Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
தெரியாமல் கூட இந்த விரலில் தங்க மோதிரம் அணிந்து விடாதீர்கள்... இல்லனா பிரச்சினைதான்...!
சரியான விரலில் மோதிரம் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் என இரண்டையுமே வழங்கும்.
மோதிரங்கள் அணிவது இன்றய தலைமுறையினரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஸ்டைல், பேஷன் என்பதையெல்லாம் தாண்டி அது ஒரு கௌரவத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது. தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்திலும் மோதிரங்கள் அணிய தொடங்கிவிட்டார்கள். ஆனால் உண்மையில் மோதிரம் அணிவது உங்களுக்கு கௌரவத்தை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும்.

உண்மைதான் சரியான விரலில் மோதிரம் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் என இரண்டையுமே வழங்கும். எப்படி மோதிரம் அணிய வேண்டுமென்பதை சரியாக தெரிந்து கொண்டு அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை விரட்டுவதோடு நீங்கள் நினைப்பதையும் அடையலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இந்த பதிவில் எப்படி மோதிரம் அணிய வேண்டும் மற்றும் எந்த விரலில் அணிவதால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

மோதிரத்தால் கிடைக்கும் நன்மைகள்
மோதிரம் அணிவதன் மூலம் உங்கள் உயிரியல்புகள் அதிகரிப்பதோடு உங்கள் உடலில் இருக்கும் ஆற்றலையும், சக்தியையும் அதிகரிக்கலாம் என்று விஞஞானிகள் கூறுகிறார்கள். உங்கள் கைகளில் இருக்கும் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் காலம் முதலே மோதிரம் அணியும் பழக்கம் இருந்து வந்தது. மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இடது கை அல்லது வலது கை
பெரும்பாலானவர்கள் தங்கள் இடது கையில் மோதிரம் அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக நிச்சயதார்த்த மோதிரத்தை இடது கையில் அணிவது அவர்களின் இதயத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். நமது வலது கை உடல் செயல்பாடுகளுடனும், இடது காய் மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மோதிரம் அணியும் கையானது மாறுபடும்.

கட்டை விரலில் மோதிரம்
கட்டை விரலில் மோதிரம் அணிவது உங்கள் உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், ஆற்றலை புதுப்பித்து கொள்ளவும் பயன்படும். ஒருவேளை நீங்கள் ஏதாவது நீண்ட நாள் நோயிலிருந்து விடுபட விரும்பினால் கற்கள் பதிக்காத வெள்ளி மோதிரத்தை கட்டை விரலில் அணிவது நல்லது. உங்கள் விரலின் உருவத்தை பாதிக்காத வடிவில் மோதிரத்தை அணிவது முக்கியமானது.

ஆள்காட்டி விரல்
பணியில் பதவி உயர்வு பெறவும் சிறப்பான எதிர்காலத்தையும் விரும்புபவர்கள் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாம். ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவது ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை அதிகரிக்கவும், சுயமரியாதை மற்றும் தன்னம்பிகையை அதிகரிக்கவும் செய்யும். வெற்றிகரமான எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ள தேவையான மனோபலமும், பொறுப்புணர்வும் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதன் மூலம் கிடைக்கும்.

நடுவிரல்
காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய சிறந்த துணையை தேடுபவர்கள் நடுவிரலில் மோதிரம் அணியலாம். தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம் அணிவது கூடுதல் சிறப்பு. நடுவிரலில் மோதிரம் அணிவது நீங்கள் விரும்புவர்களின் கவனத்தையும், காதலையும் பெற்றுத்தரும். இது ஒருவரை அதிக வசீகரமாக காட்டுவதுடன் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்கும்.

மோதிர விரல்
அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். அதேசமயம் அது தங்கத்தில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். செல்வத்திற்கும், பணப்புழக்கத்திற்கும் மோதிர விரல்தான் பொறுப்பாகும்.

சுண்டு விரல்
சுண்டு விரலில் மோதிரம் அணிவது ஒருவருடைய உள்ளுணர்வை அதிகரிக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றையும் அதிகரிக்கும். சுண்டு விரலில் மோதிரம் அணியும்போது தங்கம் அல்லது செம்பு மோதிரத்தை மட்டும் அணியவும். ஒருபோதும் தங்க மோதிரத்தை அணிந்து விடாதீர்கள். இது துரதிர்ஷ்டம் மற்றும் சில ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
