For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிக்கிழமையில் இந்த பொருட்களை சாப்பிடுவது சனிபகவானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும் தெரியுமா

நீங்கள் செய்யும் சில செயல்கள் சனிபகவானுக்கு உங்கள் மீதான கோபத்தை அதிகரிக்கும். அந்த வகையில் சனிக்கிழமைகளில் நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவது சனிபகவானுக்கு உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தும்.

|

சனிபகவானின் கோபத்தை பற்றி நாம் நன்கு அறிவோம். நம்முடைய பாவங்களுக்கு இறந்த பிறகு தண்டனை கொடுப்பது எமதர்மன் என்றால் வாழும்போதே தண்டனை கொடுப்பது சனிபகவன்தான். இவர் இந்த வேலையை ஈசனின் ஆணையின் பேரிலேயே செய்கிறார். சனிபகவான் உங்களை சோதிக்கிறார் என்றால் நிச்சயமாக நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஏனெனில் சனிபகவான் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்.

Never Eat These Things On A Saturday

சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது ஆனால் அதனை குறைக்க இயலும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள், வழிபடும் பொருட்கள், உஙக்ளின் ஒழுக்கமான வாழ்க்கைமுறை போன்றவை உங்களை சனிபகவானின் சோதனனிகளில் இருந்து ஓரளவிற்கு பாதுகாக்கும். அதேசமயம் நீங்கள் செய்யும் சில செயல்கள் சனிபகவானுக்கு உங்கள் மீதான கோபத்தை அதிகரிக்கும். அந்த வகையில் சனிக்கிழமைகளில் நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவது சனிபகவானுக்கு உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் சனிக்கிழமைகளில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

உணவை முழுமையாக்குவது எதுவெனில் அது நிச்சயம் ஊறுகாய்தான். அதிலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தது எனில் அது மாங்காய் ஊறுகாய்தான். ஆனால் சனிக்கிழமைகளில் மாங்காய் ஊறுகாய் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சனிக்கிழமையில் இதனை சாப்பிடுவது சனிபகவானை அவமதிப்பது போன்றதாகும், இதனால் பணஇழப்பு ஏற்படலாம்.

பால்

பால்

இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை அதுதான். ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமையில் பால் சாப்பிடக்கூடாது. இது ஆரோக்கியமானதாக இருக்கலாம் ஆனால் அதிர்ஷ்டமானதாக இருக்காது. அப்படி குடிக்க நேர்ந்தாலும் அதற்க்கு பின் வெல்லத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லயெனில் உங்களுக்கு வந்து சேரவேண்டிய நல்ல செய்திகள் அனைத்தும் தாமதப்படும்.

 சிவப்பு பருப்பு

சிவப்பு பருப்பு

சனிபகவானை வழிபட வேண்டுமென்றால் சனிக்கிழமையில் சிவப்பு பருப்பு சாப்பிடுவதை தவிருங்கள். சனிக்கிழமையில் இதனை சாப்பிடுவது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் சனிபகவானின் கோபம் மிகவும் அதிகரிக்கும். இது பொருளாதாரரீதியாக உங்கள் குடும்பத்திற்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். மேலும் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

MOST READ: பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு பொருளென்றால் அது சிவப்பு மிளகாய்தான். ஆனால் உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் பொருளும் இதுதான். சனிக்கிழமைகளில் சிவப்பு மிளகாய் சாப்பிடுபவர்கள் சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது.

மது

மது

பொதுவாகவே மது அருந்துபவர்களை சனிபகவான் விரும்பமாட்டார். அதிலும் சனிக்கிழமையில் மது அருந்துவது சனிபகவானை மிகவும் கோபப்படுத்தும் செயலாகும். அதுவும் உங்களுக்கு சனிதிசை நடக்கும்போது இவ்வாறு செய்வது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும். இந்த பழக்கத்தால் உங்களுக்கு விபத்துகள் ஏற்படலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

சனிக்கிழமையில் கடுகு எண்ணெயை உணவில் பயன்படுத்தக்கூடாது, அதற்கு பதிலாக வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சனிபகவானுக்கு மிகவும் பிடித்த வழிபாட்டு பொருட்களில் ஒன்றாகும், எனவே அதனை அவரை வழிபடவே பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயில் விளக்கேற்றி சனிபகவானை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.

MOST READ: இராவணனின் மரணத்திற்கு பிறகு இராமர் எப்படி அயோத்தியின் மன்னரானார் தெரியுமா?

கருப்பு எள்

கருப்பு எள்

சனிபகவானுக்கு மிகவும் பிடித்த வழிபாட்டு பொருட்களில் முக்கியமான ஒரு பொருள் கருப்பு எள் ஆகும். சனிக்கிழமையில் கருப்பு எள் வைத்து சனிபகவானை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். ஆனால் அதனை சாப்பிடுவது கண்டிப்பாக சனிபகவானின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும். இதை சனிக்கிழமையில் சாப்பிடுவது அவரை அவமதிப்பதற்கு சமமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: shani pooja alcohol சனி
English summary

Never Eat These Things On A Saturday

Eat these things on Saturday will get you the wrath of Lord Shani Dev.
Story first published: Saturday, May 4, 2019, 12:56 [IST]
Desktop Bottom Promotion