மகாபாரத போரில் உயிர் பிழைத்த துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் யார் தெரியுமா?

மகாபாரத போரில் கௌரவர்கள் நூறு பெறும் பீமனால் கொல்லப்பட்டார்கள். ஆனால் துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் மட்டும் உயிர்பிழைத்தான்.

மகாபாரத போர் என்பது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே இருந்த பகையை தீர்க்க நடத்தப்பட்ட பேரழிவாகும். கௌரவர்களின் புறம் பீஷ்மர், துரோணர், கர்ணன் என பல மாவீர்கள் இருந்தாலும் பாண்டவர்கள் புறம் கிருஷ்ணர் இருந்ததால் பல இழப்புகளுக்கு பின்னர் வெற்றி அவர்களின் வசம் ஆனது.

pandavas

போரில் கௌரவர்கள் நூறு பெறும் பீமனால் கொல்லப்பட்டார்கள். ஆனால் துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் மட்டும் உயிர்பிழைத்தான். அதற்கு காரணம் அவன் பாண்டவர்களின் புறம் இருந்ததுதான். இந்த பதவில் குருஷேத்திர போரில் உயிர் பிழைத்த துரியோதனனின் சகோதரன் யார் எப்படி அவர் உயிர் பிழைத்தான் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யுயுட்சு

யுயுட்சு

யுயுட்சு மகாபாரத்தில் வாழ்ந்த ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆவான். இவன் கௌரவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு தாசி மூலம் பிறந்திருந்தாலும் இவனும் அவர்களில் ஒருவனாகவே கருதப்பட்டான். ஏனெனில் இவனின் ஞானம் அளப்பரியதாய் இருந்தது. இவனின் பிறப்பும் விதுரரை போன்றதுதான். இவனும் அவரை போலவே அறிவில் சிறந்தவராய் விளங்கினான்.

யுயுட்சுவின் பிறப்பு

யுயுட்சுவின் பிறப்பு

திருதராட்டிரனுக்கு மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். கௌரவர்களின் பிறப்பானது தனித்துவம் வாய்ந்ததாகும். காந்தாரி தான் பெற்ற வரத்தின் மூலம் 100 குழந்தைகளை பெற்றெடுப்பதில் தாமதம் ஆனதால் பயமுற்ற திருதராஷ்டிரன் சுகாதா என்னும் வைசிய தாசி மூலம் யுயுட்சுவை பெற்றுக்கொண்டார். இவனும் கௌரவர்கள் பிறந்த அதேநாளில்தான் பிறந்தான்.

தர்மவழி

தர்மவழி

கௌரவர்கள் அனைவரும் அதர்ம வழியை கடைப்பிடித்தார்கள். ஆனால் யுயுட்சு அவர்களில் சற்று வித்தியாசமானவனாக இருந்தான். மகாபாரத போர் தர்மத்தை நீதியை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டதாகும். அனைவருக்கும் அவர்கள் விரும்பும் தரப்பில் போரிட சுதந்திரம் அளிக்கப்பட்டது.கௌரவர்களை பற்றி யுயுட்சு நன்கு அறிவான். அவன் துரியோதனனின் சதி திட்டங்களுக்கு துணை போக விரும்பவில்லை. எனவே அவன் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தான்.

யுயுட்சுவின் முடிவு

யுயுட்சுவின் முடிவு

யுயுட்சு பாண்டவர்களுக்கு தகவல் தருபவராக மாற முடிவு செய்தான். துரியோதனனின் தந்திரமான சாதித்திட்டங்களையும், தீய எண்ணங்களையும் அவ்வப்போது பாண்டவர்களுக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தான். குறிப்பாக பீமனின் உயிரை காப்பாற்ற யுயுட்சு பல தகவல்களை கூறினான். துரியோதனனின் முக்கியமான சதித்திட்டங்களில் ஒன்று பீமனின் குடிநீரில் விஷம் கலப்பது. ஆனால் அதிலிருந்து பீமன் தப்பிக்க காரணம் யுயுட்சுதான்.

பாண்டவர்கள் புறம்

பாண்டவர்கள் புறம்

குருஷேத்திர போர் தொடங்குவதற்கு முன் யுயுடு பாண்டவர்கள் பக்கம் வந்துவிட்டார். ஒரே நேரத்தில் 60,000 வீரர்களை எதிர்த்து போராடக்கூடிய கௌரவர்களின் அதிரதர்களில் ஒருவனாக யுயுட்சு இருந்தான். ஆனால் யுயுட்சு தர்மத்தின் பக்கம் நின்று போர் செய்ய விரும்பினான். எனவே குருஷேத்திர போரில் பாண்டவர்கள் புறமிருந்து போர் செய்ய தொடங்கினான்.

போருக்கு பின்

போருக்கு பின்

போரில் பீமனால் அனைத்து கௌரவர்களும் கொல்லப்பட்டனர். திருதராஷ்டிரன் தனது அனைத்து புதல்வர்களையும் இழந்தார். யுயுட்சுவை தவிர. போர் முடிந்த பிறகு அஸ்தினாபுரத்திற்கு திரும்பிய யுயுட்சு அவரின் புத்திக்கூர்மைக்காக அஸ்தினாபுரத்தின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அஸ்தினாபுரம் யுயுட்சுவின் நிர்வாகத்திற்கு கீழ் மகிழ்ச்சியாக ராஜ்ஜியமாக மாறியது.

பாண்டவர்கள் கொடுத்த பொறுப்பு

பாண்டவர்கள் கொடுத்த பொறுப்பு

பல வருடங்களுக்கு பிறகு யாதவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் தன்னுடய நகரம் வீழ்ச்சியடைவதை அவர் பார்த்தார். குடிமக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக தொடங்கினர். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள யுயுட்சு விரும்பியபோது மக்கள் அவர்களை துரோகி என்று விரட்டினர். கிருஷ்ணரின் மறைவிற்கு பின் பாண்டவர்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற முனைந்தனர். எனவே பரீக்ஷித்தை அரியணையில் அமர வைத்துவிட்டு யுயுட்சுவை அவருக்கு பாதுகாவலராக நியமித்து விட்டு அவர்கள் முக்தியை நோக்கி சென்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion