Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
திருமால் ஒரே ஒரு பெண் அவதாரம் மட்டும் ஏன் எடுத்தார்? அந்த சுவாரஸ்ய கதை தெரிஞ்சிக்கணுமா?
திருமாலின் ஒரே பெண் அவதாரமான மோகினி அவதாரம் எடுத்ததன் காரணம் என்ன என்பதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.
மோகினி என்ற சர்வ லட்சணமும் பேரழகும் கொண்ட பெண் அவதாரம் மகாபாரத்தில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

தேவர்கள் இறப்பில்லா தன்மையான சாவாமையை பெறும்படியாக பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தபோது, அசுரர்கள் அமுத கலசத்தை பறித்துக் கொண்டனர். அமுத கலசத்தை அசுரர்களிடமிருந்து மீட்டு தேவர்களுக்கு உதவும்படியாய் மகாவிஷ்ணுவாகிய திருமால், மோகினியாய் பெண் அவதாரம் எடுத்தார்.

பெயர் வந்தது எப்படி?
'மோகினி' என்பதற்கு மோகனத்தினால் பிறரை மயக்கக்கூடியவள் என்று பொருள். மயக்கும் மாயதோற்றம் அல்லது கவர்ந்திழுக்கக்கூடிய பெண்மை அழகின் சாராம்சம் என்ற பொருள் பொதித்த பெயரே மோகினி ஆகும். சமஸ்கிருத மொழியில் மோகினி என்பதற்கு வசீகரிப்பவள் என்பதே அர்த்தம்.

வரலாற்று பின்புலம்
தேவர்கள், மரணம் இல்லாத தன்மையை பெறுவதற்காக அமுதத்தை பெற விரும்புகின்றனர். அதற்காக பாற்கடலை கடைகின்றனர். அப்போது அசுரர்கள் அதை பறித்துக் கொள்கின்றனர். அசுரர்களை மயக்கி அமுத கலசத்தை அவர்களிடமிருந்து பெறும்படியாக திருமால் எடுத்த அழகிய பெண் அவதாரமே மோகினி. மகாபாரதத்தின் மூலப்படியில் இப்படி கூறப்பட்டிருந்தாலும் பிற்கால பதிப்புகளில் திருமாலின் மாய தோற்றமே மோகினி என்று கூறப்படுகிறது.
மோகினி கதையானது பரவலாக அறியப்பட்டதும் அது மீண்டும் மீண்டும் விரிவாக கூறவும் எழுதவும் பட்டது. பத்தாம் நூற்றாண்டில் பாகவத புராணத்தில் திருமாலாகிய விஷ்ணுவின் முறைப்படியான அவதாரமாக மோகினி விரிவாக கூறப்பட்டது.

சிவபெருமானும் மோகினியும்
மோகினி அவதாரத்தின் முக்கியமான கட்டம், சிவனுடன் இணைவதாகும். திருமால் அசுரர்களை மாயமான தமது மோகினி தோற்றத்தால் ஏமாற்றிய பிறகு சிவபெருமான் மோகினியை சந்திக்க விரும்பியதாக பாகவத புராணம் கூறுகிறது. தேவர்கள் அனைவரும் மோகினியின் அழகை வியந்து திருமாலின் பெருமையை பேசக்கேட்ட சிவன், தமது மனைவி பார்வதி தேவியுடன் திருமாலை சந்திக்கச் செல்கிறார். நாரத முனிவர், அசுரர்களை ஏமாற்றிய திருமாலின் மோகினி அவதாரத்தை பற்றி கூறியபோது சிவன் அவரை மணந்ததாக பிரமந்த புராணம் கூறுகிறது.
பார்வதி தேவியுடன் சென்ற சிவபெருமான் மீண்டும் மோகினி வடிவை எடுக்கும்படி திருமாலிடம் கூறுகிறார். திருமால் தியானம் செய்தபோது அவரது இடத்தில் வசீகரமான மோகினி தோன்றுகிறது.
மோகினியின் அழகில் மயங்கிய சிவன், மோகினியின் பின்னால் ஓடி அவளது கரங்களை பற்றி அணைத்துக் கொள்ள முயல்கிறார். ஆனால், மோகினி அவரிடமிருந்து தப்பிக்கிறாள். வலுக்கட்டாயமாக இணைய முயலும்போது சிவபெருமானின் இந்திரியம் தரையில் விழுகிறது. அதிலிருந்து ஐயப்பன் தோன்றுகிறார்.

சிவ விஷ்ணு புதல்வன்
பல்வேறு புராணங்களின்படி சிவனும் விஷ்ணுவும் கூடியதால் ஐயப்பன் பிறக்கிறார். மகாசாஸ்தா, சாஸ்தவா என்று பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். தர்ம சாஸ்தா வடிவான மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார். யோகாசன நிலையில் காணப்படும் மணிகண்டன், கழுத்தில் ஆபரணம் ஒன்றை அணிந்திருப்பார். மணியை அணிந்தவன் என்ற பொருளில் மணிகண்டன் என்று அவர் அறியப்படுகிறார்.

மோகினியின் தோற்றம்
பஸ்மாசுரனை மயக்குவதற்கான தோற்றமே மோகினியே தவிர பெண்ணாக மாற்றம் நிகழவில்லை என்று புட்டநாயக் போன்ற புராண வல்லுநர்கள் கருதுகிறார்கள். திருமாலின் சரீரத்திலிருந்து அழகான அப்சரஸாக மோகினி மறுஅவதாரம் கொள்கிறாள். சிவன் மற்றும் மோகினியின் கூடலை மேலைநாட்டினர் ஓரினச்சேர்க்கையாக வியாக்கியானம் செய்கின்றனர்.
ஆனால் பாரம்பரிய இந்துகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. மோகினி அவதாரத்துடன்தான் சிவனின் சேர்க்கை நிகழ்ந்ததால் அதை திருமாலுடன் நடந்த சேர்க்கையாக கருத இயலாது. மோகினிக்கு தனித்த வாழ்க்கை கிடையாது. அவதார நோக்கம் நிறைவேறியதும் விஷ்ணுவாக மாற்றம் நடந்து விடும்.

மோகினி ஆலயங்கள்
ஆந்திர பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாநிலம் ரயாலியில் ஜகன் மோகினி கேசவ சுவாமி ஆலயம் உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நேவசாவில் மகாசாலை ஒன்று உள்ளது. குருவாயூர் அருகே மோகினிக்காக பெயரிடப்பட்ட பழமையான ஹரிகன்யவா ஆலயம் உள்ளது.
இதேபோன்று மோகினி தேவியை பல்வேறு ஆலயங்களில் பூஜித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications