Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...!
ஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும்.
மக்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான கடவுள்கள் என்றால் அது ஆஞ்சநேயரும், விநாயகரும்தான். சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயரை தினமும் வழிபடுவது உங்கள் வாழையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தை கொடுக்கும். பெரும்பாலும் ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சிலையைத்தான் நாம் வணங்குகிறோம்.

ஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆஞ்சநேய வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீதாராம வழிபாடு
இந்த உருவத்தை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆஞ்சநேயர் இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் உருவம் மிகவும் புகழ்பெற்றதாகும். வீட்டில் இந்த உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துரதிர்ஷ்டத்தையும் விரட்டும்.

வெள்ளை பின்புறம்
பின்புறம் வெள்ளையாக இருக்கும் ஆஞ்சநேயர் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பவராக இருக்கிறார். நல்ல வேலை, பதவி உயர்வு, அதிக சம்பளம் வேண்டுபவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபடலாம். இந்த உருவத்தில் ஆஞ்சநேயர் ஆடைகள் கூட அணிந்திருப்பார்.

இராம வழிபாடு
ஆஞ்சநேயர் இராமரின் மீது அளவற்ற பக்தி கொண்டவர் என நாம் நன்கு அறிவோம். அதன்படி ஆஞ்சநேயர் இராமரை பக்தியோடு வழிபடும் உருவத்தை வீட்டில் வைத்து நாம் வழிபடுவது நம் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்கும்.

மகாபலி அனுமன்
ஆஞ்சநேயரின் உடல்வலிமை என்னவென்பதை நாம் நன்கு அறிவோம். சஞ்சீவி மலையையே தூக்கும் மஹாசக்திசாலியாக ஆஞ்சநேயர் இருக்கிறார். எனவே ஆஞ்சநேயர் தன் உடல்வலிமையை காட்டும் உருவத்தை வழிபடுவது உங்களுக்கு உடல்வலிமை மற்றும் மனவலிமை இரண்டையுமே வழங்கும்.

சூரிய வழிபாடு
அனுமன் சூரிய பகவானின் சீடர் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாகும். அதன்படி ஆஞ்சநேயர் சூரியனை வழிபடுவது போன்ற உருவத்தை வைத்து வழிபடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் படிப்பாற்றலையும் அதிகரிக்கும்.

திசை
ஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்வது போன்ற உருவத்தை வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்று புராணங்கள் கூறுகறது. அதேபோல் தெற்கு திசையில் இருக்கும் அனுமனை வழிபடுவது மரணம் பற்றிய உங்களின் பயத்தை போக்கும்.

கிழமை
ஆஞ்சநேயரை அனைத்து நாட்களிலும் வழிபடலாம் ஆனால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபடுவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கிழமைகளில் வழிபடும் போது உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார்.

பயத்தை போக்குவது
அனுமன் பயம் என்பதே அறியாதவர் என்று நாம் நன்கு அறிவோம். எனவே பயம் மற்றும் பதட்டம் ஏற்படும் நேரங்களில் அனுமனின் நாமத்தை கூறுவது உங்களுக்குள் இருக்கும் பயத்தை விரட்டியடிக்கும்.

எள்
எள் என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த பொருளாகும். எனவே சனிக்கிழமையன்று நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது எள்ளை கலந்து சேர்த்து குளிக்கவும். அதேபோல கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடவும். இது உங்கள் வேண்டுதல்களின் நிறைவேறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

படுக்கையறை
அனுமான் ஒரு பிரம்மச்சாரி கடவுள் ஆவார். எனவே அவரை படுக்கையறையில் வைத்து வழிபடுதல் கூடாது. அவ்வாறு வைத்து வழிபடுவது குடும்பத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே ஆஞ்சநேயரை எப்பொழுதும் பூஜையறையில் வைத்து மட்டுமே வழிபட வேண்டும்.



Click it and Unblock the Notifications