For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரியாமகூட இந்த இடங்களுக்கு காலணியுடன் போகாதீங்க! அப்புறம் துரதிர்ஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிரும்.

காலணிகள் அணிந்து கொண்டே படுக்கையறை செல்வது, வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதெல்லாம் சாதாரணமாகி விட்டது.

|

காலணிகள் அணிவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அதனை எங்கு அணிய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அதைவிட அவசியமானதாகும். ஏனெனில் நம் முன்னோர்கள் காலத்தில் வீடு வாசலை தாண்டி வீட்டிற்குள் காலணிகள் அணிந்து செல்வது என்பது முற்றிலும் தடைசெய்ப்பட்டதாக இருந்தது. ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறிவிட்டது.

Remove your shoes before entering these places

காலணிகள் அணிந்து கொண்டே படுக்கையறை செல்வது, வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதெல்லாம் சாதாரணமாகி விட்டது. நாம் காலணி அணிந்து உள்ளே செல்லாத ஒரே இடமாக கோவில்தான் இருக்கிறது. அதுவும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு என்று தெரியவில்லை. வீடு மட்டுமின்றி சில பொது இடங்களிலும் காலணி அணிந்து செல்வது உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த இடங்களுக்கு காலணி அணிந்து செல்வது உங்கள் வாழ்க்கையில் சோதனைகளை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாக்கர்

லாக்கர்

நமது வீட்டின் அனைத்து செல்வங்களுக்கும் காவலாக இருப்பது லட்சுமி தேவிதான். எனவே பணம் இருக்கும் இடமான லாக்கருக்கு செல்லும்போது நிச்சயமாக காலணி அணிந்து செல்லக்கூடாது. இது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும். இதனால் உங்கள் வாழ்வில் பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சமையலறை

சமையலறை

நாம் கண்டிப்பாக காலணி அணிந்து செல்லக்கூடாத மற்றொரு இடம் சமையலறை ஆகும். ஏனெனில் உணவு என்பது கடவுளின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. எனவே அந்த இடத்திற்கு நாம் நிச்சயம் மரியாதை கொடுக்க வேண்டும்.

உணவு கிடங்கு

உணவு கிடங்கு

நாம் உணவுப்பொருள்களை சேமித்து வைக்கும் இடத்திற்கு செல்லும் முன்னரும் காலணியை அகற்ற வேண்டியது அவசியமாகும். இது நமது உணவிற்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.

MOST READ: இந்த இன மக்கள் பிணங்களை எரிக்கவோ,புதைக்கவோ மாட்டார்கள் பறவைகளுக்கு உணவாக்கி விடுவார்கள் ஏன் தெரியுமா

கோவில்

கோவில்

காலணிகள் பெரும்பாலும் தோலால் செய்யப்படுபவை ஆகும் எனவே அதனை கோவிலுக்குள் அணிந்து செல்லக்கூடாது, அதுமட்டுமின்றி தூய்மையான இடமான கோவிலுக்குள் எந்த அசுத்த பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது.

புனித ஆறு

புனித ஆறு

புனித ஆறுகளில் காலை நனைக்கும் முன் காலணிகளை கழட்ட வேண்டியது அவசியமாகும். இது கடவுளை மதிப்பதாகும். புனித இடங்களில் ஏன் காலணிகளுடன் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

கடவுளின் வீடு

கடவுளின் வீடு

கடவுள் இருக்கும் இடமென நாம் நினைத்து செல்லும் இடங்களுக்குள் காலணி அணிந்து செல்லக்கூடாது ஏனெனில் அங்கு நாம் விலைமதிப்பற்ற சிலவற்றை பெறப்போகிறோம். அந்த இடங்களில் அசுத்தமான எதையும் கொண்டு செல்லக்கூடாது. மேலும் காலணிகள் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவ வாய்ப்புள்ளது.

MOST READ: இராமாயண போருக்கு காரணமாக இருந்த சூர்ப்பனகைக்கு இராவணனின் மரணத்திற்கு பின் என்ன ஆனது தெரியுமா?

தொடுதல்

தொடுதல்

நமது காலணியானது பல நேரங்களில் அசுத்தமான பொருட்கள் மீது பட வாய்ப்புள்ளது. அந்த சூழ்நிலையில் சுத்தமான அல்லது புனிதமான இடங்களுக்குள் செல்லும்போது நாம் நிச்சயம் நம் காலணிகளை அகற்ற வேண்டும்.

எதிர்மறை சக்திகளை விரட்ட

எதிர்மறை சக்திகளை விரட்ட

ஒரு புனிதமான இடத்திற்குள் நுழையும்போது நாம் அழைத்து செல்லும் அனைத்தையும் வெளியே விட்டுவிட வேண்டும், அதற்கு அடையாளமாக காலணிகளை கழட்ட வேண்டும். நமது காலணிகளை கழட்டும்போது அது நம்முடைய கர்வத்தையும், ஈகோவையும் அழித்து நம்மை ஒரு புதுமனிதனாக அழைத்துசெல்லும்.

தியானம்

தியானம்

தியானம் செய்யும்போது நாம் இந்த உலகின் அனைத்து பிடித்தங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். காலணி என்பது நமது அந்தஸ்தின் அடையாளமாக இருக்கிறது. எனவே காலணிகளை தியானத்தின் போது கழட்ட வேண்டியது அவசியம்.

அனைவரும் சமம்

அனைவரும் சமம்

ஒருவர் அணிந்திருக்கும் காலணியின் தரத்தை கொண்டு அவர்களை எடைபோடும் மோசமான பழக்கம் நம் அனைவர்க்கும் உள்ளது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கோவில்களுக்குள் செல்லும்போது காலணிகளை கழட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.

MOST READ: நுரையீரலில் இருக்க கூடிய சளியை வெளியேற்ற இதில் ஏதாவது ஒன்றையாவது தொடர்ந்து சாப்பிடுங்கள்!

வேதங்கள்

வேதங்கள்

வேதங்களின் படி ஒருவர் எப்பொழுதும் எந்த அறைக்குள்ளும் காலணிகளுடன் செல்லக்கூடாது, அதேபோல மற்றவர்கள் இல்லத்திற்கு செல்லும்போது காலணியுடன் நுழையக்கூடாது அவ்வாறு நுழைந்தால் அந்த நொடி முதல் உங்களை துரதிர்ஷ்டம் துரத்த ஆரம்பித்து விடும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: shoes vedas
English summary

Remove your shoes before entering these places

Wearing our footwear/shoes at these places could land us in trouble.
Story first published: Tuesday, March 12, 2019, 12:54 [IST]
Desktop Bottom Promotion