Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த ஒரு சாதாரண இரும்பு பொருளை வீட்டில் வைத்தால் உங்கள் வீடு தேடி அதிர்ஷ்டம் வருமாம் தெரியுமா?
உலகம் முழுவதும் பழங்காலம் தொடங்கி இன்றுவரை அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள்தான் குதிரைலாடம் ஆகும்.
பழங்காலம் முதலே உலகில் அனைவரும் அதிர்ஷ்டத்தை கொண்டு வர பல வழிகளில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக பலவிதமான சடங்குகள், பொருட்கள் என பலவற்றை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். அவ்வாறு உலகம் முழுவதும் பழங்காலம் தொடங்கி இன்றுவரை அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள்தான் குதிரைலாடம் ஆகும்.

இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவாக இருந்தாலும் உலகின் பல நாடுகளில் மக்கள் இதை பயன்படுத்துவதை பார்க்கலாம். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இன்றும் பெரும்பாலானோர் வீட்டின் கதவுகளில் குதிரைலாடம் இருப்பதை பார்க்கலாம். பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நம்பிக்கையில் உண்மை இருப்பதாகத்தான் பலரும் கூறுகிறார்கள். இந்த பதிவில் வீட்டில் குதிரைலாடம் வைத்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.

வாஸ்துவின் படி குதிரைலாடம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி குதிரைலாடம் ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் முக்கியமான பொருளாகும். வாஸ்துவின் படி வீட்டின் முன்கதவில் இதனை மாட்டி வைப்பது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மாட்டும் நிலை
இதனை வீட்டில் மாட்டும்போது எப்பொழுதும் மேல்நோக்கிய படியே மாட்டவேண்டும். அவ்வாறு மாட்டுவதுதான் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் மாறாக தலைகீழாக மாட்டும்போது அது துரதிஷ்டத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தும். அதேபோல பயன்படுத்திய குதிரைலாடத்தைத்தான் கதவில் மாட்டவேண்டும். இது செல்வத்தை ஈர்க்க நூற்றாண்டுகளை கடந்தும் செய்யப்படும் வழிமுறையாகும்.

கொல்லர்கள்
குதிரைலாடம் அதிர்ஷ்டமான பொருளாக கருதப்பட முக்கிய காரணம் அதனை செய்யும் கொல்லர்கள் ஆவார்கள். அவர்கள் லாடம் செய்ய பயன்படுத்தும் நெருப்பும், மந்திர இரும்பும் சில சிறப்பு சக்திகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

திருமணவாழ்க்கை
மேற்கத்திய நாடுகளில் கொல்லர்கள் நோய்களை குணப்படுத்த கூடியவர்கள் என்று நம்பப்படுகிறார்கள். கொல்லர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமாம்.

எப்படி பயன்படுத்துவுது?
குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் வீட்டில் எங்கு தானியங்களை சேர்த்து வைக்கிறீர்களோ அங்கு வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வீட்டில் தானிய பஞ்சமோ அல்லது உணவு பஞ்சமோ ஏற்படாது என்று நம்பப்படுகிறது. இதனை சனிக்கிழமைகளில் செய்யுங்கள்.

பணவரவு
குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் பணம் வைக்கும் லாக்கரில் வைத்துவிடுங்கள். இது உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதனை சனிக்கிழமையில் செய்யுங்கள்.

பாதுகாப்பு
குதிரைலாடத்தில் இருந்து செய்யப்பட்ட மோதிரத்தை உங்கள் வலது கையின் நடுவிரலில் போட்டுக்கொள்ளுங்கள். இது உங்களை அனைத்து விதமான தீயசக்திகளிடம் இருந்தும், சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்தும் பாதுகாக்கும்.

வீட்டு பாதுகாப்பு
ஆற்றலூட்டப்பட்ட அதிர்ஷ்ட குதிரைலாடத்தை உங்கள் வீட்டின் முன்கதவில் U வடிவில் தொங்கவிட்டால் அது உங்கள் வீட்டை சூனியம், கண்திருஷ்டி மற்றும் செய்வினை போன்ற தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும்.

தூக்கி எறியவும்
இது மிகவும் பழமையான ஒரு நம்பிக்கையாகும். கீழே இருந்து ஒரு குதிரைலாடத்தையோ அல்லது இரும்பு துண்டையோ எடுத்தால் அதில் எச்சில் துப்பி இடது தோள் புறமாக அதனை தூக்கி எரித்துவிட்டு நீங்கள் ஆசைப்படுவதை வேண்டினால் நீங்கள் வேண்டியது விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.

நம்பிக்கைகள்
இது பிறைவடிவ நிலவு போல இருப்பதாகவும் இதில் மந்திர சக்தி இருப்பதாகவும் பண்டைய எகிப்து மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில கலாச்சாரங்களில் இது சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதையென நம்பிக்கை இருந்தது. இது மனிதர்களின் பணம் மற்றும் ஆன்மீக தேடல் இரண்டையும் பூர்த்தி செய்வதாக மக்கள் நம்பினர்.

புத்தாண்டு
புத்தாண்டில் அதிர்ஷ்டம் இருக்க அன்று தூங்கும்போது தலையணைக்கு அடியில் லாடத்தை வைத்து தூங்குவார்களாம். இந்த நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. அதேபோல லாடம் மாட்டப்பட்ட கதவு வழியாக உங்கள் வீட்டுக்குள் விருந்தாளிகள் வந்தால் அவர்கள் அதேவழியிலேயே வெளியேற வேண்டும். இல்லையெனில் உங்கள் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்றுவிடுமாம்.



Click it and Unblock the Notifications