Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...
ஆண், பெண் இருவரும் எல்லா செல்வங்களையும் பெற சொல்ல வேண்டிய சௌந்தர்ய மந்திரத்தை உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறோம். அப்படி ஆணும் பெண்ணும் இருவரும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில
'மந்திரம்' என்பதற்கு மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஓர் ஒலி, வார்த்தை அல்லது இணைந்த வார்த்தைகள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மந்திரங்கள் காலங்காலமாக வேண்டுதல்களும் இறைவனுக்குள் நிலைகொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"ஓம்" என்னும் மந்திரம், எல்லாவற்றையும் முன்முடிவுகள் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதற்காக பாரம்பரியமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. "லோஹ ஸ்ஹஸ்தா ஸ்குஹ்ஹினோ ப்பாவந்த்து" என்பது அனைத்து உயிர்களுக்கும் சமாதானம் வேண்டி சொல்லப்படும் மந்திரம்.

மந்திரம்
'மந்திரம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'சிந்தனையின் கருவி' என்று பொருள். 'மந்திரம்'என்ற சமஸ்கிருத சொல்லின் வேர்ச்சொல் 'மந்த்' என்பதாகும். இதற்கு 'சிந்தனைக்கு' என்று அல்லது 'மனம்' என்று அர்த்தம் கொள்ளலாம். 'திரா' என்ற பின்னொட்டுச் சொல்லுக்கு 'கருவி' என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்பது 'சிந்தனையின் கருவி' என்பதாகிறது.
ஆகவே, மந்திரங்களை உச்சரிப்பதால் நம் சிந்தனை மற்றும் மனதின் நிலைப்பாடு மட்டும் மாற்றம் பெறுவதோடு நின்றுவிடுவதில்லை. நம்முடைய தோற்றமே மாற்றத்திற்குள்ளாகிறது. அதுவும் அழகு மற்றும் தேஜஸ் என்பதற்கான சௌந்தர்ய மந்திரத்தை உச்சரிக்கும்போது நாம் அழகான தோற்றத்தை பெறுகிறோம்.

சௌந்தர்ய மந்திரம்
ஓம் சௌந்தர்யே சௌந்தர்ய பிரதேயா சிட்டிம் தேஹி நமஹ
'சௌந்தர்யம்' அல்லது 'அழகு' என்ற சொல் மிகவும் சிறியதாயினும் அதிக வல்லமை பொருந்தியதாகும். எல்லாவற்றுக்கும் அடித்தளமானதும், இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியின் இயக்கத்திற்கு பொறுப்பானதும், வசீகரத்தை தருவதும், அதன் ஒரு பகுதியை உருவாக்குவதும், பொருள்களில் வித்தியாசத்திற்கு காரணமானதும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கான வழியுமே 'சௌந்தர்யம்' ஆகும்.
பழங்காலத்திலிருந்தே பல கலைகள் உருவாவதற்கு அழகே உந்துசக்தியாக இருந்துள்ளது. இன்று அழகென்ற வார்த்தையை நாம் புரிந்துகொள்வது போன்ற அர்த்தத்தில், நோக்கில் அது அன்றைக்கு புரிந்துகொள்ளப்படவில்லை. எந்தத் துறையாயினும் அதில் நன்மைக்கேதுவான தகுதியாக, தேஜஸ் கொண்ட ஆளுமையை சுட்டுவதாக அது அமைந்திருந்தது.

ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி
சௌந்தர்ய லஹரியை அருளிய ஆதி சங்கரர், சௌந்தர்யம் என்பது தோற்றப் பொலிவை மட்டும் குறிப்பதல்ல. இயற்கையின் உதவியுடன் உள்ளும் புறமும் மேம்பாடடைந்து நீ ஒப்பற்றவனாக, தெய்வத்தோடு இணையும் நிலைக்கு உன்னை வழிநடத்துவது என்று கூறியுள்ளார்.
இது பல படிகளை கொண்ட ஒரு நீண்ட வழிமுறையாகும். ஆன்மீக நோக்கு கொண்டதாயினும் இதன் லௌகீக பக்கத்தையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. அழகிய தோற்றம் கொண்ட ஒருவரை பார்ப்பது அனைவருக்குமே நல்லதொரு உணர்வை கொடுக்கும். தோற்றப்பொலிவு நமக்கு ஓர் அடையாளத்தையும் தருகிறது.

சௌந்தர்ய மந்திர உச்சாடனம்
பொலிவான தோற்றம் பெறவும், வசீகரம் பெறவும், சரும பளபளப்புக்கும், அழகுக்கும், கவர்ந்திழுக்கும் தன்மை பெறவும் ஒருவர் சௌந்தர்ய லஹரியை உச்சரிக்கலாம். இம்மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக சாதனம் செய்வதன் மூலமாக சருமம் பளபளப்பாவதுடன், முகத்தில் வசீகரம் உண்டாகும்.
சருமத்தில் இருக்கும் தேவையில்லாத வடுக்கள், பரு போன்ற சரும பிரச்னைகளை தீர்க்கக்கூடிய இம்மந்திரத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உச்சாடனம் செய்து அழகிய தோற்றத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications