Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த கடவுள்களின் படங்களை வீட்டில் வைப்பது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்கும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் மாட்டும் ஓவியங்களும், படங்களும் உங்கள் குடும்பத்தில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
படங்களும், ஓவியங்களும் நமது வீட்டின் அழகிற்கு மட்டும் பயன்படுத்தபடுவதில்லை. அவை வாஸ்துரீதியாகவும் நமது வீட்டின் மீதும், நமது இல்லத்தின் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் மாட்டும் ஓவியங்களும், படங்களும் உங்கள் குடும்பத்தில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறை தாக்கமா அல்லது எதிர்மறை தாக்கமா என்பதை நீங்கள் மாட்டும் ஓவியங்களே நிர்ணயிக்கும். இந்த பதிவில் உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும் ஓவியங்கள் எதுவென்று பார்க்கலாம்.

ஜோடி பறவைகள்
தம்பதிகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சினை எழுந்தால் அவர்கள் அறையில் காதல் பறவைகளின் ஓவியத்தையோ அல்லது காதல் ஜோடிகளின் ஓவியத்தையோ மாட்டிவைக்கவும்.

மகிழ்ச்சியான இடம்
நதி ஓடுவது போலவோ அல்லது மீன்கள் நீந்துவது போலவோ இருக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டின் மகிழ்ச்சியான இடத்தில் மாட்டுவது உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். அது போன்ற ஓவியத்தை உங்கள் வீட்டின் முக்கிய பகுதியிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ மாட்டி வையுங்கள்.

காற்று வீசும் இடம்
உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடம் எப்பொழுதும் காற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் இடமாக இருக்கும். அந்த இடத்தில் பறவைகள் பறப்பது போலவோ நன்கு வளர்ந்த மரங்கள் அல்லது பூக்கள் நிறைந்த செடிகள் போன்றவற்றை உங்கள் வீட்டில் மாட்டி வையுங்கள். இது உங்களுக்கு பொருளாதாரரீதியாக தன்னிறைவை வழங்கும்.

கனவு ஓவியம்
உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அல்லது கனவு நிறைவேற உங்களின் ஆசையை உணர்த்தும் ஓவியத்தை உங்கள் வீட்டின் விரும்பும் திசையில் மாட்டி வைக்கவும். இது உங்களின் ஆசையை விரைவில் நிறைவேற்ற உதவும்.

கோபமான கடவுள்கள்
கோபமாக இருக்கும் ஆண் அல்லது பெண் கடவுளின் ஓவியங்களை உங்கள் வீட்டில் மாட்டுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வீட்டில் அனைவரிடமும் கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். அமைதியான கடவுள்களின் ஓவியத்தை மட்டும் வீட்டில் வைக்கவும்.

குழந்தைகள் அறை
குழந்தைகள் அறையில் எப்பொழுதும் ஓடும் குதிரை, அருவி மற்றும் மலைகள் போன்ற ஓவியங்களை மாட்டி வைக்கவும். இது அவர்களின் கவனிக்கும் திறனை அதிகரித்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவும்.

வீட்டின் நிறம்
உங்கள் வீட்டிற்கு எப்பொழுதும் மென்மையான வண்ணத்திலேயே பெயிண்ட் அடிக்கவும். இது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிலைகொள்ள செய்யும். பிரகாசமான அல்லது ருத்ரத்தை பிரதிபலிக்கும் நிறத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications
