இது உங்கள் பாதையில் வருவது நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த முக்கியமான உண்மையை தெரிந்து கொள்ள போவதன் அர்த்தம் ஆகும். நீங்கள் உண்மையை தெரிந்து தயாராகி விட்டதன் அறிகுறிதான் காகம் உங்கள் வழியில் வருவது.



Click it and Unblock the Notifications