For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் அதிகம் இருக்குமாம். இவர்களுக்கு தூக்கம் அதிக புத்துணர்ச்சியை வழங்குவதாக இருக்கும்.

|

நமது ஆரோக்கியத்திற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் பகல் நேர தூக்கம் அப்படியல்ல. சிலருக்கு பகல் நேர தூக்கம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சிலருக்கோ அது முக்கியமானதாக இருக்காது.

பகல் நேர தூக்கம் பலருக்கும் புத்துணர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

Sleepiest Zodiac Signs Who Take A Lot Of Naps

சிலர் காரணமே இல்லாமல் பகலில் தூங்கிவழிவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் அதிகம் இருக்குமாம். இவர்களுக்கு தூக்கம் அதிக புத்துணர்ச்சியை வழங்குவதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் சிறிது நேர ஓய்விற்காக காத்திருப்பவர்கள். வேலைக்கு இடையே சிறிது நேர ஓய்வெடுப்பது இவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரக்கூடியது. மதிய நேர தூக்கம் என்பது இவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும், மேலும் இவர்களின் சிந்திக்கும் திறனை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும். இந்த மதிய நேர தூக்கம் இவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஒன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இவர்களுக்கு மதிய நேர தூக்கம் தேவைப்படும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அதிக பயணங்கள் செய்பவர்களாக இருப்பினும், அவர்கள் விரைவான தூக்கத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். இந்த சிறிது நேர ஓய்வு அவர்களின் உள்கடிகாரத்தை சரியமைத்து கொள்ளவும், தங்களுடைய கால அட்டவணைகளை நிர்வகிக்கவும் இந்த சிறிது நேர தூக்கம் இவர்களுக்கு அவசியமாகும். இந்த சிறிய ஓய்வு அவர்களை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு எடுத்துச்செல்ல உதவும். பயணத்தின் போது இழந்த தூக்கத்தை சரிசெய்யவும், இரவு நேர தூக்கத்திற்கும் இந்த இடைத்தூக்கம் அவர்களுக்கு அவசியமாகும்.

MOST READ: கிருஷ்ணருக்கு முன்னால் பிறந்த அனைத்து குழந்தைகளும் பிறந்தவுடனேயே கொல்லப்பட காரணம்

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமாக தூங்குபவர்கள் அதனால் இவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். இதனால்தான் அவர்களுக்கு மதிய தூக்கம் அவசியமாகிறது. சோகமாகவோ, மகிழ்ச்சியாகவோ, சலிப்பாகவோ எந்த மனநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு தூக்கம் தேவைப்படும். இது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இந்த மதிய தூக்கம் இவர்களுக்கு சுய பாதுகாப்பின் ஒரு பகுதியாகும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் இரவு நேரத்தில் விழித்திருப்பதற்காக பகல் நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். தூக்கத்தை தவிர இவர்களுக்கு ஆற்றலை வழங்கும் சிறந்த விஷயம் எதுவுமில்லை. பகல் நேர உறக்கத்திற்கு பிறகு இவர்கள் இருமடங்கு புத்துணர்ச்சியாக உணருவார்கள். வழக்கமாக தூங்கி எழுந்த பிறகு அனைவரும் சோர்வாக உணருவார்கள் ஆனால் இவர்கள் அதற்கு நேர்மறையானவர்கள்.

MOST READ: குழந்தைகளின் மீது தேங்காய் எண்ணெயை உபயோகிப்பது அவர்களுக்கு பாதுகாப்பானதா?

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தூக்கம் என்பது பராமரிப்பை வழங்குவதாகும். கடக ராசிக்காரர்கள் பெற்றோராக இருந்தால் அவர்களின் குழந்தை தூங்கும்போது தூங்குவார்கள், அதேசமயம் ஒரு நோயாளியை கவனித்து கொள்ள வேண்டுமெனில் நேரம் கிடைக்கும்போது மட்டுமே தூங்குவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கவலைகள் காரணமாக இரவில் தூக்கம் வராது. அதனாலேயே இவர்கள் பகல் நேரத்தில் ஓய்வெடுக்கிறார்கள். தூக்கம் இவர்களுக்கு புத்துணர்ச்சியையும், திருப்தியையும் வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleepiest Zodiac Signs Who Take A Lot Of Naps

People who born in these zodiac signs always feeling sleepy.
Story first published: Wednesday, July 10, 2019, 15:54 [IST]
Desktop Bottom Promotion